
மாதவிடாய் பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் வரும் ஒரு விஷயமாகும். இத்தகைய சூழ்நிலையில், பெண்களுக்கு வரும் பொதுவான பிரச்சினை எதுவென்றால், அது ஒழுங்கற்ற மாதவிடாய் தான். இது oligomenorrhea என்று அழைக்கப்படுகிறது. ஒழுங்கற்ற மாதவிடாய் என்பது மாதவிடாய் ஒவ்வொரு மாதமும் சரியாக வராமல், தள்ளிப் போவதாகும். அதாவது, ஒருசில பெண்களுக்கு மாதவிடாய் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே வரும். இன்னும் சில பெண்களுக்கு ரெண்டு மூன்று மாதங்கள் ஆனாலும் வருவதில்லை.
அதிகப்படியான மன அழுத்தம், கவலை, பயம், பதட்டம், ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன்கள் சமநிலை மாற்றம், எடை இழப்பு, மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் போன்ற பல காரணங்களால் இந்த பிரச்சினை ஏற்படுகின்றது. எனவே இந்த பிரச்சனையை சரி செய்ய பலர் மருத்துவமனைக்கு சென்று அங்கு கொடுக்கும் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால், அவை ஐந்தாறு மாதங்கள் மட்டுமே நீடிக்கும். இதனால் பணம் செலவானது தான் மிச்சம். இத்தகைய சூழ்நிலையில் ஒழுங்கற்றம் மாதவிடாய் பிரச்சனையால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்றால், சில உணவுகள் சாப்பிடுவதன் மூலம் அந்த பிரச்சினையைச் சரி செய்து விடலாம் தெரியுமா? மேலும் அந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உங்களது ஒழுங்கற்ற மாதவிடாய் சரி செய்யப்படும் மற்றும் சீக்கிரமாகவே வரும். அது என்னென்ன உணவுகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: பிரீயட்ஸ் நேரத்துல வாக்கிங் போலாமா? பல பெண்கள் அறியாத தகவல்!!
பப்பாளி:
பப்பாளி சாப்பிட்டால் பீரியட்ஸ் சரியான முறையில் வரும் என்று அனைவரும் அறிந்ததே. முன்கூட்டியே பீரியட்ஸ் வருவதற்கு இது சிறந்த தேர்வாகும். பப்பாளி கருப்பையில் சுருக்கங்களைத் தோண்டி பீரியட்ஸ் வருவதற்கு உதவும். எனவே உங்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனை இருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு முறை நன்கு பழுத்த பப்பாளி சாப்பிடுங்கள். அதை நீங்கள் பழமாகவோ அல்லது ஜூஸாகவோ கூட சாப்பிடலாம்.
இஞ்சி:
இஞ்சியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது பல உடல்நல பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. எனக்கு தெரியுமா இஞ்சியில் பீரியட்ஸ் ஓட்டத்தைத் ஒன்றும் பண்புகள் உள்ளன. இஞ்சி அமிலத்தன்மை கொண்டது என்பதால் இதை நீங்கள் முறையாக எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் இஞ்சியை டீயுடன் அல்லது தேனில் கலந்து சாப்பிடலாம். இல்லையெனில் இஞ்சி சாறுடன் சிறிதளவு தேன் கலந்து கூட குடிக்கலாம். பீரியட்ஸ் வரும் முன் வெறும் வயிற்றில் இஞ்சி தண்ணீர் குடித்தால் மாதவிடாய் ஒழுங்காக வரும்.
மாதுளை:
பீரியட்ஸ் வருவதை தூண்டுவதற்கு மாதுளை பழம் பெரிதும் உதவியாக இருக்கும். குறிப்பாக மாதுளை பழத்தை நீங்கள் அதன் வெண்மை நிற தோளுடன் சேர்த்து சாப்பிடுவது ரொம்பவே நல்லது. ஏனெனில் இது பீரியட்ஸ் வலியை குறைக்கும். பீரியட்ஸ் வரும் முன் அதாவது, 10-15 நாட்களுக்கு முன் ஒரு நாளைக்கு மூன்று முறை மாதுளை பழம் சாப்பிடுங்கள் அல்லது அதை ஜூஸாக போட்டு குடியுங்கள். அப்போதுதான் பீரியட்ஸ் ஒழுங்காக வரும்.
கற்றாழை:
கற்றாழை குளித்து தன்மை உடையது இது உடல் சூட்டை தணிக்க உதவும். பொதுவாக கற்றாழையை சரும பராமரிப்பு மற்றும் முடி வளர்ச்சிக்கு தான் பயன்படுத்துவோம். ஆனால் அது ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையையும் சரிசெய்யும் தெரியுமா? இதற்கு சிறிதளவு கற்றாழை ஜெல்லுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலை உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு வந்தால், ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினை சரியாகி, பீரியட்ஸ் ஒழுங்காக வரும்.
இதையும் படிங்க: இளவயது பூப்பெய்தல்: காரணங்களும், எதிர்கால சிக்கல்களும்!!
வைட்டமின் சி பழங்கள் மற்றும் காய்கறிகள்:
வைட்டமின் சி உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவை அதிகரித்து மாதவிடாய் ஒழுங்காக வருவதை தூண்டும். இது கர்ப்பப்பை சுருக்கங்களை தூண்டி, ரத்தப்போக்கின் அளவை அதிகரிக்க செய்யும். எனவே பீரியட்ஸ் ஒழுங்காக வருவதற்கு சிட்ரஸ் பழங்கள், தக்காளி, கிவி, ப்ராக்கோலி போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்களது தினசரி உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
எள்:
எள் மாதவிடாயை சீக்கிரமே வர தூண்டும் என்று நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அது சூடான தன்மை கொண்டது என்பதால் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளாமல் மிதமான அளவில் மட்டுமே சாப்பிடுங்கள். எனவே, உங்களுக்கு மாதவிடாய் வரும் 15 நாட்களுக்கு முன் தொடர்ந்து எள் சாப்பிடுங்கள். உங்களுக்கு விருப்பமான வழியில் எள் சாப்பிடுங்கள். அதுவும் ஒரு நாளைக்கு இரண்டு முறை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் குறைந்த அளவில் மட்டுமே என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவை தவிர வெந்தயம், பெருஞ்சீரகம், சீரகம், கொத்தமல்லி விதை, செலரி போன்ற உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம்.