வாழ்க்கையில் ஒரு தடவையாச்சும் இப்படி முத்தம் கொடுங்க!! உங்க துணை சொக்கிடுவாங்க.. 23 வகை ரொமாண்டிக் முத்தங்கள்!

First Published | Jun 28, 2023, 1:30 PM IST

தம்பதிகள் அடிக்கடி முத்தம் கொடுக்கும்போது அன்பு அதிகமாக வெளிப்படுகிறது. முத்தம் அன்பின் மொழி. அந்த உறவுக்கு ஆயுள் கூடுகிறது. ஒரு ஆய்வில் மனிதன் தன் வாழ்நாளில் 336 மணி நேரத்தை முத்தமிட செலவிடுவதாக தெரியவந்துள்ளது. அன்பும் காதலும் பெருகும் காமம் இச்சைகளில்லாத 23 முத்த வகைகளை இங்கு காணலாம். 

1.  பிரெஞ்சு முத்தம்

உணர்ச்சிகரமான முத்தங்களின் பட்டியலில்  பிரெஞ்சு முத்தத்திற்கு தான் முதலிடம். ஏனெனில் துணையுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தும். உங்கள் துணையின் உதட்டை உங்களுடைய உதட்டில் அழுத்தி முத்தமிட தொடங்கவும். உதட்டைப் பதித்த பின்னர் நாக்கும் நாக்கும் போர் தொடுக்கும் அளவுக்கு முத்தமிடுங்கள். உங்கள் துணையின் உடல் சூட்டை அனுபவித்து கூடுதலாக உதட்டோடு உதடு இணைந்திருங்கள். ஸ்ட்ராங்க் கிஸ்!! 

2. ஒற்றை உதட்டு முத்தம் 

இது உங்கள் துணையிடம் ‘ஐ லவ் யூ’ சொல்ல தகுந்த எளிமையான முத்தம். நெருக்கமாக துணை மீது சாய்ந்து, அவர்களுடைய உதடுகளில் ஒன்றை ரொமான்டிக்காக உறிஞ்சத் தொடங்குங்கள். கடிக்கக் கூடாது. முரட்டுத்தனம் கூடவே கூடாது. மெல்ல ஒரு உதட்டை மட்டும் உறிஞ்சி அதை உங்களுடைய உதடுகளுக்கு இடையில் வைத்து, காதலை வலுப்படுத்துங்கள். 

3. பல்லி முத்தம் (LIZZY KISS) 

பல்லி நாக்கை நீட்டுவது போன்ற முத்தம். இருவரும் நாக்கை நீட்டி உதடுகளைப் பயன்படுத்தாமல் ஒருவருக்கொருவர் முத்தமிட வேண்டும். இது கொஞ்சம் கூச செய்யலாம். அதிக நெருக்கமான தம்பத்திக்கு நாக்கை தழுவி முத்தம் கொடுப்பது உண்மையில் காமத்தின் வடிகாலாக இருக்கும். 

4. அமெரிக்க முத்தம் 

பிரெஞ்சு முத்தம் போலவே அமெரிக்க முத்தமும் ஆழமான முத்தமாகும். இங்கு நாக்கை பயன்படுத்தக் கூடாது. பெண்ணின் இடுப்பைப் பிடித்து, உங்கள் உடலுடன் நெருக்கமாகப் பிடித்து தீவிரமாக முத்தமிடுங்கள். உங்கள் காதலி அல்லது மனைவியின் முதுகில் கை வைத்து ஆதரவாக கொஞ்சம் வளைத்து முத்தத்தில் தொலைந்து போங்கள்! 

Tap to resize

5. ஐஸ் கிஸ் 

சூடானவர்களை கூலாக்கும் முத்தம் தான் ஐஸ் கிஸ். குட்டி ஐஸ்கட்டியை வாயில் போட்டபடி, காதலியின் உதட்டருகே சென்று அவரது இடுப்பை லாவகமாக பிடித்து கொள்ளுங்கள். காதலியின் உதட்டில் உங்கள் வாயை வைத்து ஐஸ்கட்டியை அவருக்கு ஊட்டுவது தான் ஐஸ் கிஸ். பனிக்கட்டி கரையும் வரை முத்தம் கொடுக்க வேண்டும். இதில் நாக்கிற்கு தான் வேலை. இந்த முத்தம் உங்கள் துணை முதுகுத்தண்டில் குளிர்ச்சியை ஏற்படுத்தும்... செம்ம கிஸ்!! 

6. நிப்பிள் முத்தம் 

நிப்பிள் முத்தங்கள் (NIBBLE KISS ) சிற்றின்பத்தை கொடுக்கும். துணையின் கீழ் உதட்டைப் பிடித்து மெதுவாகக் கடியுங்கள். கவனம்.. மிகவும் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். ஏனெனில் வலியை ஏற்படுத்தும். 

7. உதடு ட்ரேஸ் முத்தம்

விளையாட்டுத்தனமான உற்சாகமான முத்தம் உதடு ட்ரேஸ் முத்தம். உங்கள் காதலியின் உதடுகளை உங்கள் நாக்கின் மூலம் மெதுவாக முத்தமிடவும். உதட்டை உங்களுடைய எச்சில் நனைக்கும் போது உடலில் சிற்றின்ப நரம்புகள் கிளர்ச்சி அடையும். உங்கள் துணை அந்த இன்பத்திற்கு ஏங்குவார்கள். 

8. பட்டாம்பூச்சி முத்தம்

உங்கள் துணையுடன் நெருக்கமாக அமருங்கள். எவ்வளவு நெருக்கமாக? உங்களுடைய கண் இமைகள் அவர்களைத் தொட வேண்டும். அவர்களின் கன்னத்தில் உங்கள் கண் இமைகளை சிமிட்டி, அவர்கள் உடல் கூசி வெட்கத்தால் சிவப்பதைக் கவனியுங்கள். இந்த முத்தம் அழகானது, வேடிக்கையானதும் கூட!

9. லிப் கிளாஸ் கிஸ் 

இந்த முத்தம் எல்லோருக்கும் பிடிக்குமான என தெரியவில்லை. லிப் கிளாஸ் கிஸ் (THE LIP GLOSS KISS) என்பது மிகவும் விளையாட்டுத்தனமான முத்தம். உங்கள் துணையின் உதட்டில் லிப் கிளாஸ் பூசிய பிறகு அதன் கடைசி தடயம் கூட இல்லாமல் உதட்டை தீவிரமாக முத்தமிடுங்கள். உங்கள் துணை உதட்டில் பூசிய லிப் கிளாஸ் ​​சுவை மூலம் அது என்ன வகை என யூகிக்கச் சொல்வதன் அந்த தருணத்தை சுவாரஸ்யமாக்குங்கள். 

10. ஸ்பைடர்மேன் முத்தம்

திரைப்படத்தில் வரும் இந்த வகை முத்தம் உங்கள் துணையை கவரும். இந்த முத்தம் கொடுக்க முதலில் துணையின் முகம் தலைகீழாக இருக்க வேண்டும். உங்கள் மேல் உதடு அவர்களின் கீழ் உதட்டை முத்தமிட வேண்டும். 

11. காது மடல் முத்தம்

உதட்டில் தான் முத்தம் கொடுக்க வேண்டும் என்று யார் சொன்னா? உங்கள் காதலியின் காது மடல்களில் முத்தமிடுங்கள். காதுகள் மீது நாக்கை வைத்து தழுவி உதட்டால் உறிஞ்சுங்கள். காது மடலை மெதுவாக, கீழ்நோக்கி இழுக்க மறக்காதீர்கள். இந்த குறிப்பிட்ட பகுதியில் நரம்பு முனைகள் இருப்பதால், உங்கள் துணை அதை விரும்புவார்.

12. ஹிக்கி (HICKEY)

ஹிக்கி (காதல் கடி) என்பது உங்கள் துணையை போதுமான அளவு கடினமாக மெல்ல கடித்து உறிஞ்சும் போது தோலில் ஏற்படும் சிவப்பு அடையாளமாகும். அதைச் செய்வதற்கு உங்கள் துணையின் விருப்பமும் முக்கியம். சிலர் அதை மகிழ்ச்சியாகவும், சிலர் வேதனையாகவும் உணரலாம். 

13. ஏர் கிஸ்

இந்த முத்தம் அருகில் உள்ளவர்களை வாழ்த்துவதற்காக செய்யப்படுகிறது. உங்கள் கன்னத்தை மற்றவரின் கன்னத்திற்கு அருகே வைத்து முத்தமிடும் சத்தம் எழுப்பினால் போதும்.. அவ்வளவுதான். 

14. சர்க்கரை முத்தம் 

ஐஸ்கிரீம், சாக்லேட் போன்ற உங்களுக்கு விருப்பமான இனிப்பு பண்டங்களை வாயில் வைத்து முத்தமிடுங்கள். இனிப்பு மெல்ல இருவர் வாயிலும் செல்லும் வகையில் முத்தமிடுங்கள்.  

15. நீருக்கடியில் முத்தம்

உங்கள் துணைக்கும் உங்களுக்கும் நீச்சல் தெரிந்தால், நீருக்கடியில் சில நொடிகள் இருப்பது குறித்த தந்திரம் தெரிந்தால் நீருக்கடியில் முத்தமிடுங்கள். துணையில் ஒருவர் நீருக்கடியில் மூச்சைப் பிடித்துக் கொள்வார். இன்னொருவர் அவர்களுக்குக் சுவாசம் கொடுக்கிறார். 

16. ட்ரிங் கிஸ் 

சுவாரசியமான முத்தம். இதற்கு துணையில் ஒருவர்  தங்களுக்குப் பிடித்த பானத்தை பருக வேண்டும். முத்தமிடும்போது இந்த பானத்தை உங்கள் துணையின் வாய்க்கு பரிமாற முயற்சி செய்ய வேண்டும். 

17. எஸ்கிமோ கிஸ் (ESKIMO KISS) 

எஸ்கிமோ கலாச்சாரத்தில் தோன்றிய முத்தம். உங்கள் காதலியின் மூக்கிற்கு எதிராக உங்கள் மூக்கை முன்னும் பின்னுமாக தேய்க்க வேண்டும். இடையில் முத்தமிடுவதன் மூலம் நெருக்கத்தை அதிகரிக்கவும். மூக்கும் மூக்கும் நேரெதிராக உரசும் போதும் மெதுவாக உதடுகளை ஒன்றின் மீது ஒன்றாக பூட்டிக் கொள்ளுங்கள். பின்னர் மென்மையாக கன்னத்திலோ, நெற்றியிலோ முத்தமிடுங்கள். இந்த முத்தத்தை எஸ்கிமோ முத்தம் என்பார்கள். 

18. வெற்றிட முத்தம் 

உங்கள் துணையின் வாயிலிருந்து காற்றை உறிஞ்சுவதே இந்த முத்தத்தின் நோக்கம். தம்பதிகள் ஒருவருக்கொருவர் வாயில் இருந்து காற்றை உறிஞ்சி, வெற்றிடத்தை உருவாக்கும் போது முத்தமிட வேண்டும். 

19. மிட்டாய் முத்தம்

உங்களது குழந்தைப் பருவ நினைவுகளை மீட்கும் முத்தம். தம்பதிகள் இருவரும் பிடித்த மிட்டாயை வாயில் வைத்து பிரெஞ்சு முத்தமிடும்போது அவற்றை பரிமாறிக் கொள்கிறார்கள். ஒரு துணை புதினா சுவையையும் மற்றவர் ஆரஞ்சு சுவையும் தேர்வு செய்யலாம். முத்தத்தின் முடிவில் உங்கள் வாயில் என்ன சுவையிருக்கும்? முயன்று தான் பாருங்களேன். 

20. கன்னம் முத்தம்

உங்கள் கையால் துணையின் கன்னத்தை மெதுவாகப் பிடித்து, கொஞ்சம் சாய்ந்த நிலையில் முத்தமிட்டு மகிழுங்கள்.

21. வாம்பயர் முத்தம்

உங்களுக்குள் இருக்கும் காட்டேரியை தூண்டி விடுங்கள். துணையின் கழுத்தில் ஆழமான முத்தம் பதித்து மெதுவாக கடியுங்கள். நீங்கள் கொஞ்சம் முரட்டுத்தனமாக அன்பைக் கொடுக்கலாம். இது ஹக்கி போன்ற சிவந்த அடையாளத்தை விடக்கூடும் என்பதால், உங்கள் துணையிடம் கேட்டு முத்தமிடுங்கள்.

22. தாடை முத்தம்

இது உங்கள் துணையை பித்து பிடிக்க வைக்கும் முத்த பாணியாகும். துணையின் தாடையின் அடிப்பகுதியில் - அவர்களின் கழுத்து பகுதியில் முத்தமிடத் தொடங்குங்கள். தாடைக்கும் கழுத்துக்கும் இடையே முத்தங்களை பொழிந்து.. காது மடல் மற்றும் நெற்றியில் முத்தமிட்டு அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுங்கள். 

23. ஈர முத்தம் 

ஈரமான முத்தம் எல்லோருக்கும் விருப்பத்தை ஏற்படுத்தாது. உங்கள் நாக்கைப் பயன்படுத்தாமல் செய்யலாம். முத்தமிடும்போது எச்சில்படும் அனுபவமாக இருக்கும். இந்த முத்தமிடும் போது சில வினாடிகள் உதடுகளை ஒன்றாக வைத்து மூடிக்கொண்டு, ஒற்றை உதடு முத்தங்களுடன் சிறிது கடித்துக் கொண்டே இருங்கள். மெய் மறக்க வைக்கும். 

Latest Videos

click me!