Eye Twitching: கண் இமைகள் அடிக்கடி துடிக்குதா? கவனம்.. இந்த ஆபத்தான நோயின் அறிகுறியாக இருக்கலாம்.!

Published : Aug 17, 2025, 12:33 PM IST

கண் இமைகள் துடிப்பது என்பது பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான நிகழ்வாகும். இது பெரும்பாலும் பாதிப்பில்லாததாக இருக்கும் போதிலும், சில சமயங்களில் இது ‘கண் பக்கவாதம்’ போன்ற தீவிர உடல் நலப் பிரச்சினைகளில் அறிகுறியாக இருக்கலாம்.

PREV
15
கண் பக்கவாதம் (Eye Stroke)

நம்மில் பலருக்கும் திடீரென கண் இமைகள் வேகமாக துடிக்கும். கண் இமைகளில் திடீரென ஏற்படும் தசைப்பிடிப்பு அல்லது சிறிய அசைவுகள் காரணமாக இது ஏற்படலாம். பொதுவாக அதிக மன அழுத்தம், களைப்பு, காஃபின் அதிகமாக உட்கொள்வது, தூக்கமின்மை, கண் வறட்சி போன்றவற்றால் கண்களில் துடிப்பு அதிகரிக்கிறது. இது சில நாட்களில் தானாகவே சரியாகிவிடும். ஆனால் இது அடிக்கடி நிகழ்வது என்பது கவனிக்கப்பட வேண்டிய பிரச்சனையாகும். இது அடிக்கடி நிகழ்ந்தால் அல்லது மற்ற அறிகுறிகளுடன் தோன்றினால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இந்தப் பதிவில் கண் பக்கவாதம் என்றால் என்ன?, அதன் அறிகுறிகள், ஆபத்து காரணிகள், தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

25
கண் பக்கவாதம் என்றால் என்ன?

கண் பக்கவாதம் என்பது மருத்துவ ரீதியாக ‘ரெட்டினால் ஆர்டரி ஒக்லூஷன்’ என்று அழைக்கப்படுகிறது. கண்ணின் விழித்திரையில் (ரெட்டினா) உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு அல்லது ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் குறைவதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இதன் காரணமாக விழித்திரைக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் பார்வை பாதிக்கப்படுகிறது. உடனடியாக சிகிச்சை செய்யப்படாவிட்டால் நிரந்தர கண் பார்வை இழப்பு ஏற்படலாம். இமைகள் வேகமாக இமைப்பது அல்லது கண்கள் துடிப்பது மட்டுமே கண் பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்காது. ஆனால் பின்வரும் அறிகுறிகளுடன் இணைந்து தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். கண் பக்கவாதம் ஏற்படுவதற்கு முன்னர் சில ஆரம்ப அறிகுறிகளை கண்கள் காட்டும்.

35
கண் பக்கவாதம் ஏற்படுவதற்கான அறிகுறிகள்

ஒரு கண்ணில் திடீரென பார்வை மங்குதல் அல்லது ஒரு கண்ணில் பார்வை இழப்பு, பார்வை புலத்தில் குறைபாடு, பார்வையில் கரும்புள்ளிகள், நிழல்கள் அல்லது ஒரு பகுதியை பார்க்க முடியாமல் கண்ணில் அசௌகரியம் அல்லது அழுத்தம் ஏற்படுவது போன்ற உணர்வு, தலைவலி, கண்ணைச் சுற்றி வலி, ஒரு கண்ணில் மட்டும் ஏதாவது ஒரு பிரச்சனை ஆகியவை இதன் ஆரம்பகால அறிகுறிகளாகும். பெரும்பாலும் கண் பக்கவாதம் என்பது ஒரு கண்ணை மட்டுமே வெகுவாக பாதிக்கிறது. கண் பக்கவாதத்திற்கு மேலும் சில காரணிகளும் காரணமாகிறது. கட்டுப்படாத நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், அதிக கொலஸ்ட்ரால், புகைப் பிடித்தல், 50க்கு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கண் பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்துகள் அதிகம்.

45
கண் பக்கவாதத்தை ஏற்படுத்தும் ஆபத்து காரணிகள்

கண் இமைப்பது அல்லது கண் துடிப்பது என்பது பொதுவாக பாதிப்பு இல்லாதது என்றாலும் தொடர்ந்து நீடித்தால் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட அறிகுறிகளுடன் தோன்றினால் உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும். கண் பக்கவாதத்தை கண்டறிவதற்கு மருத்துவர்கள் விழித்திரை பரிசோதனை ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் பிற பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். கண் பக்கவாதத்தை தடுப்பதற்கு ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுதல், நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வருதல், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், புகைப்பிடிப்பதை தவிர்த்தல், தவறாமல் உடற்பயிற்சி செய்தல், கண் பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ளுதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். கண் பக்கவாதம் என்பது ஒரு ஆபத்தான நோய் அறிகுறியாகும். இதன் அறிகுறிகளை புறக்கணித்தல் என்பது மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தலாம்.

55
தாமதிக்காமல் மருத்து உதவியை நாடுங்கள்

கண் துடிப்பு ஒரு வாரத்திற்கு மேலாக நீடிப்பது, கண்கள் மற்றும் அதைச் சுற்றி வீக்கம், சிவத்தல், இமைகளில் இழுப்பது போன்ற உணர்வு, முகத்தின் மற்ற பாகங்கள் குறிப்பாக ஒரு பக்கம் இழுப்பது, மேல் கண்ணிமைகளில் வலி, கண் வலி ஆகியவை ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவ உதவியை நாடுங்கள். கண் இமைப்பு பெரும்பாலும் சாதாரணமாக இருந்தாலும் அது கண் பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்பதை மறந்துவிடக்கூடாது. ஆரம்ப கால அறிகுறிகளை அடையாளம் கண்டு சரியான நேரத்தில் மருத்துவ உதவி பெறுவது என்பது பார்வையை பாதுகாக்க உதவும். உங்கள் கண் ஆரோக்கியத்தை புறக்கணிக்காமல் குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்களை பரிசோதனை செய்து கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories