Published : Dec 30, 2022, 01:24 PM ISTUpdated : Dec 30, 2022, 01:30 PM IST
தலைவலியால் உடல், மன நிலையை பெரிதும் பாதிக்கிறது. இதே தலைவலி உயிருக்கு ஆபத்தான நிலைமைகளுக்கு கூட வழிவகுக்கும். ஆயினும் சில இயற்கை குறிப்புகள் மூலம் இதனை விரைவில் குறைக்கலாம்.
தலைவலி சிறிய பிரச்சனையாகத் தோன்றினாலும், பல பெரிய பிரச்சனைகளின் அடிநாதமாக அதுதான் இருக்கிறது. ஓய்வில்லாத வேலை தலை சாய்க்க கூட நேரமில்லை என வாழ்பவர்களுக்கு தலைவலி அவ்வளவு சீக்கிரம் குறையாது. சிலருக்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரமும், சிலருக்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட தாங்க முடியாத வலியும் ஏற்படும். தலைவலிக்கு பல காரணங்கள் உள்ளன.
27
Image: Getty Images
சிலருக்கு மருந்துகளை அதிகமாக பயன்படுத்துவதால் ஏற்படலாம். சில தொற்றுநோய்களும் தலைவலியை ஏற்படுத்தும். பருமனானவர்கள், புகைபிடிப்பவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுவர்கள், காஃபின் அதிகம் உட்கொள்பவர்கள் தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர். தலைவலியை குறைக்க சிலர் காபி அருந்துகின்றனர். ஆனால் அதில் உள்ள காபின் தான் தலைவலிக்கு காரணமாகவும் அமைகிறது. இரண்டு முறைக்கு மேல் காபி அருந்தாதீர்கள்.
37
நிறைய தண்ணீர் குடியுங்கள்
தலைவலியிலிருந்து நம்மை தாக்காத்துக்கொள்ள நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். நமது உடலில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்படும் போது தலைவலி ஏற்படலாம். நீரிழப்பு மனிதர்களின் உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். எங்கு சென்றாலும் கூடவே தண்ணீர் பாட்டிலையும் வைத்து கொள்ளுங்கள். நம்மை புத்துணர்வாக உணர செய்ய தண்ணீர் அருந்துவதும் அவசியம். நீரேற்றத்துடன் இருந்தால் தலைவலியும் ஏற்படாது.
இதையும் படிங்க; குழந்தை ஊனமாக பிறக்குமா? குங்குமப்பூவுக்குள் ஒளிந்திருக்கும் பூகம்பம்!
47
மெக்னீசியம் தேவை!
மெக்னீசியம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. அத்துடன் பல உடல்நல பிரச்சனைகளையும் குறைக்கிறது. நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின், நேஷனல் சென்டர் ஃபார் பயோடெக்னாலஜி ஆஃப் இன்ஃபர்மேஷன் அளித்த தரவுகளின்படி, நம் உடலில் மெக்னீசியம் குறைவாக இருந்தால், ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. வாழைப்பழம், ஆப்பிள், அத்திப்பழம், வெண்டைக்காய், பசலைக்கீரை, முருங்கைக்கீரை, நிலக்கடலை, எள், தானியங்கள் உள்ளிட்ட மெக்னீசியம் கிடைக்கும் உணவு பொருள்களை சாப்பிடலாம்.
57
Image: Getty Images
உடற்பயிற்சி
போதிய உடற்பயிற்சி இல்லாதது உடலில் மட்டுமல்ல, மனதிலும் அழுத்தத்தை உண்டாக்கலாம். 2018ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு மிதமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது தலைவலியிலிருந்து பதின்பருவத்தினர் நிவாரணம் பெறுவதாக உறுதிசெய்துள்ளது. அன்றாட வாழ்வில் குறைந்தது 30 நிமிடங்கள் நடைபயிற்சி, மிதிவண்டியை ஓட்டுதல் ஆகியவை மேற்கொள்ளும்போது தலைவலியை போக்க முடியும்.
மூலிகைகளால் தயார் செய்த டி யை அருந்தும்போது தலைவலியிலிருந்து விடுதலை கிடைக்கிறது 2013 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இஞ்சி டீ அருந்தும்போது ஒற்றை தலைவலி இருந்து நிவாரணம் கிடைப்பதாக தெரியவந்துள்ளது.
மதுவினால் கேடு
மது அருந்துவதால் நம் உடலில் உள்ள ரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இதனால் உடலில் ரத்தம் அதிக அளவில் பாயும். மூளை இதனால் பதற்றமடைகிறது. இந்த அழுத்தங்களால் தலைவலி உண்டாகும். எனவே மது அருந்துவதை தவிருங்கள்.
77
நல்ல தூக்கம்
தேசிய மருந்துகளுக்கான உயிரி தொழில்நுட்ப மையத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, சரியான தூக்கமின்மை கடுமையான தலைவலியை ஏற்படுத்தும். அதனால் தலைவலி குறைய நிம்மதியாக தூங்க வேண்டும். குறைந்தது 6 மணி நேரம் தூக்கம் அவசியம். சரியான ஓய்வு, உடற்பயிற்சி, சத்தான உணவு, மூச்சுப்பயிற்சி தலைவலியில் இருந்து விடுதலை பெற உதவும். உங்களுக்கு தொடர்ச்சியாக தலைவலி இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.