பெரும்பாலும் தேங்காய் எண்ணெயை நாம் கூந்தல் வளர்ச்சிக்கு தான் பயன்படுத்துவோம். அது மட்டுமல்லாமல் சமையலில் இதை பயன்படுத்தினால் நல்ல ருசியைத் தரும், மணத்துடனும் இருக்கும். கேரளா மாநிலத்தில் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் தான் பயன்படுத்துவார்கள். அதனால்தான் என்னவோ அவர்கள் இளமையாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
25
தொப்பை குறையும்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால் தொப்பை குறையுமென்று அரட்சளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஏனெனில் தேங்காய் எண்ணெயில் இருக்கும் பண்புகள் வயிற்று சுற்றி இருக்கும் கலோரிகளை எரித்து கரைத்து வெளியேற்ற உதவுகிறது.
எடையை குறைக்கும்
நீங்கள் எடையை குறைக்க விரும்புகிறீர்கள் என்றால் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடியுங்கள். தேங்காய் எண்ணெய் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
35
செரிமான பிரச்சனைகள் வராது
தினமும் காலையில் எழுந்ததும் வேரும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால் செரிமான பிரச்சனைகள் ஏதும் வராது.
ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும்
காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுமையாக உறிஞ்ச உதவுகிறது.
தேங்காய் எண்ணெயில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் அவை வீக்கத்தை குறைத்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.
ஆற்றலை அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய் உடலில் ஆற்றலை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. இதில் இருக்கும் கலோரிகள் உடலில் உடனடி ஆற்றலை வழங்கும். எனவே நீங்கள் உடலில் போதுமான ஆற்றல் இல்லை என்று உணர்ந்தால் தினமும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடியுங்கள். இதனால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.
55
எப்படி குடிக்கலாம்?
தினமும் காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடிக்கலாம். இல்லையெனில் சூடான நீரில் கலந்தும் குடிக்கலாம்.
முக்கிய குறிப்பு
தேங்காய் எண்ணெயை அதிகமாக குடித்தால் உடல்நிலை பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே மிதமான அளவில் மட்டுமே குடியுங்கள். கூடவே ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியையும் இணைத்துக் கொள்ளுங்கள். சிறந்த பலன்களை பெறுவீர்கள்.