வால்நட்
வால்நட் மரப் பழத்தின் ஒரு கொட்டைக்குள் இருந்து பிரித்தெடுக்கப்படும் விதை தான் வால்நட் பருப்பு. பார்ப்பதற்கு ஏறக்குறைய மினி மூளை போலவே காட்சியளிக்கும். இதன் மரப்பட்டை, இலை என அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு நாளில் 12-லிருந்து 14 வால்நட் சாப்பிட்டால் 190 கலோரிகள், 18 கிராம் கொழுப்பு, 4 கிராம் கார்போஹைட்ரைட் , 4 கிராம் புரதம், 2 கிராம் பைபர் மற்றும் ஒரு கிராம் சர்க்கரை சத்து ஆகியவை நம் உடலுக்கு கிடைக்கும்.
ஆய்வு முடிவுகள்
மினசோட்டா பொது சுகாதார பலகலைக்கழகத்தின் எபிடோமோலஜி மற்றும் கம்யூனிட்டி ஹெல்த் துறையின் உதவிப் பேராசிரியராக பணிபுரியும் லின் ஸ்டீபன் அவர்களின் கருத்துப்படி, இந்த ஆய்வின் முக்கிய நோக்கமே, வால்நட் சாப்பிடுபவர்களின் உடல்நலம் எப்படி வால்நட் சாப்பிடாதவர்கள் உடல்நலத்திலிருந்து மாறுபடுகிறது என்பதை பார்ப்பது தான். இப்படி ஆய்வு செய்ததில், வால்நட் சாப்பிடாதவர்களை விட, சாப்பிடுபவர்களின் அன்றாட உணவுமுறை மற்றும் இருதய நலம் மிகவும் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
முடக்குவாத பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கையான வழிமுறைகள்..!!
வால்நட்டின் சத்துக்கள்
வால்நட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான உடல், மூளை செயல்பாடு, டைப் 2 சர்க்கரை நோய் பாதிக்கும் அபாயத்தை குறைக்கிறது. மேலும் வயதான பிறகும் ஆரோக்கியமான செயல்பாடுகள் என பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். வால்நட்டில் ஒமேகா - 3 அமிலங்கள் மற்றும் ஆல்பா-லினோலெனிக் அமிலம் உள்ளது. இதுதான் மற்ற நட்ஸ் வகைகளிலிருந்து இதை பிரித்து காட்ட முக்கிய காரணம். மேலும் இதில் மங்கனீஸ், மக்னீசியம் , காப்பர், அயர்ன், கால்சியம், ஜின்க், பொட்டாசியம், வைட்டமின் பி6, ஃபோலேட் மற்றும் தயமின் ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளன. ஆகவே, சின்னஞ் சிறு வயதிலிருந்தே வால்நட்ஸ் உண்ணும் பழக்கம் உடையவர்களுக்கு நல்ல ஆரோக்கியமுள்ள உடல், சத்தான உணவுப்பழக்கம் மற்றும் இதய கோளாறுகள் பாதிக்கும் அபாயம் குறைவு ஆகிய பல்வேறு நற்பயன்கள் கிடைக்கும். எனவே, உடனடியாக உங்கள் உணவுச் சுழற்சியில் வால்நட்டிற்கும் தனியே ஒரு இடம் கொடுங்கள்.
தயிருடன் பாகற்காயை சேர்த்து சாப்பிடக்கூடாது..!! ஏன்னு தெரிஞ்சுக்கோங்க..!!