தாம்பத்ய வாழ்க்கைக்கு இன்பம் சேர்ப்பது உடலுறவு. துணையை மகிழ்வித்து தானும் மகிழ்ந்து இன்புறுவது தான் உடலுறவின் வாயிலாக கிடைக்கும் உறவு பாலம். பெரும்பாலான தம்பதிகள் உடலுறவு சார்ந்த சந்தேகங்கள், கேள்விகள் மற்றும் அறியாமையை தங்களுக்குள் பேசிக்கொள்வது கிடையாது. இதனால் பல தாம்பத்யங்களில் சிக்கல் ஏற்படுகிறது. இதில் தான் கணவருக்கு பிரச்னை என்று பெண்களுக்கு தெரியவந்ததும், அவர்கள் மவுனமாகி விடுகின்றனர். பொதுவாகவே 40 வயதை கடந்துவிட்ட ஆண்களிடம் பாலியல் உறவு மீதான ஆர்வம் குறைந்து காணப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை. உறவில் புதுமையையும் இணைப்பையும் விரும்பக்கூடியவர்களாக பெண்கள் எப்போதும் இருக்கின்றனர். திருப்தி என்பது மனம் சார்ந்தது தான். அதனால் மனதில் இருக்கும் குழப்பத்தை தெளிவுப்படுத்திவிட்டாலே, இன்பமான இல்லறம் உருவாகும்.
உடலுறவுக்கு தயாராகும் நேரம்
நீங்கள் எதுபோன்ற சூழலில் உடலுறவுக்கு தயாராகுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். திருமணமாகி நீண்ட ஆண்டுகளாகி விட்டால், மனைவி தாராளமாக கணவனிடம் இதுகுறித்து வெளிப்படையாக பேசலாம். இதில் தயங்குவதற்கு என்று எதுவும் கிடையாது. கணவன்மார்கள் தங்களுடைய பிரச்னையை வெளியில் சொல்லாமல் இருந்தாலும், மனைவி தான் அதை உடைத்து கேட்க வேண்டும். பாலியல் சார்ந்த பிரச்னைகள் அல்லது குழப்பங்களை துணையை தவிர வேறு யாரிடமும் பேச முடியாது.
தாம்பத்யத்தில் பிடித்ததை செய்யுங்கள்
நீண்ட ஆண்டுகளான தம்பதிகளிடம் பாலியல் உறவு சார்ந்த பிரச்னைகள் பரவலாக பார்க்க முடிகிறது. கணவர் உடலுறவில் விருப்பமில்லாமல் ஈடுபட்டாலோ அல்லது திருப்தி அடையாமல் இருந்தாலோ, அவருக்கு பிடித்ததை நீங்கள் செய்யலாம். இத்தனை வருட தாம்பத்யத்தில் அவருக்கு என்ன பிடிக்கும் என்பதை பலரும் அறிந்துவைத்திருக்க முடியும். ஒருவேளை உங்களுக்கு அதில் தயக்கமிருந்தால், உடலுறவு முடிந்ததும் மகிழ்ச்சி அடைந்தீர்களா என்று கணவரை கேளுங்கள். அதை தொடர்ந்து உங்கள் கணவர் ஏதாவது சொன்னால், அதையடுத்து பிரச்னையை சுமூகமாக பேசி தீர்த்துவிடுங்கள்.
கணவரை ஆழ்ந்து கவனியுங்கள்
உங்களின் கணவரின் நடவடிக்கையில் மாறுதல் தெரிந்தால், உடலுறவின் போது அவரை ஆழ்ந்து கவனிக்க துவங்குங்கள். அதையடுத்து அவருக்கு கிளிர்ச்சியூட்டும் செய்கைகளை மேற்கொள்ளுங்கள். அது அவருக்கு பிடித்திருந்தது என்றால், அப்படியே உறவை தொடரவும். ஒருவேளை பிடிக்கவில்லை என்றால், பாலியல் முன்விளையாட்டுகளுடன் உறவை முடித்துக்கொள்ளவும். இதை அப்படியே தொடர்ந்து வருவதன் மூலமாக, சில நாட்களில் கணவர் பழைய நிலைக்கு திரும்பிவிடுவார். அதையடுத்து நீங்கள் உறவை தொடரலாம்.
உடலுறவுக்கு பின் கடைப்பிடிக்க வேண்டிய 5 கட்டளைகள் இதுதான்- தெரிந்துகொள்ளுங்கள்..!!
புத்தகத்தை படித்து புதிய விஷயங்களை செய்யலாம்
உடலுறவில் பெண்களுக்கு புதுமையான விஷயங்கள் பிடிக்கும். கணவன் மனைவி இருவருக்கும் திருப்தி கொடுக்கும் வகையில் 550 வகை பொசிஷன்கள் உடலுறவில் உண்டு. அதுசார்ந்த புத்தகங்களை படித்து பெண்கள் தெளிவுபெறுவது, தாம்பத்யத்துக்கு இன்பம் சேர்க்கும். உறவில் ஆண்கள் குறைவாக நாட்டம் காட்டும் போது, பல்வேறு பொசிஷன்களுடன் உடலுறவை மேற்கொண்டால் ஈடுபாடு அதிகரிக்கும். நிச்சயமாக பல்வேறு பொசிஷன்கள் கொண்டு உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் மனைவிக்கும் கணவருக்கும் நிகழ்வு நிறைவாக அமையும்.
விந்து வெளியேறுகையில் ரத்தம் கசிந்தால் என்ன செய்வது?
பேச்சுவார்த்தையும் தீர்வை எட்ட உதவும்
பாலியல் முன் விளையாட்டு செய்தும், பல்வேறு பொசிஷன்கள் கொண்டும் உறவு மேற்கொண்டபோதிலும் கணவருக்கு திருப்தி இல்லை என்றால், மனம் விட்டு பேசுங்கள். சிறிது நாட்கள் உறவு கொள்வதை விடுத்து, கணவருக்கு பிடித்த மற்ற விஷயங்களை செய்துகாட்டுங்கள். இதன்மூலம் உங்களுடைய ஆரம்பக்கட்ட காதல் வாழ்க்கையை, நீங்கள் மீண்டும் மறுவாக்கம் செய்வது போன்ற நிலை உருவாகும். அப்போது உங்கள் கணவனிடம் பிரச்னையை கேட்டறிந்து தீர்வை ஏற்படுத்த முயலுங்கள். முடிந்தால் மருத்துவரின் ஆலோசனையைக் கூட பரிந்துரை செய்யுங்கள். இதுபோன்ற நகர்வுகள் கணவருக்கு உறுதுணை புரியும்.