தினமும் 1 கிமீ வாக்கிங்!! வெறும் 15 நிமிஷத்தில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?
தினமும் 1 கி.மீ வாக்கிங் செல்வதால் கிடைக்கும் அளப்பரிய ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.
தினமும் 1 கி.மீ வாக்கிங் செல்வதால் கிடைக்கும் அளப்பரிய ஆரோக்கிய நன்மைகளை இங்கு காணலாம்.
Health Benefits of Daily 1 km Walking : நாள்தோறும் நடைபயிற்சி செல்லும்போது உங்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. தினமும் ஒரு கிலோமீட்டர் வாக்கிங் செல்வது கூட ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. நீங்கள் விறுவிறுப்பான நடைபயிற்சி மேற்கொண்டால் ஒரு கிலோமீட்டர் தூரத்தை 8 முதல் 10 நிமிடங்களுக்குள் பூர்த்தி செய்ய முடியும். இதனால் உங்களுடைய எடை இழப்பு அதிகரிக்கும்.
இதயத்தை காக்கும் நடைபயிற்சி;
தினமும் நடைபயிற்சி செய்தால் உங்களுடைய இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. இதயம் தொடர்பான நோய்களை தடுப்பதில் நடைபயிற்சி பெரும் பங்காற்றுகிறது. பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கிறது. சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களின் ஆபத்தையும் நடைபயிற்சி குறைப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தினமும் காலையில் நடைபயிற்சி செய்வதால் உங்களுடைய ஆற்றல் மட்டங்கள் அதிகரித்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். மனநிலையை சீராக்கி மன அழுத்தத்தை குறைக்கிறது. தினமும் நடைபயிற்சி செய்வது எலும்புகளை உறுதியாக்கவும், தசைகளை வலுப்படுத்தும் உதவுகிறது.
எடை கட்டுப்பாடு:
நாள்தோறும் நடைபயிற்சி செய்தால் அதிக கலோரிகளை எரிக்கலாம். இதனால் எடை கட்டுக்குள் இருக்கும். ஆரோக்கியமான எடையை பராமரிக்க நடைபயிற்சி உதவுகிறது. நடைபயிற்சி செல்வது வகை 2 நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரோசிஸ் உள்ளிட்ட நோய்களை ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
இதையும் படிங்க: பொய்யான 'வாக்கிங்' கட்டுக்கதைகளும் உண்மைகளும்!!
உறுதியாகும் உடல்:
தினமும் நடைப்பயிற்சி செய்வதால் உடல் வலிமையும் சகிப்புத்தன்மையும் ஏற்படுஜிறது. உங்களுடைய எலும்புகள், தசைகளை வலுப்படுத்தவும், உடலில் தடுமாற்றம் இன்றி சமநிலை, ஒருங்கிணைப்பு மேம்படவும் நடைபயிற்சி உதவுகிறது.
இதையும் படிங்க: கெட்ட கொழுப்பை குறைக்க ஒருவர் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்?
தரமான தூக்கம்:
நடைபயிற்சி தினமும் செய்பவர்களுடைய தூக்கத்தின் தரம் மேம்படுகிறது. அவர்களுக்கு ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் கிடைக்கும். தூக்கமின்மை பிரச்சனைகள் நீங்கும். தினமும் உடல் செயல்பாடு உடையவர்களுக்கு சிறந்த தூக்கம் கிடைக்கும்.
செரிமானம் மேம்படும்:
நடைபயிற்சி தூக்கத்தை மட்டுமல்ல செரிமானத்தையும் மேம்படுத்தும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும்.