இன்றைய காலகட்டத்தில் கொல்ஸ்ட்ரால் பிரச்சனை, அதிக உடல் எடை பிரச்சனையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதைக் குறைக்க குறிப்பிட்ட உணவுக் கட்டுப்பாடுகள், உடற்பயிற்சி அவசியம். அதிலும் காலையில் சாப்பிடும் உணவில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். காலை உணவுதான் மூளை உணவாகும். அதை அதிக ஊட்டச்சத்துக்கள், குறைந்த கொழுப்பு இருக்குமாறு தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். இந்தப் பதிவில் உடலில் சேரும் அதிகப்படியான கொழுப்பைத் தவிர்க்க எந்த காலை உணவுகளை சாப்பிடுவது நல்லது என காணலாம்.
26
கீரை வகைகள்
கீரைகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை அதிகம் காணப்படுகின்றன. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவில் கீரையை சேர்த்துக் கொள்ளலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சுவிஸ் சார்ட் என சொல்லப்படும் முட்டைக்கோஸ் வகை கீரைகளை காலை உணவாக உண்ணலாம். கொழுப்பை அகற்ற உதவும் லெட்யூஸ் கீரையை உண்ணலாம். இதில் உள்ள வைட்டமின் 'சி', பீட்டா கரோட்டின் இதயத்தில் சேரும் கொழுப்பை அகற்ற உதவும். கேல் கீரையும் எடுத்துக் கொள்ளலாம்.
36
அசைவ உணவுகள்
காலை உணவில் சிக்கன் மார்பு பகுதி, வான்கோழி, மாட்டிறைச்சி, டோஃபு, மீன் ஆகிய புரதச்சத்து நிறைந்த உணவுகளை அளவாக உண்ணலாம். புரதச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிட்டால் பசி அடங்கும். தசைகள் வளர்ச்சிக்கும், மீட்சிக்கும் உதவும். அதிகமாக உண்பதைக் கட்டுப்படுத்த உதவும். எடை குறைய வழி வகுக்கும்.
தினமும் உணவில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கும் உணவுகளை உண்ண வேண்டும். அதை காலை உணவாக எடுப்பது நல்லது. பெர்ரி பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள் காணப்படுகின்றன. புளுபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி ஆகிய பழங்களை காலை உணவாக உண்ணலாம். இவை குறைந்த கலோரிகள் கொண்டவை. ஆனால் சுவை அபாரமாக இருக்கும்.
56
காய்கறிகள்
காலை உணவில் பச்சை காய்கறிகளையும் எடுத்துக் கொள்ளலாம். பீன்ஸ், பருப்பு வகைகள், கொண்டைக்கடலை ஆகியவற்றை காலை உணவிற்கு தேர்வு செய்யலாம். இதில் நார்ச்சத்தோடு புரதச்சத்தும் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்தும். செரிமானத்தைத் தூண்டும்.
66
பாதாம்-சியா விதைகள்
காலை வெறும் வயிற்றில் ஊறவைத்த பாதாம், வால்நட்ஸ், சியா விதைகள், ஆளி விதைகளை எடுத்துக் கொள்ளலாம். இதில் ஆரோக்கியமான கொழுப்புகள் காணப்படுகின்றன. இதில் உள்ள ஓமெகா -3 அமிலங்கள், புரதங்கள் , நார்ச்சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியமானது. பசியைக் குறைத்து உடலுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களைத் தரும். காலை உணவாக தயிரும் எடுக்கலாம். செரிமானம் மேம்படும்.