காதலுக்கு மதம், பாலினம், வர்க்கம் என எந்த தடையும் இல்லாதது போலவே, வயதும் ஒரு தடையில்லை. ஆனால் திருமணமான பெண் வேறொருவரை காதலித்தால் சமூகத்தில் அதற்கு 'காதல்' என்று மட்டும் பெயரிடுவதில்லை. வெவ்வேறு பெயர்களும், அவமான சொல்களும் உண்டு. இங்கு சில விதிகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த விதியை மீறி வரும் காதலை.. நேரில் கண்ட மகன் செய்த காரியம் தெரிந்தால் வியந்து போவீர்கள். வாருங்கள் காணலாம்.
கணவன் இல்லாத பெண்கள் என்றாலே ஒரு சாரருக்கு கிள்ளுக் கீரைதான். சில ஆண்கள் மனசாட்சியே இல்லாமல் இவர்களை சீண்டுவர். அத்தனை கூசும் செயல்களையும் கடந்து தான் கைம்பெண்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த கதையில் வருபவரும் விதவைப் பெண் தான். அவருக்கு ஒரு மகன். இந்த பெண்ணிற்கு ஒரு ஆண் நண்பரும் இருந்திருக்கிறார். கணவனை இழந்து நிராதரவாக நின்றவருக்கு உதவிக்கரம் நீட்டியவர்.
தாயிடம் கேட்ட கேள்வி..!
கணவனை இழந்த அந்தப் பெண்ணிற்கு ஒரே ஆறுதல் தன் மகன் தான். ஒரு நாள் மகன் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்த பின் ஒரே அழுகை. என்னடா.. ஏன் அழுவுற என அந்த அம்மா கேட்க..மகனோ உனக்கு புரியாதுமா என சட்டென பதில் சொல்லியிருக்கிறான். பரவாயில்லை.. அம்மாகிட்ட சொல்லு என அவர் விடாப்பிடியாக கேட்க... கோபம் கொப்பளிக்க உன்னால தீர்த்து வைக்க முடியாத பிரச்சனை என மகன் பதிலுக்கு வார்த்தைகளால் வெடித்திருக்கிறார்.
Americans prefer singleness to marriage
மறக்க முடியாத 'அந்த காட்சி'
எப்போதும் நம்மை கோபத்தில் கொன்று புதைக்காத அப்பாவி நபர்களிடத்தில் தானே நமக்கு கோபம் வரும்... அந்த சின்ன பையனும் அம்மாவிடம் அப்படிதான் கோபத்தை கொட்டியிருக்கிறான். ஆனால் தாயன்பு என்ன செய்யும்? எல்லாவற்றையும் கேட்டு மழுங்கி மீண்டும் மகனிடம் போய் தான் நிற்கும். மறுபடியும் அந்த அம்மா மகனிடம் கேட்க... "என்னோட லவ்ல பிரச்சனை.. உனக்கு லவ் பத்தி என்ன தெரியும்"என வார்த்தைகளால் தாயை துளைத்திருக்கிறான். உடைந்து போனவர் வெளியே சென்றுவிட்டார். மகனுக்கு அதன் பிறகுதான் தன் வார்த்தைகளின் வீரியம் புரிந்துள்ளது.
இதையும் படிங்க: என் கணவர் ஏமாத்தினத கண்டுபுடிச்சுட்டேன்..அதை மறைக்க துடிக்கிறார், இப்ப மன்னிச்சு ஏத்துக்கலாமா? வாசகிக்கு பதில்
அம்மாவை வீட்டில் காணவில்லை. அவருக்கு யார் இருக்கிறார்... மகன் நேராக தாயின் ஆண் நண்பர் வீட்டை நோக்கி ஓடியிருக்கிறான். அங்கு கண்ட காட்சியை அவனால் நம்பவே முடியவில்லை. அவனுடைய தாய் அந்த ஆண் நண்பர் தோளில் சாய்ந்திருந்தார். தான் அங்கிள் என்றழைக்கும் அந்த ஆளின் தோளில் ஏன் அம்மா? பல கேள்விகள் மனதில் ஓட அதிர்ந்து போனான் அந்த பையன். இந்த குழப்பத்தின் காரணமாக வீட்டுக்கு போக விரும்பாமல் தெருவில் திரிகிறான். அவனுடைய அம்மா அவனை கண்டுபிடித்து வீட்டுக்கு அழைக்கிறாள். கூடவே அந்த ஆண் நண்பரும் நிற்க...பையனுக்கு தலைக்கு மேல் கோவம் வருகிறது. அப்போது மகன் கையை பிடித்து அவள் வீட்டுக்கு அழைக்க, கோபத்தில் தாயின் கையை தட்டிவிட்டு நடந்தான் மகன்.
ஆனால் அம்மாவின் நடத்தை மீது எந்த பழியும் போட அவன் விரும்பவில்லை. தன் காதலை போலவே ... தனக்கான தேவைகளை போலவே தாய்க்கும் இருக்கும் என்பதை மெல்ல புரிந்துகொண்டான். சம்பவம் நடந்த கொஞ்ச நாள் பிறகு நிதானமாக யோசித்துவிட்டு தாய்க்காக மகன் ஒரு முடிவு எடுக்கிறான். அந்த ஆண் நண்பரை சந்தித்து பேசும்போது தான், அவர் தன் தாயின் முன்னாள் காதலன் என தெரிய வருகிறது.
இவர்களுக்குள் ஏதோ கருத்து மோதல் வந்து பிரிந்த பிறகுதான் வேறொருவரை மணந்துகொண்டுள்ளார் என்பதை அறிந்து கொண்டான். அதாவது குடியால் அழிந்து போன இவனுடைய அப்பா தான் அது. சின்ன வயதில் கணவனை இழந்து வாழாமலே போன அம்மா மீது அவனுக்கு இரக்கம் பொங்கி வழிந்தது. அந்த ஆண் நண்பர் 90ஸ் கிட் போல.. இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்யாமல் வருடக்கணக்காக தன் காதலை மனதில் சுமந்தபடியே வாழ்ந்திருக்கிறார்.