diabetes
இந்தியாவில் நீரிழிவு நோய் மிகவும் பொதுவான பிரச்னையாக உள்ளது. பலரும் இந்நோயுடன் போராடுவது மட்டுமில்லாமல், ஒருவருடைய உடலில் ஏற்படக்கூடிய பல பக்க விளைவுகளையும் சமாளிக்க வேண்டியுள்ளது. அதில் முக்கியமான பிரச்னை பார்வை திறனில் குறைபாடு ஏற்படுவது. நீரிழிவு பிரச்னையால் பார்வை திறன் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த பிரச்னைக்காக பல ஆண்டுகள் அவர் மருந்து எடுத்து வருவதன் காரணமாக, அது அவர்களுடைய கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகளில் நரம்புகளை பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. நீரிழிவு என்பது ஒரு சிக்கலான வளர்சிதை மாற்ற நோயாகும், இதனால் விழித்திரை, கண்ணாடி, லென்ஸ் மற்றும் பார்வை நரம்பு உட்பட கண் சார்ந்த உறுப்புகள் பாதிக்கப்படுகிறது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேவை
எந்தவிதமான நோய்க்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தான் தீர்வாக அமைகிறது. குறிப்பாக நீரிழிவு நோய் வந்தால் நீரிழிவு ரெட்டினோபதியைத் தடுக்க ஒருவர் தங்கள் இரத்த சர்க்கரை அளவுகள், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம்.
புகைப்பிடிக்கக் கூடாது மதுப் பழக்கம் கூடாது
புகைபிடித்தல், மது அருந்துதல் மற்றும் உடல் செயல்பாடு ஆகியவை பார்வையில் ஏற்படும் மாற்றங்களுடன் தொடர்புடையவை என்று ஆய்வுகள் காட்டுகின்றன. புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களைத் தவிர்த்து உடல் ஆரோக்கியத்தை பேணுவது நீரிழிவு ரெட்டினோபதி ஏற்படாமல் தடுக்கும்.
மாத்திரை விழுங்கியதும் சீக்கரம் பலன் கிடைக்க எளிய டிப்ஸ்..!
கண் பரிசோதனையை வழக்கமாக்கிடுங்கள்
ஒரு நீரிழிவு நோயாளி உங்கள் இரத்த சர்க்கரை அளவைப் பொறுத்து ஆறு மாதங்கள் அல்லது மூன்று மாதங்களுக்குள் வழக்கமான கண் பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். கண்கள் தொடர்பான நீரிழிவு சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிதல் பார்வை பாதிப்பைத் தடுக்கலாம்.