குழந்தை ஊனமாக பிறக்குமா? குங்குமப்பூவுக்குள் ஒளிந்திருக்கும் பூகம்பம்!

First Published | Dec 30, 2022, 11:46 AM IST

கர்ப்ப காலத்தில் குங்கப்பூ எடுத்துக் கொள்வதால் குழந்தை அழகாக பிறக்கும் என நம்பப்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் இயற்கை முறையில் இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளவும்படுகிறது. 

இந்தியாவை பொருத்தவரை கர்ப்பிணிகள் கிரகணத்தின் போது வீட்டை விட்டு வெளியே வராமல் அறையில் இருக்க வேண்டும். அதிகமாக படிக்கட்டுகளில் ஏறக்கூடாது. இதெல்லாம் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க எடுக்கக் கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். குழந்தை அழகாகப் பிறக்க குங்குமப்பூவை பாலில் கலந்து குடிக்க அறிவுறுத்தப்படுகிறது.  ஒரு நாளுக்கு குங்குமப்பூவை 1.5 கி மட்டும் எடுத்துக் கொண்டால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதற்கு மேல் எடுத்துகொள்ளும்போது பக்கவிளைவுகள் உண்டாகுகின்றன. சுமார் 5 கி எடுத்து கொள்வது தீங்கு தரக்கூடிய நடவடிக்கையாகும். 

கருவையே பாதிக்கும் குங்குமப்பூ!

அளவுக்கு மீறினால் அமிர்ந்தமும் நஞ்சு என்பார்கள். அந்த மாதிரி தான் குங்குமப்பூவும் அளவுக்கு மீறினால் ஆபத்து. கர்ப்ப காலத்தில் குங்குமப்பூவை அதிகம் சாப்பிடுவதால் கருவில் இருக்கும் குழந்தைக்கு உடல் ஊனம் ஏற்பட வாய்ப்புள்ளது. எலும்புரீதியான குறைபாடுகள் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாம்.  

Tap to resize

false pragnancy

குறைபிரசவம்! 

குங்குமப்பூவை சுமார் 1.5கி அளவை விட அதிகமாக உட்கொள்வது குறை பிரசவத்திற்கு அல்லது கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். இது தொடர்பாக விலங்குகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், குங்குமப்பூவை அதிகமாக உட்கொள்வதால் உடலில் வெப்பம் அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.  அதனால்தான் கர்ப்பிணிகள் மருத்துவர் பரிந்துரைத்த அளவின்படி மட்டுமே உட்கொள்ள வேண்டும். 

கரு கலையும் அபாயம்! 

ஒரு ஆராய்ச்சியின் படி, குங்குமப்பூ கருப்பை வாயைத் திறக்கும் என தெரியவந்துள்ளது. இது வயிற்றில் இருக்கும் குழந்தையை வெளியே வர தூண்டுமாம். குங்குமப்பூவை உட்கொள்வது குறைப்பிரசவத்தைத் தூண்டும் என எலிகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. ஆரம்ப காலத்திலே குங்குமப்பூவை உண்பதால்  கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. கர்ப்பத்தின் கடைசி நாட்களில் குங்குமப்பூவை உட்கொள்வது சரியானது. ஆனால் குங்குமப்பூவை ஆரம்பத்தில் சாப்பிடக்கூடாது. 

கர்ப்ப காலத்தில் குங்குமப்பூவை தவிர்க்க வேண்டுமா?

கர்ப்பிணிகள் குங்குமப்பூ சாப்பிடக்கூடாது என மருத்துவ ஆய்வுகள் கூறவில்லை. ஆனால் முதல் மூன்று மாதங்களுக்குப் பிறகு, குங்குமப்பூவை உட்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறது. ஒரு நாளில் 0.5 முதல் 2 கிராம் வரை குங்குமப்பூவை எடுத்துக் கொள்ளலாம்.  குங்குமப்பூவை குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது கருப்பையில் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுவருகிறது. 

குங்குமப்பூவை எப்போது எடுத்து கொள்ள வேண்டும்? 

குங்குமப்பூவை 5 மாதத்தில் இருந்து உண்ணலாம். அப்போதுதான் குழந்தை வயிற்றில் இருந்து நகரத் தொடங்குகிறது. அதன் பிறகு கருச்சிதைவு ஏற்படும் அபாயம் குறைவு. கர்ப்பத்தின் கடைசி மாதத்தில் கூட இதை சாப்பிடுவது நன்மை பயக்கும். இது பிரசவத்திற்கு உதவுகிறது. 

இதையும் படிங்க; ஒரே வாரத்தில் கொரியப் பெண்களை போல முகம் பொலிவு பெறும்... சிம்பிள் டிப்ஸ்! 

Latest Videos

click me!