கோழி கல்லீரல் vs ஆட்டுக்கல்லீரல்: எது சிறந்தது?

Published : Jan 23, 2025, 05:09 PM ISTUpdated : Jan 23, 2025, 05:17 PM IST

Chicken Liver and Mutton Liver : கோழி கல்லீரல் மற்றும் ஆட்டுக்கல்லீரல் இரண்டும் ஆரோக்கியமானவை. ஆனால் எதில் அதிக நன்மைகள் உள்ளன என்பதை இங்கே காணலாம்.   

PREV
15
கோழி கல்லீரல் vs ஆட்டுக்கல்லீரல்: எது சிறந்தது?
Chicken Vs Mutton Liver

அசைவ உணவு சமைக்கும்போது, கல்லீரலை வாங்கி சமைத்து, உண்பவர்கள் பலர் உள்ளனர். குறிப்பாக கோழி கல்லீரலின் ருசியை அறிந்திடாத அசைவ விரும்பிகள் இருக்க மாட்டார்கள். 

அதே போல் ஆட்டுக்கறி விரும்பி உண்ணுபவர்களும் அதன் கலீரலை குழம்பாக வைத்து சாதத்துடன் சுவைக்கிறார்கள். ஆட்டின் கலீரலில் ஏராளமான தாதுக்கள், ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே இது கோழியின் கலீரலை விட அதிக ஆரோக்கியம் என்பது உங்களுக்கு தெரியுமா? இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

25
Chicken Liver Health Benefits

கோழி கல்லீரலின் நன்மைகள்: 

கோழி கல்லீரலில் உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து உள்ளது. நம் உடலில் இரத்த அணுக்களை அதிகரிக்க கல்லீரலை சாப்பிடலாம். இது இரத்த சோகை வராமல் தடுக்கிறது. இரும்புச்சத்துடன், வைட்டமின் ஏ, பி12, ஃபோலேட்டுகளும் இதில் உள்ளன. கல்லீரல் சாப்பிடுவது உங்கள் கண் பார்வையை அதிகரிக்கும். உங்கள் தசைகளை சரிசெய்யும் புரதமும் கல்லீரலில் உள்ளது. கல்லீரல் சாப்பிடும்போது ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கிடைக்கின்றன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் எளிதில் தொற்று நோய்கள் வராமல் தவிர்க்கலாம். சரும பராமரிப்புக்கு உதவும் ஊட்டச்சத்துக்களும் உள்ளன. 

O+ ரத்த வகையை சேர்ந்தவர்கள் எப்படி பட்டவர்கள் தெரியுமா?

35
Mutton Liver

ஆட்டுக்கல்லீரலின் நன்மைகள்:

 இதில் வைட்டமின் பி12 உள்ளது. இதை அடிக்கடி சாப்பிட்டால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். உங்கள் அறிவாற்றலை அதிகரிக்க ஆட்டுக்கல்லீரலை சாப்பிடலாம். நரம்பு மண்டலம், எலும்புகள், பற்களின் பராமரிப்புக்குத் தேவையான தாதுக்கள் ஆட்டுக்கல்லீரலில் உள்ளன. கோழி கல்லீரலைப் போல ஆட்டுக்கல்லீரலிலும் இரும்புச்சத்து இருப்பதால் இரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிடலாம். உடற்பயிற்சி செய்யும்போது தசைகள் பாதிக்கப்படும். அதை சரிசெய்யும் சக்தி ஆட்டுக்கல்லீரலில் உள்ள புரதத்திற்கு உள்ளது. இந்த கல்லீரலிலும் வைட்டமின் ஏ, ஃபோலேட்டுகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. 

45
Which is Best

எது சிறந்தது? : 

கோழி கல்லீரலை விட ஆட்டுக்கல்லீரல் மிகவும் நல்லது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். அதில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளனவாம். நாம் இரண்டையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கல்லீரலில் கொழுப்பு அதிகமாக இருப்பதால் மிதமாக சாப்பிட வேண்டும். 

மாரடைப்பு அபாயத்தை தவிர்க்க தினமும் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்!

55
Avoid

யார் சாப்பிடக்கூடாது? : 

அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை, சிறுநீரகப் பிரச்சனை, தசை சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆட்டுக்கல்லீரலை மருத்துவரின் ஆலோசனை பெற்று சாப்பிட வேண்டும். கோழி கல்லீரலை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே சாப்பிடுவது நல்லது.  ஆனால் தினமும் சாப்பிட வேண்டாம் என கூறுகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories