நண்டில் கால்சியம், புரதம், துத்தநாகம், தாமிரம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகியவை உள்ளன. கால்சியம் நிறைந்திருப்பதால் நண்டு சாப்பிடுபவர்களுக்கு எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. புரதம் நிறைந்த கடல் உணவுகளில் ஒன்றாக நண்டு விளங்குகிறது. இதில் இருக்கும் துத்தநாகம் செல்களின் வளர்ச்சிக்கும், காயங்களை குணப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இதில் உள்ள தாமிரம் இரும்புச் சத்தை உறிஞ்சுவதற்கும், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கும் உதவுகிறது. மீன்களைப் போலவே நண்டுகளும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தவை. நண்டு சாப்பிடுபவர்களுக்கு ஞாபக மறதி பிரச்சனை குறையும் என சில ஆய்வுகள் கூறுகின்றன.