புரதம் நம் உடலுக்கு தேவையான மிக முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். சிக்கனில் புரதம் அதிகமாகவே இருக்கிறது. மேலும் வைட்டமின்கள், தாதுக்கள் இதில் நிறைந்துள்ளன. கோழி இறைச்சியை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி அடையும், சர்க்கரை நோய், இதய நோய் ஆபத்தை குறைக்கும்.
ஆனால் சிக்கனை அதிகமாக சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதுவும் குறிப்பாக ப்ராய்லர் கோழி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதற்கு பதிலாக நாட்டுக்கோழி சாப்பிடலாம். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நாட்டு கோழியில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடல் எடையை குறைக்க உதவும்.