இனிப்பாக, சுவையாக சாப்பிட வேண்டும். ஆனால் சுகர் ஏறக் கூடாது. குடலின் ஆரோக்கியமும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் வாழைப்பழம், பேரீச்சம்பழம் ஆகிய இரண்டில் எதை ஸ்நாக்காக எடுத்துக் கொண்டால் ஆரோக்கியத்திற்கு பெஸ்ட் என தெரிந்து கொள்ளலாம்.
வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 நிறைய உள்ளன. இது இரத்த சர்க்கரை அளவை மெதுவாகவே அதிகரிக்கும். பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அதிகமாக உள்ளன. ஆனால், வாழைப்பழத்தை விட பேரிச்சம்பழத்தில் சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகமாக இருக்கும். ஒரு நடுத்தர வாழைபழத்தில் சுமார் 105 கலோரிகள் இருக்கும், அதே சமயம் இரண்டு பேரிச்சம்பழத்தில் சுமார் 130 கலோரிகள் இருக்கலாம்.
27
இரத்த சர்க்கரை மேலாண்மை:
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு, கிளைசெமிக் குறியீடு (GI) முக்கியமானது. பழுத்த வாழைப்பழத்தின் GI சுமார் 51. இது மிதமான அளவு. பேரிச்சம்பழத்தின் GI வகையைப் பொறுத்து 42 முதல் 55 வரை மாறுபடும். இரண்டுமே மிதமான GI கொண்டவை என்றாலும், பேரிச்சம்பழத்தில் சர்க்கரை அதிகமாக இருப்பதால், அதை குறைவாக சாப்பிடுவது நல்லது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், வாழைப்பழத்தைச் சாப்பிடுவது பாதுகாப்பானது, ஏனெனில் அது இரத்த சர்க்கரையை மெதுவாகவே பாதிக்கிறது.
37
குடல் ஆரோக்கியத்தில் பங்கு:
குடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இரண்டு பழங்களுமே நல்லவை. வாழைப்பழத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உதவுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்துவதோடு, மலச்சிக்கலையும் தடுக்கிறது. பேரிச்சம்பழத்திலும் நிறைய நார்ச்சத்து உள்ளது. இது குடல் இயக்கத்தை சீராக்கி, குடல் நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆகையால், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த இரண்டு பழங்களுமே சிறந்தவை.
உடனே ஆற்றல் தேவைப்படுபவர்களுக்கு, குறிப்பாக உடற்பயிற்சிக்கு முன், இரண்டு பழங்களுமே சிறந்த தேர்வாகும். வாழைப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் மெதுவாக ஆற்றலை வெளியிடும், எனவே நீண்ட நேர உடற்பயிற்சிகளுக்கு ஏற்றது. பேரிச்சம்பழத்தில் உள்ள இயற்கையான சர்க்கரைகள் (குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ்) உடலுக்கு உடனடி ஆற்றலைத் தரும். அதனால், உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் விரைவான ஆற்றல் தேவைப்பட்டால் பேரிச்சம்பழம் ஒரு சிறந்த தேர்வாக அமையும்.
57
எடை மேலாண்மை:
எடை குறைப்புக்கு வாழைப்பழம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம், ஏனெனில் இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது வயிறு நிறைந்த உணர்வைத் தந்து, அதிகப்படியான உணவு உண்பதைக் கட்டுப்படுத்தும். எடை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு, வாழைப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளும், பேரிச்சம்பழத்தில் உள்ள அதிக சர்க்கரை மற்றும் கலோரிகளும் உதவும். இரண்டையும் பால் அல்லது நட்ஸ் உடன் சேர்த்து ஸ்மூத்திகளாக குடிப்பது எடை அதிகரிக்க நல்ல வழியாகும்.
67
குழந்தைகளுக்கு எது சிறந்தது, ஏன்?
இரண்டு பழங்களுமே குழந்தைகளுக்கு நல்லது. வாழைப்பழங்கள் மென்மையானவை, செரிமானத்திற்கு எளிதானவை, மேலும் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் கொண்டவை. அவை திட உணவுகளை ஆரம்பிக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை. பேரிச்சம்பழங்கள் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்தவை, ஆனால் அதிக சர்க்கரை உள்ளதால், அவற்றை மிதமான அளவில் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு பேரிச்சம்பழத்தை பியூரியாகவோ அல்லது நறுக்கியோ கொடுக்கலாம்.
77
எது சிறந்த தேர்வு?
வாழைப்பழம் மற்றும் பேரிச்சம்பழம் இரண்டுமே தனித்துவமான நன்மைகளைக் கொண்டுள்ளன. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வேண்டியவர்கள் அல்லது குறைந்த கலோரிகள் கொண்ட உணவை விரும்புவோருக்கு வாழைப்பழம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அதிக நார்ச்சத்து மற்றும் உடனடி ஆற்றல் தேவைப்படுபவர்களுக்கு பேரிச்சம்பழம் ஒரு நல்ல தேர்வாக அமையும். உங்கள் தனிப்பட்ட ஆரோக்கிய இலக்குகள் மற்றும் தேவைகளைப் பொறுத்து, இந்த இரண்டு பழங்களையும் உங்கள் உணவில் சரியான அளவில் சேர்த்துக்கொள்வது நல்லது. இரண்டையும் அளவோடு சாப்பிடுவதே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.