amla
நெல்லிக்காய் பாரம்பரியமாக நம் நாட்டில் பல நோய்களைக் குணப்படுத்தும் மருந்துப் பலன்களை தரும் காய்கறியாக உள்ளது. நெல்லிக்காயில் வைட்டமின் பி மற்றும் சி இரும்புச்சத்து, கால்சியம் ஆண்டிஆக்சிடண்டுகள் அடங்கியுள்ளன. தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், நெல்லிக்காய் செரிமானத்தை மேம்படுத்தவும், வயிற்றுக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தினமும் காலையில் நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். நெல்லிக்காயில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன்மூலம் ரத்தச் சோகை பிரச்னகள் எதுவும் வராது.
மேலும், நெல்லிக்காயில் வைட்டமின்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால் கண் பார்வையை மேம்படுத்தவும், கண்புரை நோயை குறைக்கவும் உதவுகிறது. நெல்லிக்காயில் உள்ள கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.
நெல்லிக்காயில் வைட்டமின் சி மற்றும் பிற ஆண்டிஆக்சிடண்டுகள் உள்ளன. இதன்மூலம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. அதனால் அனைவருமே தினமும் நெல்லிக்காயை சாப்பிட்டு வரலாம். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
இதுபோன்ற குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்..!!
சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் நெல்லிக்காய் சிறந்தது. மேலும் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிடுவது கொலஸ்ட்ராலை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க உதவுகிறது. அதேபோல நெல்லிக்காய் இதயத் தமனிகளின் ஆரோக்கியத்தை அதிகரித்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் நெல்லிக்காய் மிகவும் நல்லது. நெல்லிக்காயில் உள்ள பைட்டோநியூட்ரியன்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடிக்குரிய ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. சருமத்தின் இளமை மற்றும் அழகை பராமரிப்பதற்கும் நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வரலாம்.