செக்ஸ் வாழ்க்கையில் கட்டாயம் ட்ரை பண்ணி பார்க்க வேண்டிய ஃபோர்ப்ளே டிப்ஸ்!!

First Published | Jun 28, 2023, 3:37 PM IST

உங்கள் துணையுடன் நெருக்கமாக இருக்க நிறைய வழிகள் உள்ளன. அதில் ஃபோர்ப்ளே எனும் முன்விளையாட்டும் ஒன்று. 

வெறும் உடலுறவில் கிக் இருக்காது. நீங்கள் எப்படிப்பட்ட பாலுறவில் ஈடுபட விரும்புகிறீர்கள் என்ற ஆழமான உணர்விற்கு உங்களை அழைத்துச் செல்லும் திறன் ஃபோர்ப்ளேக்கு தான் உண்டு என செக்ஸ் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் ஃபோர்ப்ளே தம்பதிகளுக்குள் புரிதலை ஏற்படுத்தும். பாலியல் கற்பனைகள், ஆசைகள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்வதில் கணவன் மனைவிக்கு உதவியாக இருக்கும். ஃபோர்ப்ளே எப்படி ஆரம்பிக்க வேண்டும். வாங்க பார்க்கலாம். 

முன்விளையாட்டை (ஃபோர்ப்ளே) படுக்கையறையில் தொடங்கக்கூடாது. இது மெதுவாக, நெருக்கமான முத்தம் மூலம் தொடங்கி படுக்கையில் உடலுறவு வரை கொண்டு செல்ல வேண்டும். ம்ம்.. செக்ஸ்ட்டிங் செய்வது ஃபோர்ப்ளேயின் ஒரு பகுதி. உங்கள் துணையிடம் பாலியல் மெசேஜ் செய்து அவரை தூண்டுவது.. உடலுறவில் நல்ல ஈடுபாட்டை அளிக்கும். உங்கள் துணையை கிண்டல் செய்வதும் இதில் அடங்கும். உங்கள் துணைக்கு பாலியல் விஷயங்களில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் அல்லது அவர்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்பதை மெசேஜில் சொல்லிவிடுங்கள். 

Tap to resize

இதனால் பாலியல் கற்பனைகள் கரைபுரண்டு ஓடும். வேலை முடிந்து நீங்கள் வீட்டிற்கு வரும்போது அவர்கள் உற்சாகமாக இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் ஏற்கனவே அனைத்து செக்ஸ்ட்டிங் மூலம் தூண்டப்பட்டிருப்பார்கள். பாலியல் புகைப்படங்களை விடவும் மெசேஜுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை உணர்ச்சியை தூண்டும். 

அவ்வப்போது உங்கள் துணைக்கு கவர்ச்சியான செல்ஃபியை அனுப்பி வையுங்கள். கவர்ச்சியான உள்ளாடைகள் எந்த நாளிலும் உங்களை பாலியல் மனநிலையில் ஆழ்த்தும். பலர் ஃபோர்ப்ளே என்றாலே விரல் அல்லது வாய்வழி செக்ஸ் என நினைக்கிறார்கள். முன்விளையாட்டை அப்படி சுருக்கமுடியாது. 

அது உங்களையும் துணையையும் அறியும் தருணம். உங்கள் முத்தங்கள், தொடுதல்கள், கிண்டல், சீண்டல் எல்லாமே முன்விளையாட்டுக்குள் வரும். அதன் தொடர்ச்சியாக உடலுறவுக்கு போங்கள். 

Latest Videos

click me!