High Blood Pressure : வெறும் 'பிபி' மாத்திரைகள் போதாது!! இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் 6 வழிகள் இதோ!!

Published : Jan 02, 2026, 01:28 PM IST

உயர் இரத்த அழுத்தத்தை இயற்கை முறையில் கட்டுக்குள் வைக்க உதவும் சில பயனுள்ள குறிப்புகள் குறித்து இந்த பதிவில் காணலாம்.

PREV
17
High Blood Pressure

தற்போது பெரும்பாலானோர் உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயர் இரத்த அழுத்தத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அந்த வகையில், உயர் இரத்த அழுத்தத்தை இயற்கை முறையில் கட்டுக்குள் வைக்க உதவும் எளிய மற்றும் பயனுள்ள குறிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

27
உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் :

உடல் எடையை கட்டுக்குள் வைப்பது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க மிகவும் பயனுள்ள வழியாகும். உடல் எடை அதிகரித்தால் இரத்த அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும். எனவே உடல் எடையை குறைப்பது மூலம் இரத்த அழுத்தத்தை கணிசமாக குறைத்து விடலாம்.

37
ஆரோக்கியமான உணவு :

இரத்த அழுத்தத்தை குறைக்க ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுங்கள். இதற்கு முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். கொலஸ்ட்ரால் குறைவாக உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.

47
தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் :

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள். உதாரணமாக வேகமாக வாக்கிங் செல்லுதல், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை குறைந்தது 30 நிமிடங்களாவது செய்யுங்கள். இவற்றை தொடர்ந்து செய்வதை வழக்கமாக்கி கொண்டால் உயர் ரத்த அழுத்தம் குறையும்.

57
உப்பை குறைக்கவும் :

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க சாப்பிடும் உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். 2,300 மி.கிராமுக்கு குறைவாக உப்பை ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ள முயற்சி செய்யவும். அதேசமயம் உயர் இரத்த அழுத்தமுள்ளவர்கள் 1800 மில்லி கிராம் அளவு மட்டுமே எடுக்கவும்.

67
காபிக்கு 'நோ' சொல்லுங்க!

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் காபி குடிக்க கூடாது. காபியில் இருக்கும் காஃபின் இரத்த அழுத்தத்தில் உயர்வை ஏற்படுத்தும். வேண்டுமானால் அளவோடு காபி குடிக்கலாம்.

77
நல்ல தூக்கம் அவசியம் :

நல்ல தூக்கம் உயர் இரத்த அழுத்தத்துடன் தொடர்புடையது. ஆகவே ஒரு நாளைக்கு 7-9 மணி நேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் உயர் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

மேலே கூறிய குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories