உங்கள் கைரேகை சொல்லும், உங்களுடைய காதல் கதையை...!!

First Published | Mar 7, 2023, 4:44 PM IST

கைரேகை பலன்கள் குறித்து தெரிந்துகொள்வது பலருக்கும் விருப்பமான விஷயமாகும். ஆனால் பெரும்பாலான மக்களிடையே ஜோதிடத்தைக் காட்டிலும் கைரேகை பலன்கள் மீதான நம்பிக்கை குறைவாக உள்ளது. 

ஒரு நபரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய நுண்ணறிவைப் பெற அவரது உள்ளங்கையில் உள்ள ரேகைகளை படிக்கும் கலை தான் கைரேகை ஜோதிடம். இதற்கு கைரோமன்சி என்கிற பெயரும் உள்ளது. உங்களுடைய எதிர்காலம் மட்டுமில்லாமல், உங்களது மணவாழ்க்கை, காதலி/காதலன் உள்ளிட்ட அனைத்து விதமான அம்சங்களையும் கைரேகை கொண்டு தெரிந்துகொள்ளலாம். எனினும், இதை நிரூபிக்க அறிவியல் ஆதாரம் எதுவும் இல்லை. ஒரு நபரின் காதல் வாழ்க்கையைப் பற்றிய நுண்ணறிவைப் பெற, காதல் ரேகைகள் பகுப்பாய்வு  செய்யப்படுகின்றன. அதன்படி காதல் ரேகைகளில் பல்வேறு அம்சங்கள் குறித்து சில பொதுவான விளக்கங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

ரேகையின் நீளம்

உங்களுடைய உள்ளங்கையில் இருக்கும் நீண்ட ரேகை, உங்களுடைய தீவிரமான மற்றும் நீடித்த காதல் உறவை குறிக்கிறது. அதுவே மிகவும் ஆழமான ரேகையாக இருந்தால், உங்களுடைய துணையுடன் நீங்கள் ஆழமான உணர்ச்சி ரீதியான பிணைப்பை கொண்டிருப்பீர்கள் என்று சொல்லப்படுகிறது. அதுவே சற்று வளைந்து இருந்தால், மகிழ்ச்சியான மற்றும் நிறைவான காதல் வாழ்க்கையின் நல்ல அறிகுறியாகக் கருதப்படுகிறது, அதே நேரத்தில் ஒரே நேர் கோட்டை கொண்டிருப்பது உணர்ச்சி அல்லது காதல் இல்லாததைக் குறிக்கிறது. உள்ளங்கையில் உயரமாக அமைந்துள்ள ஒரு ரேகை விரல்களுக்கு இடையில் இருந்தால், உங்களுக்கு தீவிரமான காதல் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது. 
 

Tap to resize

காதல் ரேகைக்கு இடையில் நிறைய கோடுகள்

உள்ளங்கையில் காதல் ரேகை உள்ள பகுதியில் பல்வேறு கோடுகள் இருப்பதற்கும் ஜோதிடத்தில் பலன் கூறப்படுகிறது. அதன்படி ஒருவர் மீதான காதல் கிடைக்காமல் போய்விட்டால், அவர் எளிதாக மற்றொரு காதலை தேடுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஒருவேளை காதல் ரேகையின் மீது ஆங்காங்கே கோடுகள் இருந்தால், பல உறவுகளின் சாத்தியத்தைக் குறிப்பதாக புரிந்துகொள்ளப்படுகிறது. இது ஒருவருக்கு தான் சார்ந்துள்ள உறவில் அதிருப்தி அடைந்தால், அவர் மற்றொரு உறவைத் தொடர தயங்க மாட்டார் என்பதை குறிக்கிறது. 
 

காதல் ரேகையின் மீது பல்வேறு கோடுகள்

காதல் ரேகைக்கு மீது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோடுகள் இருந்தால், அந்த நபருக்கு பல்வேறு காதல் ஏற்படக்கூடும் என்பதை குறிக்கிறது. அதில் சில காதல்கள் வலுவாக இருக்கும் என்று கைரேகை பலன்கள் கூறுகின்றன. கோடுகள் எதுவும் குறிப்பாக வலுவாக இல்லாவிட்டால், அந்த நபருக்கு உறுதியான காதல் எதுவும் அமையாது என்று அர்த்தம். இதுபோன்ற கைரேகை கொண்டு நபருக்கு திருமண பந்தமும் நிலைக்காது என்று கைரேகை பலன்கள் கூறுகின்றன.

பெண்கள் மீது ஈர்ப்பில்லாத ஆண்களிடம் காணப்படும் 5 அறிகுறிகள்..!!

இருதய ரேகையுடன் தொடர்புடைய காதல் ரேகைகள்

ஒருவருக்கு காதல் ரேகை, இருதய ரேகையை நோக்கி வளைந்திருந்தால், அவர் தனிமரமாகவே இருப்பார். அவருக்கு திருமண வாழ்க்கை அமைந்தாலும், தனியாகவே வாழ வேண்டியிருக்கும். ஒருவேளை அந்த வளைவு சற்று மங்கலாக இருந்தால், அந்த நபர் திருமண வயதை அடையும் போது நாள்பட்ட நோய் பாதிப்பை சந்திக்க வேண்டி வரும். தொடக்கத்தில் கோடு V வடிவமாக இருந்தால், அவர் எந்த காதலிலும் நிரந்தரமாக இருக்கமாட்டார் என்று அர்த்தம். சூரிய ரேகையை வெறும் கோடு தொட்டால், செல்வந்தருடன் திருமணம் நடக்கும் வாய்ப்பு உண்டு. காதல் கோட்டில் கரும்புள்ளி இருந்தால், துணை இறக்கலாம்.
 

காதல் ரேகையில் திருமண பலன்

ஒரு முக்கியமான அம்சம் உள்ளது. எல்லோருக்கும் எப்போது திருமணம் என்று தெரிய வேண்டும். காதல் மற்றும் இதயக் கோடுகளுக்கு இடையிலான தூரத்தை அளவிடுவதன் மூலம் இதைக் கணக்கிடலாம். இதற்கு நிறைய பயிற்சி தேவைப்படும். உள்ளங்கை வாசிப்பின் அடிப்படையில் தகவல்களை வழங்கும்போது, ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் கைரேகை பலன்களை நம்புவது கிடையாது. ஜோதிடத்தை விடவும், கைரேகை பலன்கள் மீதான நம்பிக்கை பலரிடையே குறைந்து காணப்படுகிறது.
 

Latest Videos

click me!