Swollen Feet : அடிக்கடி கால் வீங்குதா? இந்த வீட்டு வைத்தியத்தை '1' முறை பண்ணி பாருங்க

Published : Sep 13, 2025, 12:29 PM IST

கால்கள் குறிப்பாக பாதங்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

PREV
17
Home Remedies for Swollen Feet

கால் பாதங்களில் வீக்கம் ஏற்படுவது என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகும். ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்தல் அல்லது நிற்பது போன்ற பல காரணங்களால் இது நிகழும். இதை ஆரம்பத்திலேயே கவனித்தால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. இல்லையெனில், எதிர்காலத்தில் மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். ஆனால் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் இதை குணமாக்கி விடலாம். அவை என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

27
பாதங்களில் வீக்கம் ஏற்படுவதற்கு காரணங்கள் :

பாதங்களில் வீக்கம் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு மட்டுமல்ல,

- நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்தல்

- நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்தல்

- உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும் போது

- வியர்வை மற்றும் சிறுநீர் உள்ளிட்டவை முறையாக வெளியேறாமல் உடலில் தேங்கி இருந்தாலும் கால் வீக்கம் ஏற்படும்.

37
மஞ்சள்

மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே கால் வீக்கத்தை குணமாக்க மஞ்சளை பயன்படுத்தலாம். இதற்கு 1 ஸ்பூன் மஞ்சளுடன் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து அந்த பேஸ்ட்டை வீக்கம் உள்ள இடத்தில் தடவி நன்கு காய்ந்ததும் சூடான நீரால் பாதங்களை கழுவ வேண்டும்.

47
பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா சுத்திகரிப்பான் மட்டுமல்ல கால் வீக்கத்தையும் குறைக்கவும் உதவுகிறது. இதற்கு 2 ஸ்பூன் அரிசியை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து பிறகு அதை வடிகட்டி அந்த நீரில் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து அதை பாதங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பாதங்களின் ஏற்பட்டிருக்கும் வீக்கம் குணமாகும், ஒரத்த ஓட்டம் மேம்படும்.

57
தேங்காய் எண்ணெய்

அடிக்கடி உங்களுக்கு பாதத்தில் வீக்கம் ஏற்படுகிறது என்றால் தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம். இதற்கு சிறிதளவு தேங்காய் எண்ணெயை சூடாக்கிக் கொள்ளுங்கள். அதில் பூண்டு மற்றும் கிராம்புகளை சேர்த்து வறுக்கவும். பிறகு கை பொறுக்கும் சூட்டில் இருக்கும் போது இந்த எண்ணெயை வீக்கம் உள்ள இடத்தில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் வீக்கம் குறைவது மட்டுமல்லாமல் வலியும் நீங்கும்.

67
ஐஸ் ஒத்தடம்

கால் பாதங்கள் வீங்கி இருந்தால் ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். வீக்கம் இருக்கும் இடத்தில் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் வீக்கம் குறையும்.

77
கல் உப்பு

கால் வீக்கத்தை குறிக்க கல் உப்பு பயன்படுத்தலாம் இதற்கு சூடான நீரில் கல் உப்பு சேர்த்து அதில் உங்களது காலை சிறிது நேரம் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கால் வீக்கம் குணமாகும்.

மேலே சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்கள் மூலம் கால் வீக்கத்தை குறைக்கலாம். ஆனாலும் இவற்றை செய்த பிறகு கால் வீக்கம் இருந்தால் உடனே மருத்துவரிடம் செல்லுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories