ஒரு கொட்டை புளியில் கொட்டி கிடக்கும் ஆரோக்கியம்!

First Published | Jan 20, 2025, 1:25 PM IST

இந்தியர்களின் சமையலில் புளியின் பங்கு அதிகம். சட்னி, ரசம், சாம்பார் என்று எல்லாவற்றிலும் சேர்க்கிறோம். புளியை சேர்த்து கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
 

Tamarind Health Benefit

புளியை நாம் பல உணவுகளில் பயன்படுத்துகிறோம். ஏனென்றால் அது சுவையை அதிகரிக்கிறது. புளியின் புளிப்பு தன்மை பலருக்கு பிடிக்கும். அதனால்தான் ரசம், சாம்பார், சட்னி போன்றவற்றில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இது சுவையை கூடுவது மட்டும் இன்றி, நம் உடலுக்கும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கி வருகிறது. முக்கியமாக ஒரு கொட்டை புளி உணவில் சேர்க்கும் போது அது இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. வைட்டமின் சி இதில் அதிக அளவு உள்ளது. .
 

Tamarind is Iron Absorption

பசலைக்கீரை, கீரை வகைகள், பருப்பு வகைகள், பீன்ஸ் போன்றவற்றில் உள்ள இரும்பு சத்துக்களை உறிஞ்சுவதற்கு புளியில் உள்ள வைட்டமின் சி மிகவும் உதவுகிறது. அதற்கு பசலைக்கீரை அல்லது பீன்ஸ் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது ஒரு கொட்டை புளி வைத்து செய்யப்பட்ட சட்னி, ரசம் சாப்பிடுங்கள். இதனால் உங்கள் உடல் இரும்புச்சத்தை சரியாக உறிஞ்சும். புளி சாப்பிட்டால் ஏற்படும் பிற நன்மைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம் வாருங்கள். 

சுகர் நோயாளிங்க காலைல சாப்பிடலன்னா உடம்புல என்ன நடக்கும் தெரியுமா?
 


Vitamin C

வைட்டமின் சி 

புளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது இரும்புச்சத்தை உறிஞ்சுவதை அதிகரிக்கிறது. புளி போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடல் இரும்புச்சத்தை நன்றாக உறிஞ்சும். இதனால் இரும்புச்சத்து குறைபாடு நீங்கும். உடலில் இரத்தம் குறைய வாய்ப்பு இருக்காது. 

Anti Oxidants

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் 

புளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் அதிகம் உள்ளன. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் போராடுகின்றன. இதனால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஏதேனும் உடல்நலப் பிரச்சினை இருந்தாலும் விரைவில் குணமடைவீர்கள். உங்கள் உடல்நிலை நன்றாக இருந்தால் உங்கள் செரிமானமும் நன்றாக இருக்கும். உங்கள் உடல் இரும்புச்சத்தையும் நன்றாக உறிஞ்சும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். 

இதய அடைப்புகளைத் தடுக்க உதவும் 10 இந்திய சூப்பர்ஃபுட்ஸ் இதோ!

Digestive Health

செரிமான ஆரோக்கியம் 

ஒரே ஒரு கொட்டை புளி நம் செரிமான ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஏனென்றால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது மலச்சிக்கலைப் போக்குவதால் உங்கள் செரிமான அமைப்பு சரியாக செயல்படும். மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது. இதனாலும் உங்கள் உடல் இரும்புச்சத்தை நன்றாக உறிஞ்சும். 
 

Potassium and Magnesium

பொட்டாசியம், மெக்னீசியம் 

புளியில் இரும்புச்சத்து மிகக் குறைவாக உள்ளது. ஆனால் இது இரும்புச்சத்தின் நேரடி மூலம் அல்ல. ஆனால் இதில் பொட்டாசியம், மெக்னீசியம் அதிகம் உள்ளது. இந்த இரண்டு ஊட்டச்ச்சத்துக்களும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன. தசைகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. உங்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தால் இரும்புச்சத்துடன் மற்ற ஊட்டச்ச்சத்துக்களையும் நன்றாக உறிஞ்சும். எனவே எப்போதும் புளி சேர்த்த உணவை தவிர்க்காமல் உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

மஞ்சளையும் இஞ்சியையும் சேர்த்து சாப்பிட்டால் போதும்; ஆபத்தான நோய்களை கூட தடுக்கலாம்!

Latest Videos

click me!