
தற்போது வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக நம்முடைய ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக பலவிதமான உடல்நலப் பிரச்சினைகளை தான் நாம் அனுபவிக்கிறோம். அதிலும் குறிப்பாக இளம் வயதிலேயே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், எடை அதிகரிப்பு, உடல் பருமன் போன்ற கடுமையான பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள்.
அந்த வகையில், இந்த நாட்களில் உயரத்த அழுத்த பிரச்சனையானது பொதுவாகிவிட்டது. அதிக உடல் உழைப்பு இல்லாதவர்கள், உணவின் மீது கட்டுப்பாடு இல்லாதவர்கள் மற்றும் அடிக்கடி மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தான் இதில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். உயரத்த அழுத்த பிரச்சனையை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தாவிட்டால் இதயம் தான் பாதிக்கப்படும். எனவே இந்த பிரச்சனையை எளிதாக ஒருபோதும் எடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் வழக்கமான உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான உணவையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஆம், சில ஆரோக்கியமான உணவுகளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பிபியை கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று நிபுணர்கள் சொல்லுகின்றனர்.
பீட்ரூட்:
அதிக பிபியை கட்டுக்குள் வைக்க பீட்ரூட்டை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பீட்ரூட் ரத்த நாளங்களை தளர்த்தி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. பீட்ரூட்டில் பல வகையான ஆக்சிஜனேற்ற பண்புகள் உள்ளது. அவை மன அழுத்தத்தை குறைக்கவும், இதே ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே பீட்ரூட்டை நீங்கள் ஜூஸாகவோ, சாலட்டில் சேர்த்தோ அல்லது கூட்டாக செய்து சாப்பிடலாம்.
பூண்டு:
பூண்டு சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு அத்தியாவசிய பொருளாகும். இதை நீங்கள் உணவில் பல வழிகளில் பயன்படுத்தலாம். பூண்டில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் போன்ற பல பண்புகள் உள்ளன. அவை வீக்கத்தை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது. முக்கியமாக பூண்டு உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
மாதுளை:
மாதுளையில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் ரத்த அழுத்தமா? உடனடியா கட்டுக்குள் வர இந்த '4' விஷயம் பண்ணுங்க போதும்..!!
விதைகள்:
தற்போது பெரும்பாலான மக்கள் தங்களது உணவில் பூசணி விதைகள், ஆளி விதைகள், சியா விதைகள் போன்ற விதைகளை சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த விதைகளில் மெக்னீசியம் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி விதைகளில் இருக்கும் நார்ச்சத்து வயிற்று பிரச்சனைகளை சரி செய்யவும், இதயத்தை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது. அதிலும் குறிப்பாக சியா விதை மற்றும் ஆளி விதைகளில் இருக்கும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தை குறைத்து ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
தயிர்:
தயிரில் இருக்கும் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இவை அனைத்தும் உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் மற்றும் அது ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறையும்.
இதையும் படிங்க: அளவு முக்கியம்!! பிபி அதிகம் இருக்கவங்க 'அரிசி' சாப்பிட்டால் என்னாகும் தெரியுமா?