Diabetes : சர்க்கரை நோயாளிகள் காலை டீக்கு முன்னால 'இதையா' குடிக்கனும்? எகிறும் சுகரை குறைக்கும் அற்புத பானம்

Published : Jul 07, 2025, 08:22 AM IST

சர்க்கரை நோயாளிகள் எகிறும் சுகரை இயற்கையாகவே குறைக்க காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டிய பானங்களை இங்கு காண்போம்.

PREV
15
சுகரை குறைக்க உதவும் அற்புத பானங்கள்

நோய்கள் குணமாக சில நேரம் பெரிய மாற்றங்களை செய்யத் தேவையில்லை. சிறிய விஷயங்களில் அவை சரியாகத் தொடங்கும். சில சர்க்கரை நோயாளிகள் மாத்திரை போட்டாலும் அவர்களுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையாது. இந்த நேரங்களில் வெறும் வயிற்றில் சில பானங்களை குடித்தால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள பானங்களில் ஏதேனும் ஒன்றை தினமும் குடிக்கலாம். அவற்றின் நன்மைகளை இங்கு காணலாம்.

25
வெந்தய நீர்

இந்த நீர் உடலுக்கு பல நன்மைகளை செய்கிறது. மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணம். ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவு தூங்கும் முன் தண்ணீரில் ஊறவையுங்கள். இதை காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்தால் இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சுதலை மெதுவாக்க உதவும். உடலில் இன்சுலின் உணர்திறன் மேம்படும். இது தவிர சருமம், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும், மாதவிடாய் பிரச்சனைகளுக்கும் வெந்தயம் நல்லது.

35
இலவங்கப்பட்டை நீர்

இலவங்கப்பட்டை செரிமானத்தை ஆதரிக்கும் அற்புத பொருள். இந்தப் பட்டை இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும் என நம்பப்படுகிறது. தொடர்ந்து இலவங்கப்பட்டை தண்ணீர் குடித்தால் உடலில் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும். ஒரு கப் வெந்நீரில் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடி அல்லது சிறு துண்டு பட்டையை அப்படியே போட்டு கொதிக்க வையுங்கள். ஆறிய பின் குடிக்கலாம். காலையில் அல்லது சாப்பிட்டு அருந்தலாம்.

45
பாகற்காய் சாறு

கசப்பான சுவை இருந்தாலும் பாகற்காய் சாறு நன்மைகள் அதிகம். இயற்கை இன்சுலின் மாதிரி உடலுக்குள் செயல்படும் சேர்மங்கள் பாகற்காயில் உள்ளன. இதை உணவில் சேர்த்தால் செல்களில் குளுக்கோஸ் உறிஞ்சுதல் மேம்படும். நடுத்தர அளவுள்ள பாகற்காயை கழுவி நறுக்கி கொள்ள வேண்டும். அதை நீரில் ஊற வையுங்கள். அந்த தண்ணீரில் எலுமிச்சை சாறு அல்லது வெள்ளரிக்காயை போட்டு காலை உணவுக்கு முன் ஒரு டம்ளர் குடிக்கலாம். வாரத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை குடித்தால் நல்லது.

55
நெல்லிக்காய் நீர்

வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் கணைய செயல்பாட்டிற்கும் நல்லது. இதை உணவுக்குப் பின் குடித்தால் சர்க்கரை அதிகரிப்பது குறையும். உடலுக்கு புத்துணர்ச்சியும், சரும ஆரோக்கியமும் மேம்பட உதவும். செரிமானத்திற்கு நல்லது. இதை தயாரிப்பது எளிது. நெல்லிக்காயை இடித்து, நசுக்கி கொள்ள வேண்டும். அதை ஒரு டம்ளர் கிளாஸ் தண்ணீரில் போட்டு காலை அல்லது மதியம் குடிக்கலாம். சுவைக்காக சிட்டிகை கருப்பு உப்பு போட்டால் போதும்.

குறிப்பு: இந்தப் பானங்களைக் குடிப்பதால் சுகர் மாத்திரையை நிறுத்தக் கூடாது. அது மருத்துவரின் ஆலோசனை பேரில் செய்ய வேண்டும். அதுவே நல்லது.

Read more Photos on
click me!

Recommended Stories