நம் சிரிப்பில் இவ்வளவு நன்மைகள் நிறைந்து இருக்கா? என்னவென்று பார்க்கலாம் வாங்க...!!

First Published | May 8, 2023, 8:31 PM IST

புன்னகையின் முக்கியத்துவம்  குறித்து பலருக்குத் தெரியாது. புன்னகையால் நம் உடலில் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை இப்பதிவின் மூலம் காணலாம்...
 

ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க நல்ல உணவு, உடற்பயிற்சி மட்டும் முக்கியமல்ல. மனநிலையும் முக்கியமானது. குறிப்பாக நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த சிரிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய வாழ்க்கைமுறையில் பார்ப்பதற்கே நேரமில்லை. மக்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை சிரிப்பது கடினம். முகம் சுளிக்கவோ அல்லது பதற்றமாகவோ நேரத்தைக் கழிப்பவர்கள் சிரிப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. 
 

சிரிப்பு நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானது. அதீத மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றால் நமது உடல் நலம் பாதிக்கப்பட்டால், நிதானமாகச் சிரித்தால் போதும். உங்கள் நோய்கள் அனைத்தும் குணமாகும். புன்னகைக்காக இப்போது சிரிப்பு சிகிச்சைகள் நடத்தப்படுகின்றன. உங்கள் நாள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், தினமும் 15-20 நிமிடங்கள் புன்னகைக்க மறக்காதீர்கள். சிரிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இங்கே...

Latest Videos


சிரிப்பின் நன்மைகள் என்ன? :

மன அழுத்தத்திற்கு சிறந்த மருந்து: 

நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது மனம் திறந்து சிரிக்கிறோம். இந்த புன்னகையால் என்ன நடக்கும் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் ஒவ்வொரு முறை சிரிக்கும்போதும் எண்டோர்பின் என்ற ஹார்மோன் வெளியாகும். எண்டோர்பின் என்ற ஹார்மோன் மன அழுத்தத்தைக் குறைக்கும் சக்தி கொண்டது. இந்த ஹார்மோனின் வெளியீட்டால் உங்கள் மனதை ரிலாக்ஸ் ஆக்கும். மனதில் ஒரு நல்ல உணர்வு எழுகிறது. நீங்கள் மன அழுத்தத்தால் அவதிப்பட்டால், அடிக்கடி சிரிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு: 

கரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் அறிவார்கள். அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பெறுவது மிகவும் அவசியம். சிரிப்பு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி பல கடுமையான நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. ஆரோக்கியமாக இருக்க தினமும் சிரிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். 

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும்: 

அடிக்கடி சிரிப்பது மற்றும் அதிகமாக சிரிக்க பழகுங்கள். ஏனெனில் சிரிப்பு உங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. சிரிப்பு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.
 

நல்ல உறக்கத்திற்கு உதவும் : 

தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் மனம் திறந்து சிரித்தால் தூக்கம் தானாக வரும். நீங்கள் இரவில் நன்றாக தூங்க முடியாதவராக இருந்தால், தினமும் ஒரு முறையாவது சிரிக்கப் பழகுங்கள். உங்களால் சிரிக்க முடியாவிட்டால், சிரிப்பு சிகிச்சையில் சேரவும். 

இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது: 

எப்பொழுதும் சிரித்தால் இதயம் வலுவாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். மாரடைப்பு பிரச்சனையில் இருந்து விலகலாம்.

இதையும் படிங்க: இந்த இரண்டு பொருட்களை சாப்பிட்டால் பாலுணர்வு அதிகரிக்குமாம்... தெரிஞ்சிக்க இதை படிங்க...!

பளபளப்பான சருமம் பெற: 

சிரிப்பு நமது தசைகளுக்குப் பயிற்சி அளிக்கிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகும். இது சருமத்தை பளபளப்பாக்கும். குறிப்பாக முகத்தின் அழகு கூடும்.

click me!