
Causes of Sudden Excessive Sweating for Female : வியர்ப்பது என்பது ஒரு பொதுவான விஷயம். ஆனால் பெண்களுக்கு திடீரென அதிகப்படியான வியர்வை ஏற்படுகிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதில் முக்கியமானது எதுவென்றால் மெனோபாஸ் (Menopause) என்னும் மாதவிடாய் நின்ற நிலையாகும். இது தவிர, ஹைப்பர் ஹைட்ரோசிஸ் (Hyperhidrosis) என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக வியர்க்கும். சிலருக்கோ அதிகப்படியான மன அழுத்தம், பதட்டம் அல்லது சில மருத்துவ காரணங்களாலும் அதிகமாக வியர்வை ஏற்படும். சில சமயங்களில் ஹார்மோன் ஏற்றுத்தாழ்வுகள் தைராய்டு பிரச்சனை நீரிழிவு நோய் போன்ற காரணங்களாலும் வியர்வை அதிகமாக வரும். சரி இப்போது இந்த பதிவில் திடீரென பெண்களுக்கு ஏன் வியர்க்கிறது என்பதற்கான முழு விளக்கம் குறித்து காணலாம்.
பெண்களுக்கு திடீரென அதிக வியர்வை ஏற்படுவதற்கான காரணங்கள்
மெனோபாஸ்:
மெனோபாஸ் சமயத்தில் உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு குறையும். இதன் விளைவாக வியர்வை அதிகமாக வரும். இது தவிர, மாதவிடாய் நின்ற பெண்களுக்கு சூடான உணர்வு ஏற்படும். இதனால் வியர்வை அதிகமாக வரலாம்.
ஹைப்பர் ஹைட்ரோசிஸ் :
ஹைப்பர் ஹைட்ரோசிஸ் என்பது உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இது சிலருக்கு எந்த காரணமின்றி இருக்கும். மற்றவர்களுக்கோ மன அழுத்தம், பதற்றம் அல்லது சில மருத்துவ காரணங்களாலும் இந்த பிரச்சனை ஏற்படலாம்.
தைராய்டு பிரச்சனைகள்:
தைராய்டு சுரப்பியானது அதிகப்படியான தைராக்ஸினை சுரக்கும் போது ஹைப்பர் தைராய்டிசம் என்ற நிலை ஏற்படும். இதன் விளைவாக அதிகப்படியான வியர்வை வெளியேறும்.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்:
மாதவிடாய், மெனோபாஸ் போன்ற சமயத்தில் ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்பட்டு, வியர்வை அதிகமாக வெளியேறும்.
இதையும் படிங்க: உங்களுக்கு குபுகுபுன்னு வேர்த்து ஊத்துதா? அப்ப காரணம் இதுதான்!!
சர்க்கரை நோய் :
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவில் சமநிலை இல்லாமல் இருந்தால் திடீரென அதிகப்படியான வியர்வை வரும்.
பிற காரணங்கள்:
உடல் பருமன், சில மருந்துகள், அதிக உடற்பயிற்சி ,அதிக வெப்பம், இதய நோய் கொஞ்சம் பல காரணங்களாலும் வியர்வை அதிகமாக ஏற்படலாம்.
இதையும் படிங்க: Sweating In Summer : இந்த வெயில் காலத்தில் ஏற்படும் வியர்வையால் இவ்வளவு நன்மைகளா?
என்ன செய்யலாம்?
- அதிகப்படியான வியர்வை பிரச்சனை நீடித்தால் உடனே மருத்துவர் அணுகி காரணத்தை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.
- மன அழுத்தம், பதட்டம், தூக்கு கலக்கம் ஆகியவை வியர்வையை அதிகரிக்க காரணமாக இருக்கும் எனவே அவற்றை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள். நீங்கள் யோகா, தியானம் போன்றவற்றை செய்யலாம்.
- காஃபின், ஆல்கஹால், காரமான உணவுகள் ஆகியவை வியர்வை சுரப்பிகளை தூண்டும். எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது.
- நிறைய தண்ணீர் குடியுங்கள் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருங்கள் இதனால் வியர்வையை கட்டுப்படுத்தலாம்.
- அதிகமாக வியத்தால் அடிக்கடி குளியுங்கள், வியர்வை வராமல் தடுக்கும் கிரீம்களை பயன்படுத்துங்கள்.
- தைராய்டு பிரச்சனை, சர்க்கரை நோய் இருந்தால் அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.