தினமும் 1 கிளாஸ் மாதுளை ஜூஸ்.. எடை சர்னு குறையும்!!

Published : Feb 14, 2025, 04:56 PM IST

Pomegranate Juice For Weight Loss : மாதுளை ஜூஸ் குடிப்பதன் மூலம் உடல் எடையை எப்படி குறைக்க முடியும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

PREV
15
தினமும் 1 கிளாஸ் மாதுளை ஜூஸ்.. எடை சர்னு குறையும்!!
தினமும் 1 கிளாஸ் மாதுளை ஜூஸ்.. எடை சர்னு குறையும்!!

மாதுளை ஜூஸ் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஆரோக்கிய பானமாகும். இதில் இருக்கும் நுகர்வு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மாதுளை மருத்துவ குணம் நிறைந்துள்ளது. அதாவது வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் பி, நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்களின் சக்தியாக மாதுளை உள்ளது. தினமும் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடித்து வந்தால் பல நோய்கள் வராது மற்றும் செரிமானமும் சீராக இருக்கும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

25
மாதுளை ஜூஸ் எடையை குறைக்க எப்படி உதவுகிறது?

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு மாதுளை ஜூஸ் நன்மை பயக்கும் தெரியுமா? ஆம், இது உங்களது எடையை குறைக்க உதவும். ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாக உள்ளன. இது தவிர மாதுளை ஜூஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளன. இது உங்களது வயிற்றை நீண்ட நேரம் நிரம்பி வைத்திருக்கும். இதை குடித்த பிறகு உங்களுக்கு பசி எடுக்காது. அதாவது ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட தவிர்க்க உதவும்.

35
மாதுளை ஜூஸ்:

மாதுளை ஜூஸில் இருக்கும் சர்க்கரை, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுடன் இணைந்து இருப்பதால் அது உடலில் எளிதில் உடைந்து மிக உன் எளிதாக ஜீரணம் ஆகும். மேலும் இந்த ஜூஸ் உங்களுக்கு தேவையான ஆற்றலை தருகிறது மற்றும் உங்களை ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. முக்கியமாக மாதுளை ஜூஸ் குடித்த பிறகு தேவையற்ற எதையும் சாப்பிட வேண்டும் என்று ஆசை வராது. இதன் காரணமாக தான் மாதுளை ஜூஸ் எடை இழப்புக்கு ரொம்பவே நல்லது என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க:  Pomegranate Juice : தினமும் ஒரு கிளாஸ் 'மாதுளை ஜூஸ்' குடித்து வந்தால் என்ன நடக்கும் தெரியுமா..?

45
ஆக்சிஜனேற்றுகள் நிறைந்துள்ளது:

மாதுளையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இது தவிர மாதுளை ஜூஸ் எடையை குறைக்கவும் உதவுகின்றது.

இதையும் படிங்க:  மாதுளை நல்லது தான்! ஆனா தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

55
மாதுளை ஜூஸ்:

மாதுளை ஜூஸில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக உதவுகிறது. இது தவிர குடல் ஆரோக்கியத்தையும் பராமரிக்கும். மேலும் மாதுளை ஜூஸ் பொட்டாசியத்தின் சிறந்த மூலமாகவும் இந்த ஜூஸ் ஆரோக்கியமான தசை செயல்படும் மற்றும் இதய துடிப்புக்கு நன்மை பயக்கும். எடை இழப்புக்கு மாதுளை ஜூஸ் தவிர சீரான உணவு மற்றும் உடற்பயிற்சியும் அவசியம் என்று நிபுணர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories