Diwali : பண்டிகை வந்தாலே நமக்கு சந்தோஷம் அதிகமா இருக்கும், அது கூடவே நாக்கு ருசியும் கூடிடும். இஷ்டத்துக்கு சாப்பிடுவோம். பார்ட்டி மூட்ல எல்லா விதமான ட்ரிங்க்ஸும் குடிப்போம். அதுக்கப்புறம் தான் ஒவ்வொரு பிரச்சனையா ஆரம்பிக்கும்.
தமிழர்களின் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. தீபாவளி நேரத்துல நிறைய பார்ட்டிகள் நடக்கும். பண்டிகை சந்தோஷத்துல நம்ம ஆரோக்கியத்தை பத்தி பெருசா கண்டுக்க மாட்டோம். இதனால பண்டிகை முடிஞ்சதும் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்ல இருந்து, சளி, காய்ச்சல் வரைக்கும் சில வியாதிகள் நம்மள தொந்தரவு பண்ணும். மலச்சிக்கல், வயிறு வலி, வயிறு உப்புசம் இதெல்லாம் சகஜம். தீபாவளிக்கு அப்புறமும் நம்ம ஆரோக்கியமா இருக்கணும்னா சில டிப்ஸை ஃபாலோ பண்ணனும்.
25
தூக்கத்துல எந்த காம்ப்ரமைஸும் வேணாம்
நல்ல ஆரோக்கியத்துக்கு தூக்கம் ரொம்ப முக்கியம். பொதுவா தீபாவளி நேரத்துல பூஜை, சொந்தக்காரங்க வீட்டுக்கு வர்றது, அவங்க வீட்டுக்கு போறதுன்னு இருப்போம். அதே மாதிரி நிறைய பார்ட்டிகளுக்கும் மக்கள் போவாங்க. இதனால ஒரு நாளைக்கு வெறும் 2- 3 மணி நேரம் தான் தூங்குவாங்க. இது நம்ம ஆரோக்கியத்தை பாதிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட சில பிரச்சனைகளுக்கும் இது காரணமா அமையலாம். அதனால பண்டிகை நேரத்துலயும் தூக்கத்துல எந்த காம்ப்ரமைஸும் பண்ணிக்காதீங்க. நேரம் கிடைக்கும் போது தூங்க மறக்காதீங்க.
35
நிறைய தண்ணி குடிங்க
பண்டிகைனாலே எண்ணெயில பொரிச்ச சாப்பாடு, மசாலா சாப்பாடு, காக்டெய்ல், கோல்ட் ட்ரிங்க்ஸ் சாப்பிடுறது சகஜம். இந்த சாப்பாட்டை அதிகமா சாப்பிடுறதால உடம்புல தண்ணி சத்து குறையும். உடம்பு டீஹைட்ரேட் ஆகிடும். உடம்புல தண்ணி சத்து குறைய குறைய வயிறு உப்புசம் பிரச்சனை ஆரம்பிக்கும். பண்டிகை வேலை எவ்வளவு இருந்தாலும், எண்ணெயில பொரிச்ச சாப்பாட்டை எவ்வளவு சாப்பிட்டாலும் தண்ணி குடிக்க மறக்காதீங்க. ஒரு நாளைக்கு 2 -3 லிட்டர் தண்ணி குடிங்க.
நிறைய பேருக்கு தண்ணி குடிக்க கஷ்டமா இருக்கும். அவங்க பழங்கள் சாப்பிடலாம். நிறைய தண்ணி சத்து இருக்குற பழங்களை நீங்க சாப்பிடலாம். இல்லனா பழ ஜூஸ் செஞ்சு குடிக்கலாம். நீங்க கிர்ணி பழம், அன்னாசி, தர்பூசணி, எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை மாதிரி தண்ணி சத்து இருக்குற பழங்களை சாப்பிடலாம். இந்த பழங்கள் வயிறு உப்புசம் பிரச்சனையை குறைக்கிறது கூடவே உடம்புல தண்ணி அளவையும் அதிகமாக்கும். பழங்கள்ல இருந்து நம்ம உடம்புக்கு தேவையான அளவு வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து கிடைக்கும்.
55
டயட் மேல கவனம் இருக்கட்டும்
செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம். அதனால செரிமானத்தை அதிகமாக்கும் மற்றும் குடல் ஆரோக்கியத்துக்கு ஏத்த உணவுகளை நீங்க சாப்பிடணும். தயிர், மோர், சூப் உட்பட செரிமானத்தை சுலபமாக்கும் உணவுகளை சாப்பிடுங்க.
ஆல்கஹால்ல இருந்து தள்ளியே இருங்க : தீபாவளினாலே பார்ட்டி சகஜம். நண்பர்களோடு பார்ட்டிக்கு போறவங்க ஆல்கஹால் குடிக்காம இருக்கறது நல்லது. ஆல்கஹால்ல வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும் பொருட்கள் இருக்கும். இத அதிகமா குடிக்கறதால வயிறு உப்புசம் பிரச்சனை இன்னும் அதிகமாகும்.
கஃபீன் சாப்பிடுறத குறைங்க : பண்டிகை நேரத்துல வீட்ல இருக்குற மக்கள் ஒரு நாளைக்கு மூணு நாலு தடவை காபி குடிப்பாங்க. அதிக அளவுல கஃபீன் குடிக்கறதால தூக்க பிரச்சனை உங்களை தொந்தரவு பண்ணும்.