Water fasting: மாதம் ஒருமுறை தண்ணீர் விரதம் இருப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

First Published | Mar 1, 2023, 10:07 PM IST

 தண்ணீர் விரதம் இருந்து உடல் உள்ளுறுப்புகளுக்கு எப்படி ஓய்வை அளிக்க வேண்டும் மற்றும் அதன் நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்.

தினசரி குறிப்பிட்ட மணி நேரம் உழைக்கும் நமக்கே அடிக்கடி ஓய்வுத் தேவைப்படும் போது, நாள் முழுக்க வேலை செய்து கொண்டிருக்கும் நம் உடல் உறுப்புகளுக்கும் ஓய்வு தர வேண்டியது மிகவும் அவசியமாகும். ஆம், அதிலும் முக்கியமாக செரிமான மண்டலத்திற்கு மாதம் ஒரு முறையாவது ஓய்வைத் தர வேண்டும். அவ்வகையில், தண்ணீர் விரதம் இருந்து உடல் உள்ளுறுப்புகளுக்கு எப்படி ஓய்வை அளிக்க வேண்டும் மற்றும் அதன் நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்.
 

Image: Getty Images

தண்ணீர் விரதம் 

தண்ணீர் விரதம் என்பது உணவு சாப்பிடாமல் தண்ணீரை மட்டுமே குடித்து அன்றைய நாளைக் கழிப்பதாகும். இதனை 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை கூடச் செய்யலாம். இந்த விரதத்தை புதியதாக செய்பவர்கள், முதலில் 24 மணி நேரம் வரை இருக்கலாம். இதனை  21 நாட்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு மாதத்திற்கு ஒரு முறை எனச் செய்யலாம். தண்ணீர் விரதத்தினை முடித்த உடனேயே, வயிறு நிரம்ப சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிடுவது உடல் நலத்திற்கு கெடுதலை விளைவித்து விடும். பிறகு, தண்ணீர் விரதம் இருந்தும், அது பயனில்லாமல் போய் விடும்.


தண்ணீர் விரதத்தின் நன்மை

மாதம் ஒரு முறை தண்ணீர் விரதம் மேற்கொள்வதால், உடலில் உள்ள இரத்ததை சீராக வைத்திருக்க உதவுகிறது.

உடல் உள்ளுறுப்புகள் சுத்தமாவதோடு, உடல் எடையும் குறையும்.

இரத்த அழுத்தம் குறைந்து, இதய ஆரோக்கியம் மேம்படும்.

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

இன்சுலின் அளவானது சீரான அளவில் மேம்படும்.
 

Restaurant In Belgium Serves Customers Recycled Water From Toilets And Sinks

தவிர்க்க வேண்டியவர்கள் 

தண்ணீர் விரதத்தினை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், சர்க்கரை நோய் உள்ளவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், கர்ப்பிணி பெண்கள், சமீபத்தில் பிரசவமான பெண்கள் மற்றும் தொடர்ச்சியாக மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்கள் மேற்கொள்ளக் கூடாது.

ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் க்ரீன் சிக்கன் டிக்கா! எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க!

தீமைகள்

தண்ணீர் விரதம் ஒருசிலருக்கு ஒத்துப் போகாது. அப்படிப் பட்டவர்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும் மற்றும் சிறுநீரக செயல்பாட்டினை மோசமாக்கி விடும்.

யூரிக் அமில உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்புண்டு.

பசி மனநிலையின் ஏற்ற இறக்கங்களைத் தூண்டி விடும்.

தண்ணீர் விரதத்தினை வெகுநாட்களுக்கு மேற்கொண்டால் மூளை மூடுபனி ஏற்படக் கூடும்.

குறிப்பு:- தண்ணீர் விரதம் மேற்கொள்வதற்கு முன்பாக, மருத்துவரை அணுகி கலந்தாலோசித்து, அவருடைய அனுமதியைக் கேட்ட பின் மேற்கொள்வது நல்லது.

Latest Videos

click me!