அடேங்கப்பா! வெறும் 2000 காலடிகள் வாக்கிங்ல இவ்ளோ நன்மைகள் இருக்கா? 

Published : Feb 22, 2025, 08:19 AM ISTUpdated : Feb 22, 2025, 08:22 AM IST

Walking Tips : நீங்கள் தினமும் 2 ஆயிரம் காலடிகள் நடந்தாலும் அதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெற முடியும். 

PREV
15
அடேங்கப்பா! வெறும் 2000 காலடிகள் வாக்கிங்ல இவ்ளோ நன்மைகள் இருக்கா? 
அடேங்கப்பா! வெறும் 2000 காலடிகள் வாக்கிங்ல இவ்ளோ நன்மைகள் இருக்கா?

நடைபயிற்சி என்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு  திறவுகோல் எனலாம். நாம் நடக்கும் ஒவ்வொரு காலடியும் நமக்கு நன்மை அளிக்கும். வேலைகளுக்கு நடுவே உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாமல் தவிப்போருக்கு நடைபயிற்சி சிறந்த பயிற்சியாக இருக்கும். 10 ஆயிரம் காலடிகள் நடந்தால் தான் உண்மையான ஆரோக்கியம் என்றில்லை. 2200 காலடிகளில் கூட குறிப்பிடத்தக்க நன்மைகளை பெற முடியும். 

25
தினமும் 2 ஆயிரம் காலடிகள் நடப்பதன் நன்மைகள்

பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் செய்த ஆய்வில் நாள்தோறும் 2,200 காலடிகளுக்கு மேல் நடப்பது  இதய நோய் ஆபத்தை குறைக்கிறது. மற்ற நோய்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை குறைத்து ஆயுளை அதிகரிக்கிறது. இதற்கு முன் செய்த ஆராய்ச்சிகளில் மிதமான நடை பயிற்சி இதய நோய்க்கான ஆபத்துகளை குறைப்பது உறுதியாகியுள்ளது. நடைபயிற்சிக்கு என எந்த தனிப்பட்ட உபகரணங்களும் தேவை இல்லை. உங்களிடம் சிறிது நேரம் இருந்தால் மட்டும் போதும். உங்களுடைய வயது, பாலினம், எடை ஆகியவற்றை பொறுத்து கணிசமான பலன்களை பெற முடியும். 

இதையும் படிங்க:  காலைல வாக்கிங் போறீங்களா? அதை விட 'இந்த' நேரம் நடப்பதால் பல மடங்கு நன்மைகள்!!

35
எப்படி நடக்க வேண்டும்?

நடைபயிற்சி செய்வதற்கு உங்களிடம் இருந்து ஆற்றல் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் உங்களுடைய வளர்ச்சிதை மாற்றம் அதிகரித்து உடல் எடை கணிசமாக குறைகிறது.  நடப்பதற்கு சில வரையறைகள் உண்டு.  நீங்கள் தினசரி இலக்கு காலடிகளை நடந்து முடிந்தாலும் அதிக நேரம் உட்கார்ந்து இருப்பது அதற்கான பலன்களை தடுக்கும். நீங்கள் அமர்ந்திருக்கும் நேரத்தை குறைப்பது அவசியம். நீண்ட நேரம் அமர்ந்து இருக்காமல் இடையிடையே எழுந்து குறுநடை போட்டு உங்களை உடல் செயல்பாடுகளுடன் இணைத்துக் கொள்வது அவசியம்.

இதையும் படிங்க:  அட! இரவில் வெறும் 10 நிமிட 'வாக்கிங்'..  இத்தனை நோய்களை விரட்டுமா? 

45
குறுநடை நன்மைகள்:

நீங்கள் ஒரே நேரத்தில் மணிக்கணக்காக நடக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. 1 மணி நேரத்திற்கு ஒரு முறை ஐந்து முதல் 10 நிமிடங்கள் குறுநடை நடப்பது நல்லது. நாள் முழுக்க அமர்ந்து இருப்பதை தவிர்க்க முப்பது நிமிடங்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து ஒரு குறுநடையை போடலாம். இதனால் உங்களுடைய ஆரோக்கியம் மேம்படும். உடலும் எப்போதும் செயல்பாட்டிலேயே இருப்பதால் நோய்கள் வரும் அபாயமும் குறைகிறது. 

55
நடைபயிற்சி மற்ற நன்மைகள்

நடைபயிற்சி உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இதனால் இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும்.  மனச்சோர்வு உள்ளவர்கள் தினமும் நடப்பதை பழக்கப்படுத்திக் கொண்டால் அவர்களுக்கு மனசோர்வு நீங்கி மனநிலை சீராகும் வாய்ப்புள்ளது. உடல் எடையை குறைப்பது, இதய நோய் அபாயத்தைத் தடுப்பது, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை நடைபயிற்சி உங்களுக்கு தருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories