Skipping Benefits : தினமும் வெறும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் போதுமா? எடை குறைய இந்த ட்ரிக்

Published : Sep 13, 2025, 10:30 AM IST

தினமும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

PREV
18
Skipping Benefits

சிறுவயதில் நாம் விளையாட்டாக விளையாடிய ஸ்கிப்பிங் இன்றைய காலத்தில் உடற்பயிற்சியின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. ஸ்கிப்பிங் மிகவும் பயனுள்ள மற்றும் வேடிக்கையான பயிற்சிகளில் ஒன்றாகும். குறைந்த நேரத்தில் அதிக கலோரிகளை எரிக்க இது உதவுகிறது. அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த இந்த பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், தினமும் வெறும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

28
உடல் எடையை குறைக்க உதவும்

உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஸ்கிப்பிங் சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் தினமும் ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் உடலில் தேங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும். ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்து வந்தால் 300 கலோரிகள் எடுக்கப்படுகின்றன. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஸ்கிப்பிங் நல்ல பலனை தரும்.

38
இதய ஆரோக்கியம் மேம்படும்

தினமும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்து வந்தால் இரத்த ஓட்டம் மேம்படும், இதய தசைகளை வலுப்படுத்தி இதயம் சம்பந்தப்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கும்.

48
எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்

வயதாகும் போது எலும்பை நிறுத்தி குறைந்து விடும். ஆனால் ஸ்கிப்பிங் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இது எலும்புகளின் வளர்ச்சி மற்றும் வலிமையை ஊக்குவிக்க செய்யும்.

58
நினைவாற்றல் மேம்படும்

மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்த பயிற்சி ஸ்கிப்பிங். எனவே, தினமும் வெறும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங் செய்து வந்தால் உண்மையில் நினைவாற்றல் மேம்படும் அல்லது மூளையின் செயல்பாடு மேம்படும்.

68
நுரையீரல் திறனை மேம்படுத்தும்

சுவாசத்தின் திறனை அதிகரிக்க ஸ்கிப்பிங் சிறந்த வழியாகவும். வேலை செய்யும் தசைகளுக்கு அதிக இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் பம்ப் செய்ய வேண்டியிருக்கும். இதன் தேவையை பூர்த்தி செய்ய ஸ்கிப்பிங் உதவுகிறது. இதனால் இதயத் துடிப்பு மற்றும் சுவாச விகிதம் அதிகரிக்கும். இதன் காரணமாக நுரையீரல் திறன் படிப்படியாக மேம்படும். இதனால் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய முடியும்.

78
மன அழுத்தத்தை போக்கும்

தற்போது பலரும் மன அழுத்தம், பதட்டத்தால் அவதிப்படுகிறார்கள். ஸ்கிப்பிங் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஸ்கிப்பிங் செய்யும்போது உடலில் எண்ட்ரோபின் ஹார்மோன்கள் உற்பத்தி அதிகரிக்கும். எனவே தினமும் வெறும் 15 நிமிடங்கள் ஆவது ஸ்கிப்பிங் விளையாடுங்கள்.

88
தசைகள் வலுவாகும்

ஸ்கிப்பிங் விளையாடும் போது ஒட்டுமொத்த உடலும் வேலை செய்கிறது இதனால் உடலில் உள்ள உறுப்புகளின் இயக்கம் அதிகரித்து, வளர்ச்சியை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது. எனவே தினமும் ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் தசைகள் வலுப்பெறும்.

Read more Photos on
click me!

Recommended Stories