Daily Multivitamin : வயதானவர்கள் தினமும் மல்டிவைட்டமின் எடுத்தால் என்ன ஆகும்? வெளியான அதிர்ச்சி தகவல்

Published : May 15, 2026, 09:51 PM IST

தினசரி மல்டிவைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்வது எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒரு புதிய ஆய்வு பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளது. இந்த ஆய்வு டிஎன்ஏ மெத்திலேஷன் மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது.

PREV
15
தினமும் மல்டிவைட்டமின் எடுத்தால் என்னவாகும்?

வயது அதிகரிப்பதை முழுமையாகத் தடுக்க முடியாவிட்டாலும், அதன் வேகத்தைக் குறைக்க சில வழிகள் இருக்கலாம் என புதிய மருத்துவ ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக, தினசரி மல்டிவைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் வயதானவர்களுக்கு உடலியல் ரீதியான வயதாகும் செயல்முறை மெதுவாக வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. மாஸ் ஜெனரல் ப்ரிகாம் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வு, முதியவர்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறிய ஆனால் கவனிக்கத்தக்க மாற்றங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது.

25
மல்டிவைட்டமின் மாத்திரை குறித்து முக்கிய கண்டுபிடிப்பு

இந்த ஆய்வின் படி, இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து மல்டிவைட்டமின் எடுத்துக்கொண்டவர்களின் உடலியல் வயது சுமார் நான்கு மாதங்கள் வரை கண்டறியப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் Nature Medicine என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஆய்வின் ஆரம்பத்தில் உடல் வேகமாக வயதாகிக்கொண்டிருந்தவர்களிடம் இந்த மாற்றம் அதிகமாகக் காணப்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வயது எண்ணிக்கை அதிகரிப்பது ஒரு விஷயம் என்றாலும், உடலின் செல்கள் எவ்வளவு வேகமாக சிதைகின்றன என்பதுதான் “உடலியல் வயது” எனப்படும்.

35
புதிய ஆய்வு முடிவுகள்

உடலியல் வயதாவதைக் கண்காணிக்கும் விஞ்ஞானிகள் “எபிஜெனெடிக் கடிகாரங்கள்” என்ற நவீன ஆய்வு முறையைப் பயன்படுத்தியுள்ளனர். இதில், டிஎன்ஏ-வில் ஏற்படும் சிறிய இரசாயன மாற்றங்கள், குறிப்பாக டிஎன்ஏ மெத்திலேஷன் எனப்படும் மாற்றங்கள் ஆராயப்பட்டன. இந்த மாற்றங்கள் மனித உடலில் வயது அதிகரிக்கும்போது இயல்பாகவே ஏற்படும். ஆனால் சிலரிடம் இந்த மாற்றங்கள் வேகமாக நடைபெறலாம். அதனை அடிப்படையாக வைத்து, எதிர்கால நோய் அபாயங்கள் மற்றும் உடல்நிலை குறைபாடுகளைக் கண்டறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

45
வயதாகும் வேகம் குறைவு

இந்த ஆய்வு COSMOS என்ற நீண்டகால மருத்துவ திட்டம் ஒன்று நடத்தப்பட்டது. சுமார் 70 வயது சராசரி கொண்ட 958 ஆரோக்கியமான முதியவர்கள் இதில் கலந்து கொண்டனர். சிலருக்கு தினசரி மல்டிவைட்டமின், சிலருக்கு கோகோ சாறு, மற்றவர்களுக்கு மருந்துப்போலி மாத்திரைகள் வழங்கப்பட்டன. பின்னர் ஓராண்டு மற்றும் இரண்டாண்டுகளுக்குப் பிறகு அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. மல்டிவைட்டமின் எடுத்துக்கொண்டவர்களிடம் உடலியல் வயதாகும் வேகம் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கதாக இருந்தது.

55
வைட்டமின் மாத்திரை

இருப்பினும், இந்த பலன்கள் நீண்ட காலத்திற்கு தொடருமா என்பது குறித்து இன்னும் விரிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். முந்தைய சில ஆய்வுகள், மல்டிவைட்டமின் பயன்பாடு மூளை ஆரோக்கியம், கண்புரை மற்றும் சில புற்றுநோய் அபாயங்களை குறைக்க உதவலாம் என கூறியுள்ளன. ஆனால், எந்த வகை மல்டிவைட்டமின் யாருக்கு ஏற்றது என்பது மருத்துவர் ஆலோசனையுடன் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதையும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories