உடல் எடையை குறைக்கும் டீடாக்ஸ்! மஞ்சள், சீரகத்தால் இத்தனை நன்மைகளா!

Published : Jan 23, 2025, 11:25 AM IST

சீரகமும் மஞ்சளும் நம் அன்றாட உணவுகளில் அங்கம் வகிக்கும் முக்கியமான மசாலா பொருள்கள். பல நூற்றாண்டுகளாக நம் இந்திய சமையலில் அகற்ற இயலா மசாலாக்கள் என்றே சொல்லலாம். ஆனால் இந்த சீரகம், மஞ்சளை கலந்து தயாரிக்கும் டீடாக்ஸ் தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் எடுத்து வருவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் அநேகம். அவற்றில் 5 முக்கிய காரணங்களை விரிவாக பார்க்கலாம்.  

PREV
15
உடல் எடையை குறைக்கும்  டீடாக்ஸ்! மஞ்சள், சீரகத்தால் இத்தனை நன்மைகளா!
Indigestion

பொதுவாகவே சீரகம் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு உதவும் வைட்டமின்கள், தாதுக்கள், மற்றும் ஆக்சிஜனேற்றிகள் அதிகம் இருக்கின்றன. இந்த டீடாக்ஸ் ட்ரிங்கை காலையில் எழுந்தவுடன் வெறும்வயிற்றில் எடுத்து வருவதால்  சோர்வுத் தன்மை, வாய்வு பிரச்னைகள், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், குமட்டல் போன்ற உடல் உபாதைகள் கட்டுக்குள் வந்துவிடும். அதற்கு முக்கியமான காரணம், நமது உடலில் சேரும் க்ளூக்கோஸ், கொழுப்பு மற்றும் கார்போஹேட்ரேட்டுகளை புரத சத்தாக மாற்ற உதவுகிறது. இதனால் செரிமான பிரச்னைகள் சரியாக முக்கிய பங்காற்றுகிறது.

25
weight loss

தினமும் இந்த சீரகம் மஞ்சள் டீடாக்ஸை எடுத்து வருவது உடல் எடையை குறைப்பதற்கும், கட்டுக்குள் வைத்திருப்பதற்கும் பேருதவி செய்கின்றது. இயல்பாகவே மஞ்சள் மற்றும் சீரகத்துக்கு உடலில் சேரும் கொழுப்புகளை கரைக்கும் தன்மை இருப்பதால், இந்த டீடாக்ஸ் பானத்தை எடுத்து வருவதால் உடலின் வயிற்று பகுதி, தொடை பகுதிகளில் சேரும் கொழுப்புகள் குறைகின்றது. அதோடு இந்த பானத்தை தொடர்ந்து எடுத்து வரும்போது, அடிக்கடி ஏற்படும் பசி உணர்வும் கட்டுக்குள் வருவதால், எடை குறைப்பதையும் எளிதாக்குகிறது.

35
Instant glow to face

இயல்பாகவே மஞ்சள் வயதான தோற்றத்தை எடுத்துகாட்டுவதை தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள், அலர்ஜிகளை குணப்படுத்துவதில் மஞ்சளின் மருத்துவ குணம் பிரமிக்கத்தக்கது. அதே போல இந்த மஞ்சளுக்கும் சீரகத்துக்கும் உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை உண்டென்பதால், இந்த டீடாக்ஸ் பானத்தை தொடர்ந்து எடுத்து வர, உடலிலுள்ள நச்சுகள் வெளியேறி முகம் நல்ல பொலிவையும் புத்துணர்வையும் அடைகிறது. இந்த டீடாக்ஸில் கால்சியம், பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற வேதி பொருள்கள் இருப்பதால் முகத்துடன் சேர்த்து முடிக்கும் பலனளிக்கிறது. தலைமுடி வலுவாய் இருப்பதற்கும், பொலிவுடன் இருப்பதற்கும் உதவுகிறது.
 

45
Controlling the cholesterol

உடலில் சேரும் கொழுப்புகள் கொலஸ்ட்ரோல் அதிகரிக்க காரணமாகின்றன. இவை அதிகமாகும் பட்சத்தில் இதயத்தின் சீரான செயல்பாட்டை தடுத்து உயிருக்கே ஆபத்தாகவும் மாறுகிறது. ஆனால் இந்த மஞ்சள் சீரக டீடாக்ஸ் பானத்தை தினமும் எடுத்து வருவது இரத்த நாளங்களை சீராக்கி, இரத்த அழுத்தத்தையும் சீராக்குகிறது. இதனால் இதயம் சார்ந்த பிரச்னைகள் வருவதையும் தடுக்க உதவுகிறது.
 

55
Good for anemia

மஞ்சள் மற்றும் சீரகத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. இதனால் இரத்த சோகை பிரச்னையை சரி செய்வதற்கு  அருமருந்தாகவும் இருந்து உதவுகிறது. இதனால் தொடர்சியாக இந்த டீடாக்ஸ் பானத்தை எடுத்து வருவதால், உடலில் ஹீமோக்ளோபின் அளவு அதிகமாவதுடன், உடல் வலுவற்றது போன்ற உணர்ச்சி, மயக்கம் ஆகிய பிரச்னைகளுக்கும் தீர்வாகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories