உச்சக்கட்டத்தை நெருங்கவிடாத விறைப்புத்தன்மை பிரச்சனையா? காரணமும் தீர்வும்

First Published | Jan 14, 2023, 6:37 PM IST

இன்றைய காலக்கட்டத்தில் ஆண்கள் சந்திக்கும்  முக்கியமான பிரச்சனையாக விறைப்புத்தன்மை உள்ளது. அதன் காரணங்கள் குறித்து இத்தொகுப்பில் காணலாம். 

விலங்குகளை போல மனிதர்களுக்கு உடலுறவு வெறும் இனப்பெருக்க செயல் அல்ல. காதல் மட்டும் இல்லாமல் காமத்தாலும் இன்பம் கண்டவர்கள்தான் மனிதர்கள். எனவே தான் உடலுறவு குறித்த சிக்கலால் விவாகரத்து வரை பிரச்சனை நீளுகிறது. அதில் ஆண்கள் சந்திக்கும்  முக்கியமான பிரச்சனையாக விறைப்புத்தன்மை உள்ளது. உடலுறவின் போது ஆணுறுப்பு விறைப்பதில் சிலருக்கு ஏற்படும் சிக்கலின் காரணம் குறித்து இங்கு காணலாம். 

உணவு பழக்கம் 

ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படுவதற்கு உணவு பழக்கம் முக்கிய காரணமாக உள்ளது.  அதிகமான கொழுப்புச் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் வருகிறது. வீக் எண்ட் ஆனால் துரித உணவுகளுடன் பார்ட்டி, ஆனால் உடற்பயிற்சியோ எள் அளவும் செய்வதில்லை. உணவுகள் எடுத்து கொள்வதை விட அதன் மூலம் கிடைக்கும் ஆற்றலை கிரகிப்பது அவசியமாக உள்ளது. போதிய உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவும் இல்லாதவர்கள் உடலில் அதிக கொழுப்புச்சத்து சேரும். 

Tap to resize

erectile dysfunction

கொழுப்பால் நேரும் கொடுமை! 

உடலில் அதிக அளவு கொழுப்புச்சத்து சேரும் போது ரத்த குழாய்களில் கொழுப்பு படிகிறது. இதனால் ரத்த குழாய்கள் குறுகி ரத்த ஓட்டத்தில் சிக்கலை உண்டு பண்ணுகிறது. இப்படியாக ஆணுறுப்பிற்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் பிரச்சனை ஏற்படுவதால் விறைப்பு தன்மை கோளாறு உருவாகிறது. உங்களுடைய பார்ட்னருடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் போது இப்படி விறைப்புத்தன்மை சிக்கல் ஏற்பட்டால், மருத்துவரை அணுகி தீர்வு காணுங்கள். 

இதையும் படிங்க: இறுக்கமான உள்ளாடை அணியும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை உண்டாகுமா? விந்தணு பாதிப்பு அபாயம்!

கொலஸ்ட்ரால் பிரச்சைக்கு தீர்வு 

அதிகப்படியான கொலஸ்ட்ரால் பிரச்சனையால் விறைப்புத்தன்மை கோளாறு ஏற்படுபவர்களுக்கு ஆரோக்கியமான உணவு பழக்கம் மாற்றத்தை கொடுக்கும். கொலஸ்ட்ரால் அளவை குறைவாக கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலமும், சரியான உடற்பயிற்சி செய்வதன் மூலமும் இந்த பிரச்சனை சரியாகலாம். கொலஸ்ட்ராலை கட்டுக்குள் கொண்டு வரும் உணவுகளை உண்பதால் ஆணுறுப்பில் ஏற்பட்ட இரத்தக்குழாய் சேதங்கள் மெதுவாக சரியாகலாம்.  இது ஆரம்ப நிலை பிரச்சனைக்கு மட்டுமே தீர்வாக இருக்கலாம். நீண்ட நாள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகி தீர்வு காணுங்கள். 

இதையும் படிங்க: பெண்களை மயக்கும் இந்த முத்தங்கள் பத்தி தெரியுமா?

ஆரோக்கியமான உணவு பழக்கம் 

நீங்கள் போதை பொருள்களுக்கு அடிமையாக இருந்தால் அதனை கைவிடுவது முக்கியமான விதி.  நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.  பூண்டு, வெந்தயம், பாதாம் போன்ற சத்து மிகுந்த விதைகள், பீன்ஸ், சால்மன் மீன், பழங்கள், காய்கறிகளை அதிக அளவில் சாப்பிட்டு வர வேண்டும். அதிக கொழுப்பு காணப்படும் இறைச்சி உணவு வகைகள், வெண்ணெய், நெய், கேக் போன்றவற்றை உண்ணாமல் தவிர்க்க வேண்டும். 

ஆரோக்கியமின்மை! 

இதய நோய், ரத்தக்குழாயில் அடைப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, அதிக உடல் எடை தூக்கமின்மை, குறைவான டெஸ்டோஸ்டிரோன் சுரப்பு, பர்கின்சன் நோய் சில வகையான புற்று நோய்கள், விரை வீக்கம் போன்றவையும் விறைப்புத்தன்மையில் பிரச்சனையை உண்டாக்கலாம். இதற்கான சிகிச்சைகளை முறையாக எடுத்துக் கொள்ளும்போது விறைப்புத்தன்மை பிரச்சனை குணமாக வாய்ப்பு உண்டு. மனம் தளராதீர்கள். 

இதையும் படிங்க: உடலுறவு வேண்டாம்னு விலகினால் இவ்வளவு பிரச்சனையா?

Latest Videos

click me!