Children Eye Health : குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 எளிய டிப்ஸ்

Published : Jul 06, 2025, 05:26 PM IST

குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு கண் ஆரோக்கியமும் முக்கியம். கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஐந்து எளிய மற்றும் பயனுள்ள குறிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
Tips to help improve children eye health

குழந்தைகளின் கண்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு வைட்டமின் ஏ, சி, இ துத்தநாகம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். பப்பாளி, கேரட், கீரை வகைகள், சர்க்கரை வள்ளி கிழங்கு, ஆரஞ்சு, பிரக்கோலி, முட்டை, பாதாம், சியா விதைகள், மீன்கள் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்க்க வேண்டும். இது அவர்களின் பார்வையை அதிகரிப்பதோடு, வயதான காலத்தில் ஏற்படும் கண் தொடர்பான நோய்களையும் தடுக்க உதவுகிறது.

25
திரை நேரத்தை குறைக்க வேண்டும்

குழந்தைகளிடமிருந்து மொபைல் போன், டேப்லெட், கம்ப்யூட்டர் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றின் பயன்பாடுகளை குறைக்க வேண்டும். அதிகப்படியான திரை நேரம் கண் சோர்வு, வறண்ட கண்கள் மற்றும் கிட்ட பார்வை அபாயத்தை அதிகரிக்கலாம். திரைகளை பயன்படுத்தும் பொழுது 20-20-20 விதியைப் பின்பற்ற வேண்டும். 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, 20 அடி தூரத்தில் உள்ள ஒரு பொருளை 20 வினாடிகளுக்கு பார்க்க வேண்டும். இது கண்களுக்கு ஓய்வு கொடுத்து கண்களின் சோர்வை குறைக்க உதவும்.

35
வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டும்

குழந்தைகளையே வீட்டிற்குள்ளேயே அடைத்து வைப்பது அவர்களின் திரை பார்க்கும் நேரத்தை அதிகப்படுத்தலாம். எனவே வெளிப்புறங்களில் விளையாட ஊக்குவிக்கவும். இயற்கையான சூரிய ஒளி மற்றும் வெளிச்சங்களை பார்ப்பது கண்களின் தசை பிடிப்பை குறைத்து கிட்ட பார்வை ஏற்படுத்துவதை தடுக்கும். வாரத்திற்கு 10 முதல் 14 மணிநேரம் குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டும். இது வைட்டமின் டி உற்பத்திக்கும் உதவும். கையில் போனை கொடுத்து ஒரே இடத்தில் அமர வைக்காமல் மாலை நேரங்களில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று விளையாட வைக்கலாம்.

45
போதுமான வெளிச்சம் மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகள்

குழந்தைகள் படிக்கும் பொழுதும், எழுதும் பொழுதும், விளையாடும் பொழுதும் போதுமான வெளிச்சம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மங்கலான அல்லது குறைவான வெளிச்சம் கண்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தலாம். கூர்மையான பொருட்களை கையாளும் பொழுது கண்களில் பாதுகாப்பு கண்ணாடிகள் அணிந்து கொள்ள வைக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் குழந்தைகளை அழைத்துச் செல்லும் பொழுது தூசியால் கண்கள் சேதப்படாமல் இருப்பதற்கு பாதுகாப்பு கண்ணாடிகளை அணிந்து கொள்ளலாம். சூரிய ஒளியில் செல்லும் பொழுது சன் கிளாஸ் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

55
வழக்கமான கண் பரிசோதனைகள்

குழந்தைகளின் கண் ஆரோக்கியம் குறித்து வழக்கமான கண் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். பள்ளிக்குச் செல்வதற்கு முன்பும், 6 மாதத்திற்கு ஒரு முறையும் கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கண் மருத்துவரால் மட்டுமே கண் பார்வை குறைபாடுகள் அல்லது வேறு ஏதேனும் கண் நோய்கள் இருக்கிறதா என்பதை துல்லியமாக கண்டறிந்து அதற்கு ஏற்ப சிகிச்சை அளிக்க முடியும். ஆரம்ப காலத்தில்யே கண் பிரச்சனைகளை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது நீண்ட கால பார்வைக் கோளாறுகளை தடுக்க உதவும்.

Read more Photos on
click me!

Recommended Stories