New year 2023: செக்ஸ் முதல் ஸ்லீப் வரை.. புத்தாண்டில் ஹேப்பி ஹார்மோன்களை தூண்டும் வழிகள்!

First Published Dec 30, 2022, 5:47 PM IST

ஹேப்பி ஹார்மோன்கள் சுரப்பு குறைவாக இருக்கும்போது தான் மன அழுத்தம், சோர்வு ஆகியவை அதிகரிக்கிறது. மகிழ்ச்சியாக இருப்பதற்கு அவற்றின் சுரப்பு அவசியம். 

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தான் மனிதன் அரும்பாடுபடுகிறான். கடினமான வேலையாக இருந்தாலும் ஓயாமல் உழைப்பது மகிழ்ச்சியாக இருக்கத்தான். பிறரின் பாராட்டில் தொடங்கி தன்னைத்தானே அன்பு செய்வது வரை எல்லாமே மகிழ்ச்சியாக வாழ்வதற்காக மட்டுமே. நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது சில ஹார்மோன்களின் சுரப்பு அதிகமாக இருக்கும். அவைதான் ஹேப்பி ஹார்மோன்கள் ஆகும். 

இதையும் படிங்க; ஒரே வாரத்தில் கொரியப் பெண்களை போல முகம் பொலிவு பெறும்... சிம்பிள் டிப்ஸ்! 

மன அழுத்தமின்றி மகிழ்ச்சியாக இருப்பதற்கு டோபமைன், செரட்டோனின், ஆக்ஸிடோசின், எண்டார்பின் ஆகிய ஹேப்பி ஹார்மோன்கள் சுரப்பு அதிகமாக இருக்க வேண்டும். இவை சுரப்பதற்கு பதிலாக, கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள் சுரப்பு அதிகரிக்கும்போது மன அழுத்தம், பதட்டம் ஆகிய பிரச்சினைகள் அதிகரிக்கின்றன. இந்த ஹார்மோன்கள் சுரப்பை அதிகரிப்பதற்கு சில வழிகளை இங்கு காணலாம். 

ஆக்ஸிடாசின் 

இந்த ஹார்மோன் நமக்கு பிடித்த நபர்களுடன் நெருக்கமாக இருக்கும்போது அதிகமாக சுரக்கிறது. இதனை லவ் ஹார்மோன் என்றும் கூறுவர். ஆண்களுக்கு விந்தணு முன்னேறவும், பெண்களுக்கு பிரசவிக்கும் நேரத்திலும் அதிகம் சுரக்கும். தாய்ப்பால் வழங்கும்போதும் இதன் சுரப்பு அதிகமாக இருக்கும். இந்த ஹார்மோனை அதிகமாக சுரக்கச் செய்ய நாம் நேசிக்கும் நபர்களை ஆரத் தழுவி கொள்ளலாம். செல்லப் பிராணிகளை வளர்த்து அதனுடன் நேரம் செலவிடலாம். பிடித்தவர்களுக்காக சமையல் செய்வது அவர்களுடன் கைகோர்த்து நடந்து செல்வது இந்த ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும். உடல் ரீதியான தொடுதல் இந்த ஹார்மோன் சுரப்பை அதிகப்படுத்தும். 

எண்டார்பின் 

இந்த ஹார்மோனை வலி நிவாரண ஹார்மோன் என்றும் கூறுவர். நம்முடைய மன அழுத்தம், உடலில் ஏதேனும் வலி உண்டாகும்போது இந்த ஹார்மோண் அதிகமாககச் சுரக்கும். சில நேரங்களில் சில வலிகளை நாம் அதிகம் ரசிப்பதற்கு இந்த ஹார்மோன் தான் காரணம். உடற்பயிற்சியும், சிரிப்பும் இந்த ஹார்மோன் சுரப்பை அதிகமாக்கும். இது அதிகமாக சுரக்கும் போது அமைதியான மனநிலையை பெறுவீர்கள். டார்க் சாக்லேட் உண்பதால் இந்த ஹார்மோன் சுரப்பை அதிகமாக்கலாம். பாதாம் போன்ற அரோமேட்டிக் எண்ணெய்யை பயன்படுத்தும்போது இதன் சுரப்பு அதிகமாகும். உங்கள் பார்ட்னருடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் போதும், நகைச்சுவையான திரைப்படங்களையோ, சீரிசையோ பார்க்கும்போதும் இந்த ஹார்மோன் சுரப்பு அதிகமாகி மகிழ்ச்சி உண்டாகிறது. 

டோபமைன் 

இந்த ஹார்மோன் கனிவான உணர்வுகளுக்கும், நினைவாற்றலுக்கும் உதவுகிறது. இது ஒருவகையான நியூரோட்ரான்ஸ்மீட்டர். நரம்புகளுக்கு இடையே தகவல்களை அனுப்ப உதவுகிறது. எதையும் விரைவில் கற்கும் திறனுக்கு இதுதான் உதவுகிறது. நம்முடைய மனநிலையை நன்றாக வைத்திருப்பதற்கு முக்கிய காரணம் டோபமைன் ஹார்மோன் தான். நாம் வெற்றி அடைந்ததாக உணரும்போது சுரப்பு உச்ச வேகத்தில் இருக்கும். நமக்கு பிடித்தமான செயலை விரைவாகவும், திறம்படவும் செய்து முடிக்கும் போது இந்த ஹார்மோன் அதிகளவில் சுரக்கும். பிடித்த உணவு வாசனைக்கு கூட இந்த ஹார்மோன் அதிகம் சுரக்கும்.

இன்சுலின் உற்பத்தி, கணைய மற்றும் சிறுநீரக செயல்பாடு, தூக்கம் ஆகியவை மேம்பட உதவும். மன அழுத்ததிற்கு எதிராக செயல்படுகிறது. இந்த ஹார்மோன் சுரப்பை அதிகரிக்க வீட்டை சுத்தப்படுத்தலாம். குளிர்ந்த நீரில் குளியல் போடலாம். டிஜிட்டல் தளத்திலிருந்து ஒதுங்கி இயற்கையை ரசிக்கலாம். பிடித்தமான பாடல்களை கேட்கலாம். நல்ல உறக்கம், இனிப்பு வகைகளை உண்பது கூட இந்த ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கும். 

செரோடோனின் 

நமது உடலில் செரிமானம், தூக்கம் ஆகியவற்றை சீராக வைக்க இந்த ஹார்மோன் உதவுகிறது. எவ்வளவு சாப்பிட வேண்டும், எவ்வளவு நேரம் தூங்க வேண்டும், எந்த வேலையை எவ்வளவு நேரம் நம்மால் செய்ய முடியும் என்பதை இந்த ஹார்மோன் தான் தீர்மானம் செய்கிறது. இதனை அதிக அளவில் சுரக்க செய்ய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சூரிய ஒளி நம்மீது படும்போதும் இந்த ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. குறிப்பாக நாம் நன்றாக தூங்கி எழுந்தால் புத்துணர்வாக இருப்போமே அதுவும் இந்த ஹார்மோனால்தான். 

இந்த புத்தாண்டில் ஹேப்பி ஹார்மோன்களை அதிகமாக சுரக்கச் செய்யும் உணவு பழக்கங்களையும், உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ளுவோம். புரதச்சத்து நிறைந்த உணவுகளையும், குறைந்த கொழுப்புள்ள உணவுகளையும் உணவு பழக்க வழக்கங்களில் சேர்த்துக் கொள்வோம். இப்படி பின்பற்றினால் ஹேப்பி ஹார்மோனின் சுரப்பை அதிகரிக்கலாம். புத்தாண்டையும் சிறப்பிக்கலாம். 

click me!