சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் அளப்பரிய நன்மைகளைத் தரக்கூடிய ஒரு அற்புதமான பழம். இதில் கருப்பு, பச்சை மற்றும் சிவப்பு என பல வகைகள் உள்ளன. யார் எதைச் சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
உலகம் முழுவதும் மக்கள் விரும்பி சாப்பிடும் பழங்களில் திராட்சை முக்கியமானது. இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. சந்தையில் கருப்பு, பச்சை என இரண்டு வகையாக திராட்சைகள் அதிகம் கிடைக்கின்றன. அதில் எதை சாப்பிட்டால் அதிகப் பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
24
இரண்டு திராட்சைகளிலுமே வைட்டமின் சி, கே மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆனால், கருப்பு திராட்சையில் ஆந்தோசயனின், ரெஸ்வெராட்ரோல் போன்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம். இவை இதய ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு, இளமையாக வைத்திருக்கவும் உதவுகின்றன.
34
பச்சை திராட்சையில் கலோரிகளும் சர்க்கரையும் சற்றுக் குறைவு. இது உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்குச் சிறந்தது. கருப்பு திராட்சை அதிக இனிப்பாகவும், பச்சை திராட்சை லேசான புளிப்புடன் இனிப்பாகவும் இருக்கும். செரிமானத்திற்கும், உடலை நீரேற்றமாக வைக்கவும் இரண்டுமே உதவுகின்றன.
இரண்டுமே ஆரோக்கியத்திற்கு நல்லதுதான். உங்களுக்கு அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நீண்டகால ஆரோக்கியப் பலன்கள் வேண்டுமென்றால் கருப்பு திராட்சையைத் தேர்ந்தெடுக்கலாம். சர்க்கரை குறைவாக, லேசான புளிப்புச் சுவையுடன் வேண்டுமென்றால் பச்சை திராட்சை சிறந்த தேர்வு. எதுவாக இருந்தாலும், திராட்சையை அளவோடு சாப்பிடுவதுதான் நல்லது.