Stomach bloating: வயிறு உப்பசத்திற்கு உடனடி பலன் கிடைக்க இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க!

First Published | Mar 1, 2023, 10:12 PM IST

நீங்கள் வயிறு உப்புசத்தை தவிர்க்க நினைத்தால், உங்கள் டயட்டில் கீழ்க்கண்ட உணவுகள் மற்றும் பானங்களை சேர்த்து கொள்வது அவசியம்.

stomach pain

வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை நம்மில் பலரும் பல சந்தர்ப்பங்களில் எதிர்கொள்ள நேரிடுகிறது. சில நேரங்களில் வாயு மற்றும் வலியுடன் உண்டாகும் ஒரு அசௌகரிய நிலை தான் வயிறு உப்புசம் எனப்படுகிறது. நம்முடைய வயிற்றில் அதிகப்படியான வாயு அல்லது தண்ணீர் இருக்கும் போது வயிறு உப்புசம் ஏற்படுகிறது. இது வயிற்றில் அசௌகரியத்தை உண்டாக்கும் என்பது மட்டுமின்றி, தொடர்ந்து இதுபோன்ற வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படுவது, அடிப்படை உடல்நலப் பிரச்சனைகளின் அடையாளமாக கூட இருக்கலாம். வயிற்று உப்புசமானது, உணவுப் பழக்கவழக்கங்களுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளது.

வயிற்று உப்புசம்

பால், காலிஃப்ளவர் அல்லது ப்ரோக்கோலி போன்ற பல உணவுகள் வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும் என்பதால், நாம் எதனை சாப்பிட வேண்டும், எதனை சாப்பிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். உப்புசத்திற்கு வழிவகுக்கும் மிகவும் முக்கியமான காரணிகளில் ஒன்று குடல் வீக்கம். காற்று மாசுபாடு, புகைபழக்கம், பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உண்பது, மன அழுத்தம் மற்றும் உறக்கமின்மை போன்றவை குடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. முடிவில் இது உப்புசம் போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கு பாதை அமைத்து விடுகிறது. நீங்கள் வயிறு உப்புசத்தை தவிர்க்க நினைத்தால், உங்கள் டயட்டில் கீழ்க்கண்ட உணவுகள் மற்றும் பானங்களை சேர்த்து கொள்வது அவசியம்.


avocado

அவகடோ

என்னற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அவகடோ பழம் ஃபோலேட் (வைட்டமின் பி9), வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகியவற்றின் மிகச் சிறந்த மூலமாகும். இந்தப் பழத்தில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், உடலில் சோடியம் சமநிலையை ஒழுங்குபடுத்தி, வயிற்றில் தண்ணீர் தேங்குவதை தடுக்கும். அவகடோவில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் உப்புசத்தை தடுக்க உதவி புரிகிறது.
 

வெள்ளரி

ஒரு பச்சை வெள்ளரியில் ஏறக்குறைய 95% தண்ணீர் நிறைந்துள்ளது. இது  உங்கள் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவும் ஒரு சிறந்த உணவாகும். வெள்ளரிக்காய் வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது. மேலும், குடல் இயக்கத்திற்கு உதவுகின்ற நார்ச்சத்தும் வெள்ளரிகளில் நிறைந்திருக்கிறது.

அன்னாசிப் பழம்

அன்னாசியில் புரோமிலைன் எனும் நொதி இருக்கிறது. இது சரியான செரிமானத்தை ஊக்குவிப்பதன் மூலமாக, வயிறு உப்புசத்தை குறைக்க உதவுகிறது. மேலும் அன்னாசி வயிற்றில் இருக்கும் புரதங்களை உடைத்து, செரிமானத்திற்கு உதவுகின்ற இயற்கையான செரிமான நொதியை கொண்டுள்ள நீர் அடர்த்தி நிறைந்த பழமாகும்.

பெருஞ்சீரக

சோம்பு எனும் பெருஞ்சீரகத்தில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இவை வாயுவை வெளியேற்றவும், குடல் தசைகளை தளர்த்தவும் உதவுகிறது. மேலும் செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் க்ரீன் சிக்கன் டிக்கா! எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க!

கிரீன் டீ

கிரீன் டீ-யை குடிப்பது உங்கள் உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்கவும், உடலில் தண்ணீர் தேங்குவதை தடுக்கவும் உதவுகிறது. இது, ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களுக்கு எதிராகப் போராடுவது மட்டுமின்றி, உப்புசத்திற்கு எதிராக வேலை செய்கிறது. கிரீன் டீ-யில் இருக்கும் காஃபின் மூலப்பொருள் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது.

Latest Videos

click me!