குக்கர் நம்முடைய சமையலை எளிமையாக்கிவிடும். பெரும்பாலான பேச்சிலரின் அறை குக்கர் இல்லாமல் இருக்காது. அவசர சமையலுக்கும் குக்கர் நண்பன். பானையில் நாம் சோறு சமைக்கும் போது அரை மணி நேரம் ஆகிறது என வைத்து கொள்வோம். அதே வேலையை 15 நிமிடத்துக்குள்ளாக குக்கரில் செய்யலாம். சிலிண்டர் செலவும் அதிகம் ஆகாது. நேரம் குறைவு. ஆனால் இதனால் உடலுக்கு எந்தளவுக்கு நன்மை என்பது கேள்விக்குறியே. பிரெஷர் குக்கரில் சமைக்கும்போது எந்த பொருள்களை தவிர்க்க வேண்டும் என்பதை இங்கு காணலாம்.