வாழ்க்கையை மாற்றும் சைலண்ட் 'வாக்கிங்'- முக்கியத்துவமும் பலன்களும்!!
அமைதியாக நடப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவப் பகிர்வாக இங்கு காணலாம்.
அமைதியாக நடப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவப் பகிர்வாக இங்கு காணலாம்.
Silent Walking Benefits : உலகம் முழுக்க சைலண்ட் வாக்கிங் என்ற முறை டிரெண்டாகி வருகிறது. அப்படியென்றால் என்ன? எளிமையாக சொல்ல வேண்டுமெனில் 'அமைதியான நடைபயிற்சி'. பாடல்கள், பாட்காஸ்ட்கள், தொலைபேசி அழைப்புகள் என எதுவுமே இல்லாமல் அமைதியாக மனதை ஒருநிலைப்படுத்தி நடப்பது. மனதின் உள்ளிருந்து வரும் குரலை கேட்க அனுமதிப்பது. இப்படி நடப்பது வாழ்க்கையையே மாற்றும்.
காலையில் நடைபயிற்சி செல்வது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பதைத் தாண்டி மனதையும் அமைதியாக வைக்கும். மன ஆரோக்கியத்திற்கு கொஞ்சம் கவனம் கொடுக்க நினைப்பவர்கள் நடைபயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். அதுவும் அமைதியாக நடத்தல் என்பது மிகவும் நல்ல யோசனையாகும். நடைப்பயணத்திற்குச் செல்லும்போது கையில் ஹெட்செட், ப்ளுடூத் போன்றவை கொண்டு செல்லாமல் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். நடைபயிற்சியில் 'உங்களுடன் நீங்கள்' மட்டுமே என்பது தான் சைலன்ட் வாக்கிங்.
இதையும் படிங்க: சுகர் நோயாளிகள் எவ்வளவு தூரம் நடக்கனும்? நம்ப முடியாத பலன்கள்!!
மையோ என்பவர் முதல் முதலாக சைலன்ட் வாக்கிங் செல்லும்போது அவருக்கு தயக்கமாக இருந்ததாம். செல்போனை எடுக்காமல் இருக்க முடியுமா? ஆனால் முதல் இரண்டு நிமிடங்களுக்கு பின் அவருடைய குழப்பங்கள் தீர்ந்துள்ளன. பின்பு அவருக்கு தன்னால் அமைதியாக நடக்க முடியும் என்று ஒரு குரல் அவருக்குள்ளே கேட்டது போல இருந்ததாம். இந்த பிரபஞ்சமும், தன் உள்ளுணர்வின் கிசுகிசுக்களும் அவரிடம் வருவதை உணர்ந்துள்ளார். தன்னுடைய அமைதி நிலைதான் இந்த விஷயங்களை புரிய வைத்தது. தன்னுடைய எண்ணங்களை புரிந்து கொள்ள, மனத்தெளிவை பெற அமைதியாக நடப்பது உதவியதாக மையோ கூறினார்.
இதையும் படிங்க: வாக்கிங் போனாலே ரொம்ப மூச்சு வாங்குதா? அப்ப இதை உடனே கவனிங்க!!
மன அமைதிக்கு கவனத்தை ஒருங்கிணைக்க அமைதி வாக்கிங் உதவும். மூளையை சூழ்ந்துள்ள மூடுபனி நீங்கி புதிய யோசனைகள் பெருக்கெடுக்க அமைதி வாக்கிங் உதவுவதாகவும் மையோ கூறினார். அமைதியாக நடப்பதால் ஐம்புலன்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்கும். உங்களின் மனச்சோர்வை நீக்க இது உதவுகிறது. அமைதியாக நடந்தால் வேலைகளில் அதிகம் கவனம் செலுத்த புதிய ஐடியாக்களை கண்டுணர இந்த முறை உதவும். கல்வியில் மேம்பட விழிப்புடன் இருக்கும் தந்திரம் உங்களுக்கு வசப்படும்.
எந்நேரமும் செல்போனுடன் இருக்கும் இளைய தலைமுறையினருக்கு, அது இல்லாமல் நடப்பது கொஞ்சம் கடினமாகவும், புதிதாகவும் இருக்கலாம். ஆனால் நிச்சயம் நல்ல பலன்களை உணரமுடியும். குறிப்பாக கிரியேட்டிவாக செயல்பட நினைப்போர் இந்த முறையை பின்பற்றலாம்.