Weight Gain : ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிப்பது எப்படி?

First Published Oct 8, 2022, 7:01 PM IST

உடல் எடையை குறைப்பது எவ்வளவு கடினமோ, அதேபோல் ஆரோக்கியமான முறையில் எடையை அதிகரிப்பதும் கடினம் தான். இதனால் எடையை அதிகரிப்பதற்கு டயட் திட்டமும், சரியான உணவுத் தேர்வு முறையும் மிக அவசியம். அதிக கலோரிகளை கொண்ட, அதேநேரம் பதப்படுத்தப்பட்ட மற்றும் ரிஃபைண்ட் செய்யப்பட்ட உணவுகளை உண்ணாமல் இருக்க வேண்டியதும் அவசியம். எடையைக் கூட்டும் சில உணவுகளை இங்கு காண்போம்.
 

அரிசி உணவுகள்

அரிசி உணவுகளில் அதிகளவில் கார்போஹைட்ரேட் மற்றும் அதிக கலோரிகளும் இருக்கிறது. மேலும், புரதம் மற்றும் நார்ச்சத்தும் மிதமான அளவில் உள்ளது. ஒரு கப் அளவு அரிசி உணவில், 200 கலோரிகள் வரை பெற முடியும்.

மீன் உணவுகள்

மீன் உணவுகளில் தேவையான அளவு புரதங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்களும் இருக்கின்றன. இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு உடலின் தசை வளர்ச்சியும் மேம்படும். உடல் தேறாமல் ஒல்லியாகவே இருப்பவர்கள், கொழுப்புச்சத்து அதிகம் நிறைந்த சால்மன் மற்றும் மத்தி ஆகிய மீன் வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்வது நல்லது.

சுவையான கேரள வாழை இலை மீன்! செய்வது எப்படி?

முட்டை

முட்டையில் அதிகளவு புரதச்சத்து, கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளும் இருக்கிறது. குறிப்பாக காலை உணவில் முட்டையை சேர்த்துக் கொண்டால், அது ஒரு நாள் முழுக்கத் தேவையான ஆற்றலை வழங்குவது மட்டுமல்லாமல் கலோரிகளையும் அதிகரிக்க உதவுகிறது. உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், ஸ்நாக்ஸ் நேரங்களில் முட்டையை எடுத்துக் கொண்டால் எடையை அதிவேகமாக அதிகரிக்க முடியும்.

Egg 65 : சிக்கன் 65 தெரியும். முட்டை 65! தெரியுமா?

அவகேடா

அவகேடோவில் நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும், ஆரோக்கியமான கொழுப்புகளும் நிறைந்துள்ளது. இதனால் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என நினைப்பவர்கள், அவகேடோவை மற்ற உணவுகளுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

Home Remedies : அடிக்கடி தும்மல் வருதா? அப்போ இதை ட்ரைப் பன்னிப் பாருங்கள்!

சிவப்பு இறைச்சி

நம் உடலுக்குத் தேவையான மிகச்சிறந்த புரதச்சத்துக்கான மூலம் என சிவப்பு இறைச்சியை சொல்லலாம். உடல் தேறாமல் ஒல்லியாக இருப்பவர்கள், எப்படியாவது எடையை கூட்டியே ஆக வேண்டும் என நினைத்தால், தசையின் வளர்ச்சியை அதிகரிக்கச் சரியான தேர்வு இந்த சிவப்பு இறைச்சி மட்டும் தான். இவற்றில் உள்ள அதிகப்படியான புரதம் மற்றும் கொழுப்பு உங்களின் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

click me!