உங்கள் கணவரிடம் ‘அந்த’ படம் பார்க்கும் பிரச்னையுள்ளதா..?? அப்போ இதப்படிங்க..!!

Published : Oct 08, 2022, 06:38 PM IST

திருமணமாகி 10 வருடங்கள் கடந்துவிட்ட தம்பதிகளிடம் பொதுவாக பார்க்கப்படும் பிரச்னை, அவர்களிடையே பாலியல் இச்சை குறைந்து காணப்படுவது தான். குறிப்பாக வெளியுலக தொடர்புகளை அதிகம் வைத்திருக்கும் தம்பதிகளுக்கு, பாலியல் விருப்பம் சார்ந்த செயல்பாடுகள் மாறி விடுகின்றன. அதற்கு முக்கியமான காரணம் ஆபாசப் படங்கள் தான்.   

PREV
15
உங்கள் கணவரிடம் ‘அந்த’ படம் பார்க்கும் பிரச்னையுள்ளதா..?? அப்போ இதப்படிங்க..!!

வெளியுலகத் தொடர்புகளை அதிகம் கொண்ட ஆண்கள் பலர், 40 வயதை கடந்ததும் ஆபாசப் படங்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களுடைய மனைவிமார்களுக்கு அது பெரும் பிரச்னையாகி விடுகிறது. அந்த வகையில் ஆபாசப் படங்கள் மூலம் ஆர்கசம் அடையும் ஆண்களை மனைவி மார்கள் எப்படி தங்களுடைய வழிக்கு கொண்டு வருவது என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
 

25

இதுபோன்று கணவன்மார்கள் நடந்துகொள்வது மனைவிகளுக்கு குழப்பத்தையும் அச்சத்தையும் அதிகரிக்கும். தேவையான சமயங்களில் உடலுறவு இன்பம் கிடைக்கவில்லை என்றால் மனது விரக்தி அடையும். அதுவும் மிக நீண்ட நாட்கள் பாலியல் இன்பம் கிடைக்கவில்லை என்றால் கணவனால் நிராகரிக்கப்பட்டதாகவும், ஒருவித வெறுமை அதிகரித்து, எந்த விஷயத்துக்கும் மனதுக்குள் போதாமை வந்துவிடும். அதிலும் பெண்கள் நிராகரிப்பை சமாளிப்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.

உடன் பணியாற்றுபவரை ’டேட்’ செய்கிறீர்களா? உங்களுக்கான 5 வழிமுறைகள்..!!

35

ஆண்களின் நிராகரிப்பை மனைவிமார்கள் நீண்ட காலம் சமாளிப்பது என்பது பெரும் சவால் ஆனது. அதேபோல தனது பாலியல் இச்சை சார்ந்த உந்துதலையும் பெண்கள் அடக்கிக்கொள்ள வேண்டும் என்பது பெரும் காரியம். ஆனால் கணவனிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தை மனைவி கூர்ந்து கவனிக்க வேண்டும். எதற்காக அவரிடம் இந்த திடீர் மாற்றம்? தன்னிடம் அவர் கண்ட குறை என்ன? ஏதாவது சண்டையின் காரணமாக கணவனின் மனம் மாறிவிட்டதா? பாலியல் வேட்க்கை சார்ந்து ஏதேனும் முன்னுரிமை உள்ளதா? என்கிற கோணத்தில் சிந்திக்க வேண்டும்.

நெருங்கிய நண்பருடன் தனிமையில் இருக்க விரும்புகிறீர்களா? இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்..!!

45

அதையடுத்து ஆபாச படம் பார்ப்பதால் தனக்கு ஏற்படும் சங்கடத்தை குறித்து மனைவிமார்கள் கணவனிடம் வெளிப்படையாக பேச வேண்டும். அதேபோன்று ஆபாச படம் பார்க்கும் அளவுக்கு அவருடைய மனம் மாறியதற்கான காரணத்தை கேட்டறிவது நன்மையை தரும். அதுதொடர்பாக அவர் ஏதாவது பேசினால், எந்தவிதமான முன்முடிவு இல்லாமல் அவர் சொல்வதைக் கேளுங்கள் மற்றும் அவர்களுடைய கருத்துகளுக்கு செவிசாய்க்க வேண்டும்.

அதிக பாலியல் இச்சை கொண்ட பெண்களை எப்படி சமாளிக்கலாம்..? ஆண்களே தவறாமல் படிங்க..!!

55

இது மிகவும் தனிப்பட்ட விஷயம். இதுகுறித்து மனைவி முன்னெடுத்து பேசுவது கடினமாக தோன்றலாம். ஆனால் உங்கள் கோரிக்கை புறக்கணிக்கப்பட்டால் நம்பகமான குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரிடம் உதவியை நாடலாம். எனினும் இதுதொடர்பான உங்களுடைய உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளைக் கையாளுவதில் கவனம் செலுத்திட வேண்டும். 

Read more Photos on
click me!

Recommended Stories