Protein Powder : பாடி பில்டர்களே உஷார்: புரோட்டீன் பவுடரால் அதிக ஆபத்து!

First Published Oct 18, 2022, 8:21 PM IST

ஜிம் பயிற்சிக்கு செல்வோரின் மாத செலவுகளில் மிக முக்கியமான ஒன்று தான் புரோட்டீன் பவுடர். 

இளவயது ஆண்கள் பலரும் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள ஆசைப்படுவார்கள். அதற்காக, பல ஆண்கள் ஜிம்முக்கு செல்வார்கள். ஜிம் பயிற்சிக்கு செல்வோரின் மாத செலவுகளில் மிக முக்கியமான ஒன்று தான் புரோட்டீன் பவுடர். மேலும் முட்டையின் வெள்ளைக் கரு, ஊறவைத்த கொண்டைக்கடலை, வேக வைத்த சிக்கன், முளைகட்டிய பயிர் மற்றும் சப்பாத்தி உள்ளிட்ட ஃபைபர் உணவுகள் இவர்களுக்கு முக்கிய உணவுகளாகும். இவற்றை தினசரி சாப்பிட்டு விட்டு 3 முதல் 5 வருடங்கள் தொடர்ந்து கார்டியோ மற்றும் வெயிட் லிஃப்டிங் பயிற்சிகள் செய்து வருவதன் மூலம், அவர்களுடைய வாழ்நாள் கனவான பாடி பில்டிங் சாம்பியன் பட்டத்தை வென்று விடலாம் என அயராது உழைப்பார்கள்.

புரோட்டீன் பவுடர் நிறுவனங்கள்

இன்றைய உலகில் பல்வேறு புரோட்டீன் பவுடர் நிறுவனங்கள், பாடி பில்டர்களை குறிவைத்து கடையைத் திறக்கின்றன. ஜிம் பயிற்சி கூடங்களுடன் ஒப்பந்தமிடும் இந்த பவுடர் நிறுவனங்கள், ஜிம் டிரெய்னர்களுக்கு கமிஷன் கொடுத்து, பயிற்சி செய்யும் பாடி பில்டர்கள் பலரையும் புரோட்டீன் பவுடரை வாங்க வைக்கின்றனர். கிட்டத்தட்ட 4,000 ரூபாய் முதல் 6,000 ரூபாய் மதிப்புள்ள இந்த பவுடரை பாடி பில்டர்கள் தினமும் ஒரு ஸ்கூப் சாப்பிட்டு ஜிம் பயிற்சி செய்தால், அர்னால்ட் போல கட்டு மஸ்தான் உடலைப் பெறலாம் என விளம்பரம் செய்யப்படுகிறது. இதனை நம்பி, புரோட்டீன் பவுடரை வாங்கி அதிக பணம் செலவழிக்கின்றனர் பாடி பில்டர்கள். 

ஆனால், உண்மையில் இந்த புரோட்டீன் பவுடர் உடலுக்கு  நல்லதா, இதனைத் தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுமா? என நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

புரோட்டீன் பவுடரில் செயற்கை இனிப்பு

புரோட்டீன் பவுடர்களில் புரதச்சத்து அதிகமுள்ள சோயாபீன்கள், அரிசி, உருளைக்கிழங்கு, முட்டை மற்றும் பால் ஆகியவற்றின் சத்துக்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சுவையை சேர்ப்பதற்காக ஆடட் சுகர் எனப்படும் செயற்கை இனிப்பு வகை சேர்க்கப்படுகிறது. நாம் அன்றாடம் சாப்பிடும் பல உணவுகளில் இது இருந்தாலும், இந்தப் பவுடரில் இருக்கும் செயற்கை இனிப்பு உடற்பருமனை அதிகரிக்கச் செய்கிறது என கூறப்படுகிறது. வென்னிலா மற்றும் சாக்லேட் உள்ளிட்ட ஃபிளேவர்களில் புரோட்டீன் பவுடர் தயாரிக்க பல இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன என்பது எத்தனை பேருக்கு தெரியும். பால் பொருட்கள் ஒவ்வாமை கொண்ட ஒருசிலருக்கு இந்த பவுடர் வயிற்று மந்தம், வாந்தி மற்றும் பேதியை ஏற்படுத்தும்.

எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள் 

புரோட்டீன் பவுடர் சம்பந்தமாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஓரு ஆய்வில் லெட், பாதரசம், காட்மியம் மற்றும் ஆர்சனிக் உள்ளிட்ட உலோக கலவைகள் உட்பட 134 வேதிப் பொருட்கள் அதில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பல வருடங்கள் காலம் உட்கொண்டால், உடலில் புற்றுநோய் கட்டி உண்டாகவும் வாய்ப்புள்ளது. இரத்த அழுத்தம் அதிகரிக்க கூடும் எனவும் இந்த ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன. அமெரிக்க உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, அந்தந்த பவுடர் நிறுவனங்களின் விருப்பத்திற்கு ஏற்ப புரோட்டீன் பவுடரைத் தயாரிக்க அனுமதி அளித்து விட்டது. வாடிக்கையாளர்கள் பவுடரில் உள்ள வேதிப்பொருட்களைப் பார்த்து வாங்க வேண்டும் வலியுறுத்தப்படுகிறார்கள்.

Milk: பாலுடன் சேர்த்து இந்த உணவுகளை சாப்பிடக் கூடாது? ஏன் தெரியுமா?

பழங்கள் மற்றும் காய்கறிகள்

ஆண்களுக்கு தினந்தோறும் 56 கிராம் புரதமும், பெண்களுக்கு 46 கிராம் புரதமும் தேவைப்படுகிறது. இதனைப் பெறுவதற்கு சிறந்த புரோட்டீன் பவுடர் எதுவெனத் தேடுவதற்கு பதில், அந்தப் பணத்தில் காய்கறிகள், பழங்கள், பால், முட்டை, முழு தானியங்கள், நட்xஸ் மற்றும் நாட்டுக்கோழி இறைச்சி வாங்கி சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான புரதம் கிடைக்கும். மேலும், பக்க விளைவுகளும் ஏற்படாது. ஆகவே, ஜிம் பிரியர்கள் இயற்கை உணவுகள் வழியாக புரதச்சத்தைப் பெற்று உடலை மெருகேற்றுவதே மிகச் சிறந்தது என மருத்துவர்கள் அறிவுரைக்கின்றனர். இதையும் மீறி புரோட்டீன் பவுடர் சாப்பிட்டுத் தான் ஆக வேண்டுமெனில் தினசரி குறைந்த அளவு சாப்பிடுவது தான் மிகவும் பாதுகாப்பானது.

click me!