கன்னித்தன்மை என்பது முதல் தடவை உறவு வைத்து கொள்ளும்போது பெண்ணுறுப்பில் இருந்து ரத்தம் வருவது என பலர் கருதுவதால் வரும் சிக்கல் இது. மருத்துவரீதியாக இந்த விஷயத்தை அணுகும்போது, எல்லா பெண்களுக்கும் இவ்வாறு நடப்பது இல்லை என தெரிய வருகிறது. விளையாட்டு வீராங்கனைகள், ஜிம்னாஸ்டிக்ஸ் செய்பவர்கள், சைக்கிள் ஓட்டும் பெண்கள், அதிக உடல் உழைப்பு கொண்டவர்களுக்கு பெண்ணுறுப்பில் மாற்றம் ஏற்படக்கூடும். இது போன்ற பாலியல் அல்லாத நிகழ்வுகளால் கூட பெண்களுக்கு முதல் உறவு வைத்து கொள்ளும் போது ரத்தம் வருவதில்லை என்கிறது மருத்துவம்.