Street Dogs : ரேபிஸ் மட்டுமல்ல தெரு நாய்களால் எத்தனை நோய்கள் பரவும் தெரியுமா?

Published : Jul 02, 2025, 05:15 PM IST

தெரு நாய்கள் ரேபிஸை மட்டுமே பரப்புவதாக நாம் பலரும் நினைத்துக் கொண்டிருப்போம். ஆனால் அவை இன்னும் பிற நோய்களையும் பரப்புகின்றன. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
15
List of Diseases Spreading by Street Dogs

தெரு நாய்கள் பெரும்பாலும் அவற்றின் எச்சில், கடி, நகக் கீறல்கள், மலம், சிறுநீர், ஒட்டுண்ணிகள் மூலம் நோய்களை பரப்புகின்றன. அதில் மிகவும் ஆபத்தான ஒரு நோயாக ரேபிஸ் விளங்கி வருகிறது. தெருநாய்களின் உடலில் இருக்கும் ரேபிஸ் வைரஸ், மனிதர்களை கடிக்கும் பொழுது அது மனிதர்களின் உடலுக்குள் நுழைகிறது. இது நாய்கள் கீறுவதன் மூலமாகவும் மனித உடலுக்குள் நுழையலாம். கடுமையான காய்ச்சல், தலைவலி, வலிப்பு, தண்ணீரைக் கண்டு பயம், ஒளியைக் கண்டு பயம், மனக்குழப்பம், பக்கவாதம் ஆகிய அறிகுறிகள் தோன்றலாம். நோய் முற்றினால் குணப்படுத்துவது என்பது சாத்தியமற்றது. நாய்களுக்கு தடுப்பூசி போடுவது, நாய் கடித்துவிட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது ஆகியவை ரேபிஸில் இருந்து பாதுகாக்கும்.

25
டெட்டனஸ் மற்றும் ரிங்வோர்ம்

பொதுவாக மண் மற்றும் விலங்கு மலத்தில் காணப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தீவிரமான நோய்தான் டெட்டனஸ். இது தெரு நாய் கடி அல்லது கீறல் மூலம் இந்த பாக்டீரியா மனிதர்களின் உடலுக்குள் நுழைகிறது. தாடைகள் இறுக்கம், அதிக தசைப் பிடிப்பு, வலிப்பு ஏற்படுதல், விழுங்குதலில் சிரமம், காய்ச்சல் ஆகியவை இந்த நோய் பாதிப்பின் அறிகுறிகள் ஆகும். தடுப்பூசி போட்டுக் கொள்வது இந்த நோயிலிருந்து உங்களை பாதுகாக்கும். பாதிக்கப்பட்ட நாய்களை தொடுவதன் மூலம் அல்லது நாய்கள் படுத்திருந்த இடங்களில் இருந்த பூஞ்சைகள் மூலமாக பரவும் ஒருவகை பூஞ்சை தொற்று தான் ரிங்வோர்ம். வட்ட வடிவ அரிப்புடன் கூடிய சிவப்பு தட்டுகள் தோளில் தோன்றுவது, தலை, உடல் நகங்களில் ஏற்படும் தீவிரத் தொற்று ஆகும். நாயை தொட்ட பின் கைகளை சுத்தம் செய்வது, பாதிக்கப்பட்ட நாய்களுக்கு சிகிச்சை அளிப்பது இந்த நோயிலிருந்து தடுக்கும் முறைகள் ஆகும்.

35
லெப்டோஸ்பைரோசிஸ் மற்றும் ஸ்கேபிஸ்

நாய்களின் சிறுநீர் மூலமாக பரவும் ஒரு நோய்தான் லெப்டோஸ்பைரோசிஸ். இது பாதிக்கப்பட்ட நாயின் சிறுநீர் கலந்த மண், நீர், உணவு வழியாக மனிதர்களின் உடலுக்குள் நுழைகிறது. அதிக காய்ச்சல், தலைவலி, உடல் வலி, மஞ்சள் காமாலை, சிறுநீரக பாதிப்பு இதன் அறிகுறிகள் ஆகும். நாய்களுக்கு தடுப்பூசி போடுவது, சுகாதாரமாக இருப்பது, தேங்கி இருக்கும் நீர்நிலைகளை தவிர்ப்பது தடுப்பு முறைகளாகும். அடுத்ததாக நாயால் வரும் ஒரு சிரங்கு பாதிப்பு தான் ஸ்கேபிஸ். இது நுண்ணிய உண்ணி மூலம் தோலில் ஏற்படும் ஒரு ஒட்டுண்ணி தொற்று ஆகும். பாதிக்கப்பட்ட நாயுடன் நேரடி தொடர்பு மூலம் இந்த உண்ணிகள் மனித தோலுக்குள் பரவலாம். குறிப்பாக இரவில் கடுமையான அரிப்பு, சிவப்பு நிற தடிப்புகள், கொப்புளங்கள் ஏற்படும். உண்ணிகள் பாதிக்கப்பட்ட நாயிடமிருந்து விலகி இருப்பது இந்த பாதிப்பை தவிர்க்க உதவும்.

45
காப்ஸ்னோசைட்டோபேகாகேனிமோர்ஸ்

நாயின் எச்சியில் உள்ள பாக்டீரியாவால் ஏற்படும் அரிதான அதே சமயம் தீவிரமான தொற்று தான் லிச்சிங். இது காப்ஸ்னோ சைட்டோபேகா கேனிமோர்ஸ் என்கிற பாக்டீரியாவால் பரவுகிறது. நாயின் எச்சில் மனித தோலில் உள்ள திறந்த காயம், கீறல்கள், கண், மூக்கு, வாய் வழியாக உடலுக்கு நுழையும் போது தீவிர பாதிப்பு ஏற்படுகிறது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சில அரிதான சந்தர்ப்பங்களில் இரத்த ஓட்ட தொற்று (செப்சிஸ்), உறுப்பு செயலிழப்பு, ஆகியவை ஏற்படலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் நாயுடன் நெருங்குவதை தவிர்த்தால் இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். தெரு நாய்களுக்கு பல்வேறு வகையான குடல் புழுக்கள் இருக்கலாம். இவை மனிதர்களுக்கும் பரவலாம். பாதிக்கப்பட்ட நாய்கள், அதை படுத்துறங்கிய மண்ணை தொட்ட பின் கைகளை சரியாக கழுவாமல் உணவு உட்கொள்வதன் வழியாக மனிதர்களுக்கு நுழையலாம்.

55
பிற தொற்றுக்கள்

இது மட்டுமல்லாமல் நாய்களுக்கு ஏற்படும் பேன், உண்ணி போன்ற ஒட்டுண்ணிகளும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கலாம். எனவே தெரு நாய்களிடமிருந்து எப்போதும் விலகியே இருக்க வேண்டும். நாய்களை தொட நேர்ந்தால் கைகளை சோப்பு தண்ணீரால் கழுவ வேண்டும். நாய் கடி அல்லது கீறல் ஏற்பட்டால் முதலில் காயத்தை நன்கு கழுவி, பின்னர் மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் மூலம் தெரு நாய்களால் பரவும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories