
உடலை ஆரோக்கியமாக வைக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். ஆனால் உங்களுக்கு தெரியுமா.. சில உணவுகள் முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. பொதுவாக அடர்த்தியான, நீளமான மற்றும் கருகருவென முடி இருக்க வேண்டும் என்று பெண்கள் அனைவரது கனவு. ஆனால், இன்றைய பிசியான வாழ்க்கையால் தலைமுடியை சரியாக பராமரிக்க முடியாமல் போகிறது. இதற்காக சிலர் விலையுயர்ந்த பலவகையான பொருட்களை பயன்படுத்துகிறார்கள் ஆனால் அவற்றால் எந்த பயனுமில்லை. ஆனால், ஒரு சில உணவின் மூலம் முடியின் ஆரோக்கியத்தை ஓரளவுக்கு மேம்படுத்த முடியும் தெரியுமா? ஆம், நல்ல முடிவு வளர்ச்சிக்கு தினமும் சில உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். எனவே, முடி வளர்ச்சி உதவியாக இருக்கும் சில உணவுகளை பற்றி இப்போது இங்கு பார்க்கலாம்.
முட்டை:
முடியின் வளர்ச்சிக்கு புரதம் மிகவும் அவசியம். எனவே இதற்கு முட்டை சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் முட்டை புரதத்தின் சிறந்த மூலமாகும். நீங்கள் தினமும் காலை ஒரு அவித்த முட்டை சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சிக்கு உதவும்.
பச்சை இலை காய்கறிகள்:
உங்களது பலவீனமான முடிக்கு பச்சை இலை காய்கறிகள் உயிர் கொடுக்கும். எனவே உங்களது உணவில் தினமும் கீரை சேர்த்துக் கொள்ளுங்கள். கீரையில் இரும்பு சத்து நிறைந்துள்ளன. உடலில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படும் எனவே முடியின் வேர்களில் இருந்து வலுப்படுத்த தினமும் கீரை சாப்பிடுங்கள்.
சிட்ரஸ் பழங்கள்;
முடியை வலுவாக்க சிட்ரஸ் பழங்கள் மிகவும் அவசியம் எனவே நெல்லிக்காய், ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இவற்றில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது முடி வேகமாக வளர உதவும்.
கேரட்:
முடி வேகமாக வளர தினமும் ஒரு கிளாஸ் கேரட் ஜூஸ் குடியுங்கள். இதில் வைட்டமின் சி போதுமான அளவில் உள்ளதால், இது முடியை ஆரோக்கியமாக வைக்க பெரிதும் உதவுகிறது.
இதையும் படிங்க: முடி நீளமா வளர.. சின்ன வெங்காயத்தோட இந்த '1' எண்ணெய் சேர்த்து தேய்ச்சு பாருங்க!!
அவகேடா:
இந்த பழத்தில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. எனவே தினமும் காலை இந்த பழத்தை சாப்பிடுங்கள். மேலும் இந்த படத்தில் இருக்கும் கொழுப்பு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
பார்லி:
பார்லியில் இரும்பு மற்றும் தாமிரம் நிறைந்துள்ளது. இவை முடியை வலுப்படுத்த உதவுகிறது எனவே தினமும் காலை பாரலியை கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால் முடி வேகமாக வளரும்.
இதையும் படிங்க: கொத்து கொத்தா முடி கொட்டுதா? நீங்க சாதாரணமா பண்ற இந்த பழக்கத்தை விடுங்க!
வெந்தய தண்ணீர்:
வெந்தயத்தை அரைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இந்த வெந்தயத்தை ஊற வைத்த தண்ணீரை குடித்து வந்தால் கூட முடியின் ஆரோக்கியம் மேம்படும்.
இவற்றையும் சாப்பிடுங்கள்:
புரோட்டின் நிறைந்த உணவுகள் முடி வளர்ச்சிக்கு ரொம்பவே நல்லது என்பதால், முட்டை தவிர கோழி பால் தயிர், நட்ஸ்கள் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.