சிறுநீரக கல் எளிதில் கரைய வாரம் ஒரு முறையாவது வாழைத்தண்டு சட்னி செய்து சாப்பிடுங்க!

First Published | Mar 7, 2023, 6:48 PM IST

வாழைத்தண்டினை உணவில் சிறுநீரக கற்கள், நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை விரைவில் சரியாகும்.. அப்படிப்பட்ட வாழைத்தண்டினை வைத்து சட்னி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் தெரிந்து கொள்ளலாம்.

காலை உணவாக இட்லி, தோசைக்கு ஏராளமான சட்னி வகைகளை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். என்றேனும் வாழைத்தண்டு வைத்து சட்னி செய்துள்ளீர்களா? இல்லையா? அப்போ ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

வாழைத்தண்டினை உணவில் தொடர்ந்து எடுத்துக் கொண்டால், சிறுநீரக கற்கள், நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை விரைவில் சரியாகும். மேலும், இது அதிக உடல் எடையையும் குறைக்கும். அப்படிப்பட்ட வாழைத்தண்டினை வைத்து சட்னி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

சட்னி செய்வதற்கு:

வாழைத்தண்டு - 1 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 3
கறிவேப்பிலை - கொத்து
நல்லெண்ணெய் - 1 ஸ்பூன்
கல் உப்பு - 1/2 டீஸ்பூன்
புளி - 1 சிறிய துண்டு 

தாளிக்க :
கடுகு - 1/4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

சிக்கன் தந்தூரி சுவையை மிஞ்சும் காலிஃபிளவர் தந்தூரி! நீங்களும் இன்றே செய்து பாருங்க!

செய்முறை:

முதலில் வாழைத்தண்டை பொடியாக அரிந்து கொண்டு அதனை மோர் கலந்த தண்ணீரில் சேர்க்க வேண்டும். இப்படி செய்வதால் வாழைத்தண்டின் நிறம் மாறாமல் இருக்க உதவும்.தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி ,எண்ணெய் காய்ந்த பின்னர் அதில் துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து சிம்மில் வைத்து, பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும்.

Tap to resize

அடுத்தாக அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இப்போது வாழைத்தண்டினை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கடாயில் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி விட வேண்டும்.

இப்போது சிறிது புளி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு அடுப்பில் இருந்து கடாயை இறக்கி விட்டு ஆற வைத்துக் கொள்ள வேண்டும். கலவை ஆறிய பின் மிக்சி ஜாரில் சேர்த்து தேவையெனில் சிறிது தண்ணீர் தெளித்து கொரகொரவென அரைத்து ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை ஆகியவை சேர்த்து தாளித்து பின் சட்னியில் ஊற்றி பரிமாறினால் சத்தான வாழைத்தண்டு சட்னி ரெடி!

Latest Videos

click me!