Tulsi Water : தினமும் வெறும் வயிற்றில் துளசி தண்ணீர்; சிறுநீரக கல் கூட கரையும்; எண்ணற்ற நன்மைகள்

Published : Nov 08, 2025, 02:02 PM IST

தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி நீர் குடித்து வந்தால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று இங்கு பார்க்கலாம்.

PREV
14
Benefits of Drinking Tulsi Water

மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது பொதுவான விஷயம். ஆனால், மழைக்காலத்தில் இந்த மாதிரியான பிரச்சனைகள் வருவதை விட அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது தான் சிறந்தது. இத்தகைய சூழ்நிலையில், மழைக்காலத்தில் வரும் பருவ கால தொற்று நோய்களை தடுக்க துளசி நீர் குடிப்பது சிறந்ததாகும். ஆமாங்க, தினமும் வெறும் வயிற்றில் துளசி நீர் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். இந்த பதிவில் தினமும் வெறும் வயிற்றில் துளசி நீர் குடித்து ல்வந்தால் கிடைக்கும் ஆரோக்கியம் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

24
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் :

துளசி நீரானது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் அற்புதமான பானமாகும். இதனால் பருவ கால தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கப்படுவோம்.

செரிமானத்தை மேம்படுத்தும் :

மழைக்காலத்தில் ஏற்படும் அசிடிட்டி, வாயு, வயிற்று உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகளை குறைக்க துளசி நீர் உதவுகிறது.

34
இரத்த சர்க்கரை அளவு :

துளசி நீரானது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்கும். குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் நன்மை பயக்கும்.

சரும பளபளப்பிற்கு..

துளசி நீரில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி, சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கும் மற்றும் முகப்பிரச்சினையும் குறைக்க உதவுகிறது.

மன அமைதி

நரம்புகளை அமைதிப்படுத்தும் பண்புகள் துளசியில் உள்ளன. மேலும் இது மன அழுத்தத்தை குறைத்து, நாள் முழுவதும் உற்சாகமாக வைக்க உதவுகிறது.

44
துளசி நீரை தயாரிப்பது எப்படி?

இதற்கு 7 முதல் 10 புதிய துளசிகளை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு கிளாஸில் தண்ணீர் ஊற்றி அதில் துளசி இலைகளை சேர்த்து தண்ணீர் பாதியாக வரும் வரை நன்றாக கொதிக்க விடுங்கள் பிறகு அந்த நீரை வடிகட்டி சூடாக இருக்கும் போது குடிக்கவும். வேண்டுமானால் இதனுடன் சிறிதளவு தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு :

துளசி நீர் ஆரோக்கியமானதாக கருதப்பட்டாலும் அதை அளவோடு எடுத்துக் கொள்வதுதான் நல்லது. அதுபோல நீங்கள் ஏதேனும் உடலநல பிரச்சனைக்கு மருந்துகள் எடுத்துக் கொண்டால் துளசி நீர் குடிக்கலாமா என்று ஒரு முறை மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.

Read more Photos on
click me!

Recommended Stories