
இப்போதெல்லாம் மோசமான உணவு பழக்கம் மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறை காரணமாக குறைந்த ரத்த அழுத்த பிரச்சனையானது மக்கள் மத்தியில் மிகவும் பொதுவாகிவிட்டது. நம்முடைய உடலில் சாதாரண ரத்த அழுத்தம் 120/80 mmHg ஆக இருக்கும். அதுவே, 90/80 mmHg ஆக குறைந்தால் அது குறைந்த இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது. எப்படி உயரத்த அழுத்தம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதுபோல்தான் குறைந்த ரத்த அழுத்தமும் உடலில் பல கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
குறைந்த ரத்த அழுத்தத்தின் காரணமாக தலை சுற்றல், மயக்கம், மங்கலான பார்வை, குமட்டல், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் பலவீனம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதற்கு சில உணவுகளை தங்களது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் குறைந்த இரத்த அழுத்தத்தை சுலபமாக கட்டுப்படுத்தி விடலாம். எனவே இந்த பதிவில் குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் எந்த மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட் உள்ளடக்கம் ரத்த நாளங்களை விரிவுபடுத்தி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது. இதற்கு பீட்ரூட்டை நீங்கள் பச்சையாகவோ அல்லது ஜூஸ் ஆகவோ நீங்கள் விரும்பும் வகையில் உட்கொள்ளலாம்.
உப்பு :
உப்பு அதிகமாக எடுத்துக் கொள்வது எல்லோருக்கும் பரிந்துரைக்கப்படவில்லை இருந்தாலும் குறைந்த ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் உப்பு கொஞ்சம் அதிகமாகவே எடுத்துக் கொள்ளலாம். மேலும் உப்பு நீரை குடிப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கலாம்.
காஃபின் தற்காலிகமாக ரத்த அழுத்தத்தை உயர்த்தும் ஒரு சிறந்த பானம் ஆகும். ஹைப்போடென்ஷன் உள்ள பெண்களுக்கு ரத்த அழுத்தத்தை அதிகரிக்க டீ காபி அல்லது குளிர்பானங்கள் குடிக்கலாம்.
ஆலிவ் எண்ணெய்:
ஆலிவ் எண்ணெயில் இருக்கும் மோனோ அன்சாச்சுரேட்ட கொழுப்புகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்களது உணவு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது.
இதையும் படிங்க: பி.பி அதிகமா இருந்தால் 'காபி' அதிகம் குடிக்காதீங்க! ஆய்வு சொல்வது இதுதான்!
டார்க் சாக்லேட்டில் இருக்கும் ஃபிளானாய்டுகள் இரத்த நாளங்களை விரிவுபடுத்தி ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். எனவே குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் ஒரு துண்டு டார்க் சாக்லேட் சாப்பிடுங்கள். இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
நாட்கள், விதைகள்:
நட்ப்கள் மற்றும் விதைகளில் புரதம் மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. அவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். எனவே குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் பாதாம், வால்நட், சியா விதைகள், ஆளி விதைகள் போன்றவற்றை தங்களது உணவில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நன்மை பயக்கும்.
இதையும் படிங்க: ரத்த அழுத்தம் இருக்கா? உடற்பயிற்சி செய்யும் போது இந்த '3' விஷயங்களை மறக்காதீங்க!
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளன. இது ரத்த அளவை பராமரிக்க உதவும். எனவே தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
முட்டை:
முட்டை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் புரதம், இரும்புச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன அவை குறைந்த ரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து உங்களை பாதுகாக்கும். மேலும் இதில் இருக்கும் வைட்டமின் பி12 ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து ரத்த சோகை மற்றும் இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.