தினந்தோறும் முட்டை சாப்பிடுவது நல்லதா? கெட்டதா? ஆய்வுகள் சொல்வது என்ன?

First Published | Dec 30, 2022, 11:16 AM IST

தினந்தோறும் முட்டையை சாப்பிடுவது நல்லதா அல்லது கெட்டதா? என்பது பலருக்கும் சந்தேகமாகவே உள்ளது. அதற்கான விடையை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நம்மில் பலருக்கும் மிகப் பிடித்த உணவாக முட்டை உள்ளது. உணவில் முட்டை, ஆம்லெட் மற்றும் முட்டைத் தொக்கு போன்றவை இல்லாமல் பலருக்கும் சாப்பிடவே பிடிக்காது. அந்த அளவிற்கு உணவில் குறிப்பிடத் தகுந்த இடத்தை முட்டை பிடித்துள்ளது. முட்டை சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் தினந்தோறும் முட்டையை சாப்பிடுவது நல்லதா அல்லது கெட்டதா? என்பது பலருக்கும் சந்தேகமாகவே உள்ளது. அதற்கான விடையை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
 

இதய நோயைத் தடுக்கும் முட்டை

தினந்தோறும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலில் எந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். தினந்தோறும் சராசரியாக முட்டை சாப்பிட்டு வருபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைந்துள்ளது என ஆய்வு முடிவுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. முட்டையைத் தனியாக நாம் சாப்பிடும் போது, உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. இது உடலில் ஹெச்டிஎல் என்ற அமிலச் சுரப்பை அதிகரித்து, கொழுப்பைக் கரைத்து விடுகிறது. மேலும், முட்டை சாப்பிடுதன் மூலம் பசியைக் குறைக்க முடியும். இதில் கலோரி குறைவு என்பதால், உடல் எடை அதிகரிக்க வாய்ப்பில்லை. ஆகவே, முடிந்தவரையில் மற்ற உணவுகளுடன் முட்டையை சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்து விடுவது நல்லது.

Latest Videos


தினசரி ஒரு முட்டை

பெரியவர்கள் தினந்தோறும் 2 முதல் 3 முட்டைகள் வரை தாராளமாக சாப்பிடலாம். குழந்தைகளுக்கும் தினசரி 1 முட்டை கொடுத்து வரலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதன்படி, முட்டையை நாம் தினந்தோறும் சாப்பிடலாம். ஆனால், தனித்து சாப்பிடுவது தான் மிகவும் சிறந்தது. இதனை அனைவரும் பின்பற்றினால், தொடர்ச்சியாக நமக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

முட்டையில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், இதய நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், உடல் உள்ளுறுப்புகளில் வீக்கம் ஏற்படுவதையும் தடுக்க உதவுகிறது.
 

Cervical cancer: பெண்களே உஷார்: இந்த 6 அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையா இருங்கள்!

egg

முட்டையில் உள்ள மஞ்சள் கருவில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எல்டிஎல் கொழுப்பு இருப்பதாக பரவலாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையைச் சொல்வதென்றால், இது உடலுக்கு நன்மை பயக்கும் ஒரு கொழுப்பு ஆகும். உடலுக்கு நன்மை அளிக்கும் ஹெச்டிஎல் கொழுப்பு முட்டையில் இருப்பதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

click me!